Sunday, April 18, 2010

எங்கோ பார்த்த ஞாபகம்

1997 ல் வெளிவந்த மேகலா காமிக்ஸின் அட்டைபடம்



இன்று வெளிவந்த தினத்தந்தி - குடும்பமலரின் "பூவில் ஒரு சூறாவளி" தொடர்கதைக்கான ஓவியம்


மேகலா காமிக்ஸின் ஓவியம் யார் வரைந்தது என தெரியவில்லை. குடும்ப மலர் ஓவியம் ஸ்யாம் வரைந்தது. மேகலா காமிக்ஸின் ஓவியம் கூட ஸ்யாமின் ஓவிய பாணியில் தான் இருக்கிறது. அவரே அந்த அட்டைபடம் வரைந்திருபதற்கான சாத்தியங்கள் அதிகம்




குறிப்பு :  இன்றைய குடும்பமலர் பார்த்தவுடன் ஞாபகம் வந்ததால் இந்த பதிவு.

Thursday, April 15, 2010

பூவிழி காமிக்ஸ் (Poovili comics & bright moon comics)

தமிழ்நாட்டில் எப்போதும் ஏப்ரல்~ஜூன் மாதங்களில் காமிக்ஸ் விற்பனை அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் மட்டுமே வெளிவக்கூடிய காமிக்ஸ் பத்திரிக்கைகள் சில உண்டு. அவற்றில் ஒன்றுதான் பூவிழி பப்ளிக்கேஷன்ஸ். மதுரையில் இருக்கும் இவர்களுடைய நிறுவனத்திலிருந்து 'பூவிழி காமிக்ஸ்' மற்றும் 'பிரைட் மூன் காமிக்ஸ்' என இரண்டு காமிக்ஸ்கள் வெளிவந்தன. இவை வெளிவந்த ஆண்டு 1996 லிருந்து 1999 வரை. மொத்தம் வெளிவந்த காமிக்ஸ்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. கண்ணால் பார்த்த காமிக்ஸ்களை வைத்து பார்க்கும் போது குறைந்தபட்சம் பூவிழி காமிக்ஸில் 10 புத்தகங்களும் பிரைட் மூன் காமிக்ஸில் 3 புத்த்கங்களும் வந்திருக்க வேண்டும். M. உதயகுமார் என்பவரை ஆசிரியராக கொண்டு இந்த இதழ்கள் வெளிவந்திருக்கிறது. எம். ஐஸ்வர்யா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கதைகளை படைத்திருக்கிறார்கள். இதில் ஸ்ரீகாந்த் அவர்களின் படைப்புகளை மலர் காமிக்ஸ் மற்றும் தேசமலர் காமிக்ஸில் நீங்கள் படித்திருக்ககூடும். (இவரின் படைப்புகள் பற்றிய ஒரு பதிவை விரைவில் இடலாம் என இருக்கிறேன்). இறுதி இதழ்கள் அனைத்தும் எதாவது ஒரு ஆங்கில படத்தை மூலமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

நிறுவனம் - பூவிழி பப்ளிக்கேஷன்ஸ், மதுரை
ஆசிரியர் - M. உதயகுமார்
பக்கங்கள் - 48
விலை - ரூ 4
ஆண்டு - 1996 லிருந்து 1999 வரை (தோராயமாக)
எண்ணிக்கை - 13 (தோராயமாக)
 
இனி சில காமிக்ஸ்களின் அட்டைபடங்கள் மற்றும் சில பக்கங்கள்
 
1. வேட்டையாடும் பிசாசு - ஸ்ரீகாந்த்

2. மோகினித்தீவு - ஐஸ்வர்யா

3. விண்வெளி அரக்கன் - ஐஸ்வர்யா
(இங்கு அட்டைபடத்தில் கதை தலைப்பு மட்டும் தனியாக ஒட்டப்பட்டிருக்கிறது. பூவிழி காமிக்ஸின் லோகோவும் மாறி உள்ளது) 

4. பூத சுரங்கம் - ஐஸ்வர்யா
(இங்கும் அட்டைபடத்தில் கதை தலைப்பு மட்டும் தனியாக ஒட்டப்பட்டிருக்கிறது)


5. டினோசர் பயங்கரம் - ஸ்ரீகாந்த்
(ஜூராசிக் வேல்டு திரைப்படத்தை தழுவிய கதை)

6. எரிந்த மனிதன் - ஐஸ்வர்யா
 இந்த இதழில் ஸ்ரீகாந்த் உருவாக்கிய 'சிங்கரதம்' என்ற 32 பக்க வரலாற்று கதையும் இடம் பெற்று இருக்கிறது

7. பறவை மனிதன் - ஐஸ்வர்யா
(இந்த கதை கிட்டதட்ட பேட்மேன் கதை போலவே உள்ளது) 

இரத்தப்பேய் - ஐஸ்வர்யா
(இந்த இதழில் நமது காக்கை காளியை தழுவிய ஒரு சித்திர சிறு கதையும் இடம் பெற்றுள்ளது. 

இனி பிரைட் மூன் காமிக்ஸ் பற்றி பாப்போம். காமிக்ஸ் பெயரை தவிர பூவிழி காமிக்ஸ்க்கும் பிரைட் மூன் காமிக்ஸ்க்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. இதில் தான் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கிங்காங் சித்திரக்கதை வெளியிடப்பட்டிருக்கிறது. எண்ணிக்கையில் குறைவாகவே வெளிவந்துள்ளதாக தெரிகிறது.

1. பேய் சொல்லைத் தட்டாதே - ஐஸ்வர்யா

2. கல்லறைக் காவலன் - ஐஸ்வர்யா

கிங் காங் - ஐஸ்வர்யா
இந்த இதழின் அட்டைபடத்தை பார்த்த சில்ர் இந்த கதை அடுக்குமொழி புகழ் தமிழ் நடிகர் பற்றிய கதையா என விசாரித்தனர். அப்படியெல்லாம் இல்லை நண்பர்களே. இந்த கதை அப்படியே ஆங்கில படத்தின் காமிக்ஸ் வடிவமே ஆகும். இங்கும் ஒரு காட்டு குரங்கு சூப்பர் பிகர் ஓன்றை கரைட் செய்து அலம்பல் செய்கிறது. கதையின் கிளைமாக்ஸ் தான் நாம் யாருமே எதிர்பார்க்காத முடிவு. இந்த இதழ் வெளிவந்த ஆண்டு 1998. இந்த இதழில் ஸ்ரீகாந்த் எழுதிய தூங்காத துப்பாக்கி எனும் 32 பக்க கதையும் இடம் பெற்றுள்ளது.


மேற்கண்ட இதழ்களின் தரம் பற்றி நீங்களே ஓரிரு பக்கங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். ஆனாலும் தமிழில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு நாம் நன்றி கூறியே ஆக வேண்டும்.
வண்ணமையமான அட்டைப்படங்களும் சிறபாக உள்ளன. பள்ளி படிக்கும் போது இந்த இதழ்களை வாங்க தூண்டியதே வண்ணமையமான அட்டைபடங்களே.
இதழ்களின் விற்பனை தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டதாக தெரியவில்லை.


இந்த இதழ்களை பற்றி நண்பர்கள் ஏதேனும் தகவல்கள் இருந்தாலும் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்.

(பி-கு) சி.ஐ.டி சிங்காரம் பதிவு கூடுதல் தகவல்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

தாமதமானாலும் விஸ்வா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பதிவை படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே