Showing posts with label வினு. Show all posts
Showing posts with label வினு. Show all posts

Sunday, January 31, 2010

பொன்னியின் செல்வன் சித்திரங்கள் - சுழற் காற்று (Ponniyin selvan pictures II)

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் சித்திரங்களிலான முந்தைய பதிவை அடுத்து இரண்டாம் பாகமான சுழற் காற்றின் சித்திரங்கள் இந்த பதிவு மூலம் வழங்கப்படுகிறது. முன்பு ஓவியர் வினுவின் கைவண்ணத்தை பார்த்தோம். இப்போது ஓவியர் மணியம் அவர்களின் கைவண்ணத்திலான் ஓவியங்களை பார்ப்போம். பொன்னியின் செல்வன் 1987 ல் கல்கியில் தொடர்கதையாக வந்த போது வெளிவந்த சித்திரங்கள் இவை. பைன்டிங் செய்யப்பட்ட புத்தகம் என்பதால் சில ஸ்கேன்களின் நடுவே வரும் கருப்பு கோடு தவிர்க்க முடியாததாகி விட்டது. இரண்டாம் பாகத்தின் பல சித்திரங்களில் ஒரு சில சித்திரங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.

பதிவின் கடைசியில் இருக்கும் வரைபடம் பொன்னியின் செல்வன் கதை படிக்கும் போது கதையை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

பூங்குழலியின் அழகிய தோற்றம்




வந்தியத்தேவனும் வைத்தியர் மகனும் கோடியக்கரையில் நுழையும் காட்சி


வந்தியத்தேவனும் பூங்குழலியும்


நீச்சல் தெரியாத வந்தியத்தேவனை வேடிக்கை செய்யும் பூங்குழலி

பூங்குழலியின் வீட்டில்

இராமேசுவரத்திலிருந்து அநிருத்த பிரம்மாதிராயர் தனது குழுவுடன் இலங்கை செல்லும் காட்சி

காவரித்தாய் மீட்டெடுத்த பொன்னியின் செல்வன்.

சுந்தர சோழரின் ஊமைராணி பற்றிய நினைவுகள்

இலங்கையில் மத யானை ஓடிவரும் காட்சி

யானையை துரத்த முயலும் ஆழ்வார்க்கடியான்

சீனத்து யாத்திரீகர்களின் யானை பவனி. (யானை பாகனாக பொன்னியின் செல்வன்)

இலங்கை வீதிகளில் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான்

புத்த பிஷூ சங்கத்தில் இளவரசர்

பூங்குழலியும் இளவரசரும்

யானை பாகனாக இளவரசரும் பூங்குழலியும்

அரேபியர்களுடான சண்டையில் வந்தியத்தேவன்

அரேபியர்களின் கப்பலை தாக்கும் இடி

அந்த கப்பலில் மரணத்தை சந்திக்க தயாராகும் வந்தியத்தேவன்

வந்தியத்தேவனை காப்பற்றும் முயற்ச்சியில் பொன்னியின் செல்வர்

பூங்குழலியின் படகு மூலம் கரைக்கு செல்லும் காட்சி

கதை நடக்கும் இடங்களில் வரைபடம்

பொன்னியின் செல்வன் சித்திரங்கள் - முதல் பாகம்
கல்கியின் மோகினி தீவு சித்திரக்கதை பற்றிய பதிவை படிக்க....
கல்கியின் புதல்வி ஆனந்தி அவர்களின் சித்திரக்கதை பற்றிய பதிவை படிக்க....
பொன்னியின் செல்வன் கார்டூன் பற்றிய நண்பர் லக்கி லிமிடின் பதிவை படிக்க...

குறிப்பு: பொன்னியன் செல்வன் மீதுள்ள பற்றால் ஓவியங்கள் பதிவு இடபட்டுள்ளது. உரிமையாளர் விரும்பினால் நீக்கப்படும்.

Saturday, January 23, 2010

கல்கியின் மோகினித்தீவு சித்திரக்கதை(Kalki's Mohini theevu in comics)

வணக்கம் தோழர்களே,


பொன்னியின் செல்வன் படித்த காமிக்ஸ் ரசிகர்கள் பெரும்பாலானோர்க்கு பொன்னியின் செல்வனை சித்திரக்கதை வடிவத்தில் பார்க்கும் ஆசை இருக்கும். அந்த ஆசை இன்னும் நிறைவேறவில்லையென்றாலும் கல்கியின் வேறு ஒரு படைப்பை சித்திரக்கதை வடிவத்தில் பார்க்கும் ஆசை சிறிது நாட்களுக்கு முன் நிறைவேறியது. அதற்கான நன்றியை வாண்டுமாமா அவர்களுக்கும் பூந்தளிர் நிறுவனதிற்கும் செலுத்தவேண்டும்.

" கதை - ஆனந்தி, படம் - வினு " இந்த கூட்டணி பல சித்திரக்கதைகளை கோகுலம் இதழில் படைத்திருக்கிறார்கள். சிறிது நாட்களுக்கு பிறகு இந்த கதைகள் பூந்தளிர் இதழிலும் வெளிவந்தன. அப்போது பூந்தளிர் இதழானது ஒரு சிறிய இடைவெளிக்கு பின் வாண்டுமாமா அவர்களின் மேற்பார்வையில் வெளிவர தொடங்கி இருந்தது. கல்கியின் நூற்றாண்டு விழா ஆண்டான 1999 ல் கல்கியின் மோகினித்தீவு சித்திரக்கதை வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது.



கல்கியின் படைப்புகளில் பொன்னியின் செல்வன் போன்ற நெடுங்கதைகளே மிகவும் பிரபலம். ஆனால் மோகினித்தீவு 100 பக்கங்களுள் அடங்கிவிடக்கூடிய குறுங்கதையாகும். மோகினிதீவு கதை உருவானது பற்றி ஒரு சுவையான தகவலை அவரது மகன் திரு கி ராஜேந்திரன் அவர்கள் மோகினித்தீவின் நாவல் வடிவ புத்தகத்தில் கூறிள்ளார்.

முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் 60வது ஆண்டு பிறந்தநாள்க்கு ஒரு சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டது. அதில் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட சிறுகதையே மோகினிதீவு ஆகும். இந்த சிறுகதைதான் பின்னாளில் ஒரு குறு நாவலாக மாற்றி கல்கி இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இந்த கதை ஆயுத குறைப்பு பற்றி குறிப்பிடுவதால் நேருவிற்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.



பர்மாவிலிருந்து கப்பலில் வரும் பாஸ்கர கவிராயர் என்பவர் பயனத்தின் இடையே ஒரு மக்கள் வசிக்காத ஒரு தீவினுள் செல்கிறார். பழைய சோழர்கால சிற்ப்பங்களையும் கலை படைப்புகளையும் பார்த்து வியந்துகொண்டிருக்கும் போது அழகே வடிவான ஒரு பெண் மற்றும் ஒரு ஆடவன் அங்கு வருகிறார்கள். அவர்கள் சொல்லும் கதையே மோகினிதீவு. சோழர்கள் காலத்தில் நடந்த பாண்டிய இளவரசிக்கும் சோழ இளவரசனுக்கும் இடையேயான காதல் கதையை அவர்கள் கூறுகிறார்கள். சோழர்களும் பாண்டியர்களும் பகைமை பாராட்டிகொண்டிருந்த நிலையில் அவர்களுடைய காதல் எப்படி நிறைவேரியது என்பதை சுவாரிஸ்யாமாக விளக்குகிறார்கள்.



100 பக்கங்களில் படிப்பதற்க்கு இனிமையாக வழங்கப்பட்டிருக்கும் இந்த கதையை 16 பக்கங்களில் இனிமை குன்றாமல் வழங்குவது என்பது எளிமை அல்ல. இநத முயற்ச்சியில் ஓரளவே வெற்றி பெற்று இருக்கிறார்கள் ஆனந்தி மற்றும் வினு. 16 பக்கம் தான் என்ற கட்டுபாட்டை மீறி இருந்தால் மிகவும் அருமையான ஒரு சித்திரக்கதையை படித்திருக்கலாம் என்பது என் கருத்து. சித்திரக்கதையில் கதை சுருக்கம் படிப்பது போலவே இருக்கிறது. பெரும்பாலான காதல் காட்சிகளை நீக்கிவிட்டே இந்த சித்திரக்கதையை தொகுத்து இருக்கிறார்கள். எனினும் வினுவின் உயிர்ப்பான சித்திரங்களை பார்த்துகொண்டே இருக்கலாம். நீங்கள் மோகினிதீவு நாவல் வடிவத்தை படிக்காமல் இந்த சித்திரக்கதையை படித்தால் சிறப்பான ஒரு கதையாகவே தெரியும்.

கல்கியின் படைப்பை சித்திரக்கதை வடிவில் படிப்பது எனும் எனது ஆசை ஓரளவு நிறவேறியது என்று கூறலாம். எனினும் பொன்னியின் செல்வன் போன்ற கதைகளை சித்திரக்கதை வடிவில் வழங்குவது தமிழ் சித்திரக்கதை உலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பது என் எண்ணம்.

பதிவை படித்து விட்டு உங்கள் கருத்துகளை வழங்கிடுங்கள்.
 
கல்கியின் மோகினித்தீவு நாவலை online ல் படிக்க இங்கே கிளிக்கவும்

Tuesday, November 17, 2009

கோகுலம் வண்ணப் படக்கதை - சில விளம்பரங்கள்

சென்ற பதிவில் இடம்பெற்ற ஆனந்தி - வினு அவர்களின் சித்திரகதைகளை பற்றிய சில விளம்பரங்களை இங்கு காண்போம்..







மேலே பார்த்தவை யாவும் கல்கியில் 1985 ~ 1990 களில் வெளிவந்த விளம்பரங்கள். இனி பார்ப்பது இதே காலகட்டத்தில் கோகுலத்தில் அடுத்த இதழில் வர போகும் கதை பற்றிய விளம்பரங்கள்



கடைசி படம் மட்டும் குமரன் என்பவரின் கதைக்கான விளம்பரம் என்பதை கவனிக்க...

Friday, November 6, 2009

கதை - ஆனந்தி, படம் - வினு (Story - Ananthi, Art - Vinu)

வணக்கம் தோழர்களே,

இருபது வருடங்களுக்கு முன்பு குழந்தைகளாக இருந்தவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இனிமையான தமிழிலே வளமான தரத்திலே கோகுலம், பூந்தளிர், சிறுவர்மலர் போன்ற பல தமிழ் சிறுவர் பத்திரிக்கைகளை படிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்திருக்கிறது. அந்த இனிமையான யுகத்தின் இறுதி காலகட்டங்ளில் படிக்கும் பழக்கத்தை ஆரம்பித்திருந்த நானும் அதிர்ஷ்ட்டசாலி தான். தற்போதய குழந்தைகள் 'பவர் ரேஞ்சர்' தொடர் மற்றும் பல வீடியோ கேம்களுக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். அந்த இனிமையான கலகட்டங்களில் பல சித்திரகதைகளை கொடுத்திட்ட ஆனந்தி - வினு கூட்டணியின் படைப்புகளை பற்றியே இந்த பதிவு.



என்னிடம் இருக்கும் 1985 ~ 1990 இடைப்பட்ட காலங்களில் வந்த பல கோகுலம் புத்தகங்களின் நடுபக்கங்களை அலங்கரிப்பது ஆனந்தி - வினு கூட்டணியின் படைப்புகளே. 1986ல் அழ.வள்ளியப்பா அவர்கள் ஆசிரியராக இருந்தார். இந்த கூட்டணி எப்போது ஆரம்பித்தது, எவ்வளவு சித்திர கதைகளை படைத்திருகிறார்கள் போன்ற விபரங்கள் என்னிடம் துல்லியமாக இல்லை. கிட்டதட்ட 100 கதைகளுக்கு மேல் படைத்து இருப்பார்கள் என் எண்ணுகிறேன்.

நான் படித்திட்ட அனைத்து கதைகளும் சரியாக 16 பக்கங்கள் கொண்டவையே. சில பக்கங்கள் முழு வண்ணத்திலும் சில பக்கங்கள் இரட்டை வண்ணத்திலும் இருக்கும். பெரும்பாலும் புராண மற்றும் சரித்திர கதைகளையே உருவாக்கிருகிறார்கள். சரித்திர கதைகளை நிறைய எழுதியதற்கு ஆனந்தி அவர்கள் தமிழின் முதன்மையான சரித்திர கதை எழுத்தாளர் ஒருவரின் புதல்வியாக இருப்பது கூட காரணமாக இருக்கலாம். ஆம் நண்பர்களே ஆனந்தி அவர்கள் பொன்னியின் செல்வன் படைத்த எழுத்தாளர் கல்கியின் புதல்வியாகும். (அவர் தனது தந்தை பற்றி கொடுத்த பேட்டியை படிக்க இங்கே கிளிக்கவும்)

ஆனந்தி அவர்கள்

சரித்திர கதைகளை 16 பக்கங்களில் அடக்கி அனைவருக்கும் புரியும் படியாகவும் சுவையாகவும் கொடுப்பது என்பது அவ்வளவு எளிய காரியம் அன்று. அதனை திறம்பட செய்திருகிறது இந்த கூட்டணி. அதற்கு ஓவியர் வினுவின் பங்களிப்பும் முக்கியமானது. வினு அவர்களின் ஓவிய தரம் பற்றி யாரும் சொல்ல தேவையில்லை. கல்கி போன்றவர்கள் வர்ணணையில் கொண்டுவரும் அழகினை அப்படியே ஓவியத்தில் பதித்து விடுவார். ஆக இப்படி ஒரு தரமான எழுத்தாளர் மற்றும் ஒரு ஓவியர் சேர்ந்து அழகான சித்திரகதைகளை படைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அனைத்து கதைகளும் சிறுவர்களுக்கு உபயோகமான சரித்திர தகவல்களையும் தேவையான் அறிவுரைகளையும்  கொடுக்கும் கதைகள்.
இங்கு கோகுலத்தி வெளிவந்த சில சித்திரகதைகளின்  பக்கங்களை பார்க்கலாம்.
தயமந்தி சுயவரம்




ஆனந்தி - வினு அவர்களின் கூட்டணியின் படைப்புகள் பூந்தளிரின் இறுதி காலகட்ட இதழ்களில் வெளிவந்தன. இவை வெளிவரும் போது பூந்தளிர் ஆசிரியராக இருந்தவர் நமது வாண்டுமாமா.

மந்திர பொம்மை

சிந்துபாத்

மந்திர அம்புகள்

பதிவை படித்துவிட்டு கருத்துகளை கூறுங்களேன்....

Thursday, September 24, 2009

கதை மலர் - தொடர்ச்சி (Kathai malar - 2)

இது கதை மலர் - ஒரு அறிமுகம் பதிவின் தொடர்ச்சி.......

கதை மலரின் ஓவியர்கள்

ஏற்கனவே குறிப்பிட்ட படி கதை மலரின் 80% சித்திரங்களை ஓவியர் சங்கர் வரைந்துள்ளார். அது மட்டுமல்லாது தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்க்கு நன்கு பரிச்சியமான ஓவியர்கள் பலரை இங்கு பார்க்கலாம். (உ-ம்) செல்லம், வினு, மணியம் செல்வன், ரமணி, சித்ரலெகா, பத்மவாசன், கோபன், தாமரை, ஜயந்தி ஆகியோரின் ஓவியங்களை கதை மலரில் நாம் ரசிக்காலாம்.

10க்கு மேற்பட்டோர் கதை எழுதி உள்ளனர். அதில் வாண்டு மாமா, எ. சோதி (முட்டாள் கதைகள் புகழ்) போன்றவர்களும் அடங்கும். வாண்டு மாமா பீர்பால் கதைக்கு கதையமைப்பு செய்துள்ளார். ஓவியர்கள் அனைவரது கைவண்ணத்தையும் இங்கு நீங்கள் காணலாம்.

ஓவியர் செல்லம்


 
சித்ரலெகா 


ஜயந்தி



கோபன்


 

தாமரை

 

ஓவியர் ரமணி


ஓவியர் வினு



பத்மவாசன்




ஓவியர் மணியம் செல்வன்


வாண்டு மாமாவின் பீர்பால் கதை



கதை மலர் Vs அமர் சித்திர கதா

கதை மலரில் இடம்பெற்றுள்ள பல கதைகள் வட இந்தியாவில் இருந்து இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளிவரும் "அமர் சித்திர கதா" இதழிலும் இடம்பெற்றுள்ளன. இரண்டு இதழ்களும் புராண கதைகளை வெளியிடும் பத்திரிக்கைகள் என்பது ஒற்றுமை.

கதை மலரில் கிட்டதட்ட அனைத்து கதைகளும் 4 பக்க கதைகள். (எப்பிடிப்பட்ட புராண சம்பவத்தையும் 4 பக்கங்களில் அடக்கி விடுகிறார்கள்). ACK ல் 32 பக்க கதையாக தருகிறார்கள். கதை மலரில் சாந்தமான தெய்வீகமான் காட்ச்சிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் AKC ல் அதிரடியான ஆக் ஷன் சம்பவங்களுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது. ஓவியங்களில் கதை மலரை ACK யால் மிஞ்ச முடியாது. இந்த ஒப்பீட்டை கதை பகுதிகளில் இருந்து நீங்கள் கண்டு கொள்ளலாம்.

அய்யபன் வரலாறு கூறும் கதையை  இந்த இரண்டு இதழ்களிலும் பார்க்க நேரிட்டது. அதில் வரும் ஒரு கட்சியை இரண்டு இதழ்களிலும் பாருங்களேன்...

அய்யபன் மகிஷியுடன் போரிட்டு அவளை வீழ்த்தும் காட்சி (ACK)


 
அய்யபன் மகிஷியுடன் போரிட்டு அவளை வீழ்த்தும் காட்சி (கதை மலர்)



கதை மலர் ஆங்கில பதிப்பு

கதை மலர் ஆங்கில பதிப்பு - அழகான ஆங்கிலத்தில் மொழிபெயற்ப்பு செய்யப்பட்டு "Pictorial stories for children" எனும் தலைப்பில் வெளியிடப்படுகிறது.
கதை மலர் ஆங்கில பதிப்பு 1990 களின் ஆரம்பத்தி தொடக்கத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. காமிக்ஸில் தமிழ் to ஆங்கிலம் மொழிமாற்றம் வேறு எங்கேனும் செய்யப்பட்டு இருக்கிறதா?? என்க்கு தெரியவில்லை

ஆங்கில இதழின் சில பக்கங்கள் இங்கே...







படித்துவிட்டு கருத்துகளை கூறிடுங்கள் நன்பர்களே....