Showing posts with label tamil devotional stories. Show all posts
Showing posts with label tamil devotional stories. Show all posts

Wednesday, April 25, 2012

STR சசித்திர கதைகள்

வணக்கம் நண்பர்களே,


பழைய இதழ்களை புரட்டிக் கொண்டு இருக்கையில் கண்ணில் பட்ட ஒரு வித்தியாசமான சித்திரக்கதை இதழ் பற்றி இந்த பதிவு. STR சசித்திர கதைகள் - இப்படி ஒரு சித்திரக்கதை இதழ் கேரளத் திருநாட்டின் கொச்சின் நகரில் இருந்து 1986 களில் வெளிவந்து இருக்கிறது. சித்திரக்கதைகள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் சரித்திரக்கதைகள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது என்ன சசித்திர கதைகள்?. சத்தியமாக எனக்கு தெரியாது. இப்படி ஒரு தமிழ் வார்த்தை உள்ளதா என்ன?

STR publications நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்ட இந்த இதழின் 9வது இதழின் அட்டைப்படம் மற்றும் சில ஸ்கேன்கள் உங்கள் பார்வைக்கு. இதழ்களை பார்க்கையில் அமர் சித்திரக்கதா இதழ் வடிவில் வெளியிட முயற்சி செய்து இருப்பார்கள் போல. சித்திரங்களும் கதையும் சுமார் ரகம் மட்டுமே. STR சசித்திர கதைகள் இதழ் ஆங்கிலம், இந்தி, மலையாளம், பெங்காலி மொழிகளில் வெளிவருவதாக கூறுகிறார்கள்.

                                                              அட்டைப்படம்:

                                                      கதை முதல் பக்கம்
 

                                                           ஆசிரியர் பகுதி



சம்ஹாரம் கதைச்சுருக்கம் - நான்கு ஆண்களுக்குப் பிறகு பெண் குழந்தையான பவானி ஒரு தீவிர தேவி பக்தை. பவானியின் நான்கு அண்ணிகளுக்கும் பவானியை பிடிக்கவில்லை. சதி மேல் சதிகள் பல செய்து அவர்கள் பாவானியின் அண்ணன்கள் மூலமாகவே அவளை கொன்று விடுகிறார்கள். ஆனால் தேவியின் அருள் மூலமாக பவானி உயிர்த்தெழுகிறாள். சதிகார அண்ணிகள் தண்டிக்கப்படுகிறார்கள். பவானி வெட்டப்பட்டு உயிர்த்தெழுந்த இடம் மக்களால் பவானியம்மா கோவில் என்ற பெயரில் வழிபாட்டு தளமாக இன்றும் விளங்குவதாக முடிக்கிறார்கள்.

                                                    எதோ ஒரு தொடர்கதை

அடுத்த இதழ் பற்றிய விளம்பரம்: இந்த விளம்பரத்தைக் கொண்டு இவ்விதழ் பக்தி கதைகளை மட்டும் வெளியிடவில்லை எனத்தெரிகிறது. (விடுதலைப்புலி என்ற தலைப்பில் வேறு எதாவது கதை படித்துள்ளீர்களா?)

இந்த வித்தியாசமான சித்திரக்கதை இதழ் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே...

(update: நண்பர் விஸ்வா அளித்த தகவல் படி STR சசித்திரக்கதைகள் மொத்தம் 27 இதழ்கள் வெளிவந்ததாகத் தெரிகிறது)




Friday, January 8, 2010

அமுத நிலையத்தின் புராண சித்திரக்கதைகள் (Devotional comics by Amutha)

          புராண சித்திரகதைகள் தமிழ் சித்திரக்கதை உலகிற்கு புதியது அல்ல. பைக்கோ நிறுவனத்தின் அம்ர் சித்திர கதா, கதை மலர், சிறுவர்மலரின் தொடர்கதைகள் மற்றும் ஆனந்தியின் சில சித்திரகதைகள் புராண கதைகளை சித்திரகதை வடிவில் வழங்கும் வழக்கத்தை சிறப்பாக செய்திருந்தன. இதில் புகழ் பெற்ற சித்திரகதை ஓவியர்களை பலரின் கைவண்ணத்தை ஒருங்கே பார்க்கும் அனுபவத்தை கதைமலர் கொடுக்கிறது. இந்த வரிசையில் சென்னையின் அமுத நிலையம் சமயகுரவர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்திரக்கதை வடிவில் வெளியிடத்தொடங்கி இருக்கின்றனர்.
இதன் முதல் புத்தகம் திருஞானசம்பந்தர் பற்றியதாகும். 2003ல் வெளியிடப்பட்ட இப்புத்தகத்தின்  அட்டைபடங்களும் இன்ன பிற பக்கங்களின் ஸ்கேன்களும் உங்கள் பார்வைக்கு...







இதில் இரண்டாவது புத்தகமான "திருநாவுகரசர் திவ்ய சரித்திரம்" இதழை இந்த புத்தக கண்காட்சியில் வாங்கினேன்.


சமயகுரவர்களின் வரிசையில் இது இரண்டாவது புத்தகம். முதல் நூல் திருஞானசம்பந்தர் பற்றியது. இந்த "திருநாவுகரசர் திவ்ய சரித்திரம்" நூல் திருவிடைமருதூர் என். இராசேந்திரன் என்பவரின் தனிபட்ட கைவண்ணத்தில் முழு இதழும் உருவாகி உள்ளது.

 டின் டின் புத்தகங்களின் size ல் ஒரு தமிழ் காமிக்ஸை பார்ப்பதே குதூகலம் தான் . புத்தகத்தை 125 ரூபாய் என்ற விலையில் வாங்கும் போது சற்று நெருடலாக தான் இருந்தது. ஆனால் இதழை படிக்கும் போது அந்த நெருடல் குறைந்து விடுகிறது.




எனக்கு புராண கதைகளின் மேல் அந்தளவு ஈர்ப்பு இல்லையென்றாலும் சித்திரக்கதை என்பதால் சீக்கரம் படித்து விட்டேன். கதை சுருக்கம் இதுதான்
 
திருநாவுகரசரின் பெற்றோர்கள் மற்றும் அவரது தமக்கையாருக்கு நிச்சியக்கப்பட்ட மாப்பிள்ளை ஆகியோர் போர் ஒன்றில் மரணமடைந்து விடுகிறார்கள். (சோழர்காலத்து கதை) தனித்து விடப்பட்ட குழந்தைகளில் அக்கா (திலகவதி) சைவ மதத்திலும் தம்பி (திருநாவுகரசர்) சமண மதத்திலும் பற்று கொண்டு வாழ்கின்றனர். தம்பியை சைவ மதத்திற்கு மாற்ற முயலும் திலகவதி அம்மையார் சிவனுடைய உதவியோடு வெற்றி பெறுகிறார். தற்போது முழுமையான சிவபக்தராக இருக்கும் திருநாவுகரசர் மீது சோழ அரசனின் பகைமை பார்வை படுகிறது. இதற்கு அப்புறம் தசாவதாரம் திரைபடத்தில் வரும் காட்சிகள் இந்த கதையிலும் வருகின்றன. (திரைபடத்தில் அரசர் - சைவ மதம், அம்பி - சமண மதம், இந்த கதையில் அப்படியே உல்டா. ஒரே மதத்தினுள் இத்தனை பகைமையா? )



கதையில் வரும் தசாவதார காட்சிகள்...

சிவனுடைய அருளால் சோழ அரசனின் அனைத்து இக்கட்டுகள்லிருந்து மீள்கிறார் திருநாவுகரசர். அதன் பிற்கு நெடிய பயனங்கள் மேற்கொண்டு சைவ மதத்தின் அருமைகளை இனிய தமிழ் பாடல்களாக வழங்குகிறார். கதையின் இறுதியில் ரம்பை ஊர்வசி போன்றோரின் கிலுகிலுப்பான சில காட்சிகளும் இடம் பெறுகிறது. அவர்களின் திருநாவுகரசரை காமத்தில் வீழ்த்தும் முயற்சி படுதோல்வியில் முடிவதோடு கதையும் முடிகிறது.


தேவலோக கன்னிகளின் முயற்சிகள்

 
இன்னும் சில சிறந்த ஓவியங்கள்
 
இந்த இதழில் குறிபிடத்தகுந்த விஷயம் திருவிடைமருதூர் என். இராசேந்திரன் அவர்களின் சித்திரங்கள் தான். சித்திரங்கள் அட்டகாசம். அவ்வப்போது தலை காட்டும் பெயிண்டிங் ரக ஓவியங்கள் இன்னும் அருமை. சில இடங்களில் ஓவியர் செல்லம் அவர்களின் சாயல் தெரிகிறது. அமுத நிலயம் வெளியிட்டிருக்கும் மற்றோரு சித்திரக்கதையான திருஞானசம்பந்தர் புத்தக கண்காட்சியில் கிடைக்கவில்லை. நேரடியாக பதிப்பகத்தில் கிடைக்க கூடும்.


நண்பர்கள் பதிவை படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்களேன்...

Friday, November 6, 2009

கதை - ஆனந்தி, படம் - வினு (Story - Ananthi, Art - Vinu)

வணக்கம் தோழர்களே,

இருபது வருடங்களுக்கு முன்பு குழந்தைகளாக இருந்தவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இனிமையான தமிழிலே வளமான தரத்திலே கோகுலம், பூந்தளிர், சிறுவர்மலர் போன்ற பல தமிழ் சிறுவர் பத்திரிக்கைகளை படிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்திருக்கிறது. அந்த இனிமையான யுகத்தின் இறுதி காலகட்டங்ளில் படிக்கும் பழக்கத்தை ஆரம்பித்திருந்த நானும் அதிர்ஷ்ட்டசாலி தான். தற்போதய குழந்தைகள் 'பவர் ரேஞ்சர்' தொடர் மற்றும் பல வீடியோ கேம்களுக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். அந்த இனிமையான கலகட்டங்களில் பல சித்திரகதைகளை கொடுத்திட்ட ஆனந்தி - வினு கூட்டணியின் படைப்புகளை பற்றியே இந்த பதிவு.



என்னிடம் இருக்கும் 1985 ~ 1990 இடைப்பட்ட காலங்களில் வந்த பல கோகுலம் புத்தகங்களின் நடுபக்கங்களை அலங்கரிப்பது ஆனந்தி - வினு கூட்டணியின் படைப்புகளே. 1986ல் அழ.வள்ளியப்பா அவர்கள் ஆசிரியராக இருந்தார். இந்த கூட்டணி எப்போது ஆரம்பித்தது, எவ்வளவு சித்திர கதைகளை படைத்திருகிறார்கள் போன்ற விபரங்கள் என்னிடம் துல்லியமாக இல்லை. கிட்டதட்ட 100 கதைகளுக்கு மேல் படைத்து இருப்பார்கள் என் எண்ணுகிறேன்.

நான் படித்திட்ட அனைத்து கதைகளும் சரியாக 16 பக்கங்கள் கொண்டவையே. சில பக்கங்கள் முழு வண்ணத்திலும் சில பக்கங்கள் இரட்டை வண்ணத்திலும் இருக்கும். பெரும்பாலும் புராண மற்றும் சரித்திர கதைகளையே உருவாக்கிருகிறார்கள். சரித்திர கதைகளை நிறைய எழுதியதற்கு ஆனந்தி அவர்கள் தமிழின் முதன்மையான சரித்திர கதை எழுத்தாளர் ஒருவரின் புதல்வியாக இருப்பது கூட காரணமாக இருக்கலாம். ஆம் நண்பர்களே ஆனந்தி அவர்கள் பொன்னியின் செல்வன் படைத்த எழுத்தாளர் கல்கியின் புதல்வியாகும். (அவர் தனது தந்தை பற்றி கொடுத்த பேட்டியை படிக்க இங்கே கிளிக்கவும்)

ஆனந்தி அவர்கள்

சரித்திர கதைகளை 16 பக்கங்களில் அடக்கி அனைவருக்கும் புரியும் படியாகவும் சுவையாகவும் கொடுப்பது என்பது அவ்வளவு எளிய காரியம் அன்று. அதனை திறம்பட செய்திருகிறது இந்த கூட்டணி. அதற்கு ஓவியர் வினுவின் பங்களிப்பும் முக்கியமானது. வினு அவர்களின் ஓவிய தரம் பற்றி யாரும் சொல்ல தேவையில்லை. கல்கி போன்றவர்கள் வர்ணணையில் கொண்டுவரும் அழகினை அப்படியே ஓவியத்தில் பதித்து விடுவார். ஆக இப்படி ஒரு தரமான எழுத்தாளர் மற்றும் ஒரு ஓவியர் சேர்ந்து அழகான சித்திரகதைகளை படைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அனைத்து கதைகளும் சிறுவர்களுக்கு உபயோகமான சரித்திர தகவல்களையும் தேவையான் அறிவுரைகளையும்  கொடுக்கும் கதைகள்.
இங்கு கோகுலத்தி வெளிவந்த சில சித்திரகதைகளின்  பக்கங்களை பார்க்கலாம்.
தயமந்தி சுயவரம்




ஆனந்தி - வினு அவர்களின் கூட்டணியின் படைப்புகள் பூந்தளிரின் இறுதி காலகட்ட இதழ்களில் வெளிவந்தன. இவை வெளிவரும் போது பூந்தளிர் ஆசிரியராக இருந்தவர் நமது வாண்டுமாமா.

மந்திர பொம்மை

சிந்துபாத்

மந்திர அம்புகள்

பதிவை படித்துவிட்டு கருத்துகளை கூறுங்களேன்....

Wednesday, July 8, 2009

கதை மலர் - ஒரு அறிமுகம் (KATHAI MALAR - AN INTRO)

Hello friends, after a gap chitrakathai provides a new post on Tamil comics.

Kathai malar – An introduction:
KATHAI MALAR is series of books published by Ramakrishna math, Mylapore chennai. Totally 22 books have come under this series. Out of that 16 books are duel color and 5 books are in full color.









Each book contains 8 ~ 10 comic formatted stories and each story contains 4 ~ 6 pages. All stories are prepared based on Hindhu religious stories. Mostly from Ramayana, Mahabaratha, Sivapuranam etc (There are some stories which tells about Sri Vivekanatha and his Guru Ramakrishna)

Mr.R.V have done editing work for the most of stories. Some others too have done editing for some stories. Those who are not interested in religious stories also can enjoy Kathaimalar for its art work and presentation.
All stories are provided with a high quality art work by different artists. 80 % stories are illustrated by artist Shanker. It is hard to see such a high quality art work in Tamil comics production. Thanks to Mr. Shanker and Ramakrishna math.
Shanker’s Drawing style is very unique in Tamil comics. Cool and eye catching pictures. I didn't get further informtion about this artist. Comics friends if you have any, kindly share.

Inner page scan :




Full Color Issues:






Tamil language used here also gives pleasant experience to us. But they have used more Sanskrit words which they would have avoided.
The same series has been translated into English, Telungu, Malayalam, Bengali.
The books are still in printing. You can purchase from Ramakrishna math, Mylapore chennai or use the link. http://www.sriramakrishnamath.org/ . Duel colored books are priced Rs.20 and colored books are priced Rs.35. Paper quality also good.
Friends my opinion is KathaiMalar is worth collecting and reading if you love Tamil comics.


Next Post :
Different artists in KATHAIMALAR
KATHIAMALARACK comparison
KATHAIMALAR English version