Friday, December 18, 2015

Sufi Comics

Sufi காமிக்ஸ்:

வணக்கம் நண்பர்களே... நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு குறும்பதிவுடன் சந்திக்க முடிகிறது.

பெங்களூரை அடிப்படையாக கொண்டு வெளிவரும் காமிக்ஸ் Sufi comics. இஸ்லாமிய நூல்கள் மற்றும் தத்துவங்களை முக்கிய உள்ளடக்கமாக கொண்டு இவை வெளியிடப்படுகின்றன. இவற்றில் 40 Sufi comics என்ற நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. இந்த நூலானது 40 ஒரு பக்க கதைகளின் தொகுப்பாகும். இப்போதைக்கு online இல் இலவசமாக படிக்க கிடைக்கிறது. அச்சு வடிவில் உள்ளதா எனத்தெரியவில்லை. சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு.


Sufi காமிக்ஸ் ன் மொழிபெயர்ப்பு பல தன்னார்வலர்களின் உதவியுடன் நடைபெறுவதாகத் தெரிகிறது. (தமிழில் மொழிபெயர்த்தவர் உமா சதீஸ்) Sufi comics ஐ ஆர்வம் இருப்பின் நீங்களும் மொழிபெயர்க்கலாம். மேலும் Sufi காமிக்ஸ் பற்றி தெரிந்துகொள்ள மற்றும் காமிக்ஸ்களை படிக்க அவர்களின் இணையப் பக்கத்திற்கு செல்லாம்.

பதிவை படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பர்களே.

Monday, June 8, 2015

பகுத்தறிவு பேசும் வேற்றுகிரக வாசி "ஈமோ"

வணக்கம்  நண்பர்களே ,
தந்தை பெரியாரின்  மீது எனக்கு எப்போதும் ஒரு மரியாதையும் ஈர்ப்பும் உண்டு. தந்தை பெரியாரின் கொள்கைகளை தாங்கி, திராவிடர் கழகத்தின் சார்பாக வெளிவரும் நாளிதழ் "விடுதலை" ஆகும். அதில் வெளிவரும் ஒரு தின தொடர்கதையே (daily strip) "ஈமோ".

ஈமோ என்பது ஒரு வேற்றுகிரக வாசி. பூமிக்கு தன் சகாக்களோடு வந்த ஈமோ தன் விண்கலத்தை தவற விட்டுவிட்டது. அவர்கள் திரும்பி வரும் வரையில் பூமியில் தான் இருந்தாக வேண்டும். அதுவரை முகிலன் எனும் சிறுவனை நண்பனாக்கி கொள்கிறது. ஈமோவின் சிறப்பு என்னவென்றால் அதனால் எந்த ஒரு பொருளாகவும் தன் உடலை மாற்றிக்கொள்ள முடியும்.

முகிலனுடன் நாட்களை கடத்தும் போது நமது பழக்கங்களில் உள்ள மூடநம்பிக்கைகளையும் அர்த்தமற்ற சடங்குகளையும் பார்த்து வியக்கிறது. கேள்வி கேட்கிறது. என்ன, PK இந்தி பட கதை போலவே உள்ளதா? எனக்கும் அப்படித்தான் உள்ளது.

கதை - மாக்சிம், ஓவியங்கள் - கி. சொ.


கதையோட்டம் பிரச்சார தொனியில் இல்லாமல், சிறுவர்களை குழப்பாமல் அமைக்கப்பட்டுள்ளது. ஓவிங்களிலும் சரி, கதை அமைப்பிலும் சரி இது ஒரு தரமான படைப்பாகவே உள்ளது. குறிப்பாக தமிழின் ஏனைய தினசரிகளில் வெளிவரும் daily strip படைப்புகளை ஒப்புகையில் இது கண்டிப்பாக ஒரு சிறந்த படைப்புத்தான்.

இந்த சித்திரக்கதை தொடர் விடுதலை இணைய பக்கத்தில் படிக்க கிடைக்கிறது.   http://viduthalaidaily.blogspot.in/2014/11/blog-post_12.html   பதிவை வாசித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்திடுங்கள் நண்பர்களே.

Thursday, April 16, 2015

சாண்டில்யனின் மன்னன் மகள் - சித்திரங்கள்

வணக்கம் நண்பர்களே. இன்னும் ஒரு மினி பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். 1987ல் குமுதத்தில் தொடர்கதையாக வெளிவந்த சரித்திரக்கதை மன்னன் மகள். அக்கதைக்கு ஓவியர் மணியம் செல்வம் வரைந்திட்ட அட்டகாசமான ஓவியங்களில் சில உங்கள் பார்வைக்கு....


Sunday, April 12, 2015

கஸ்தூரி சித்திரக்கதைகள்

வணக்கம் நண்பர்களே, சிவகாசியில் இருந்து 1987 வாக்கில் வெளிவந்த கஸ்தூரி சித்திரக்கதைகள் இதழில் இருந்து சில பக்கங்கள்.

1) சிறப்பான அட்டைப்படம், சற்றே சுமாரான  கதை மற்றும் ஓவியங்கள்.
2) கதாசிரியர் மற்றும் ஓவியர் பற்றி குறிப்பு ஏதும் இல்லை. ஆனால் முந்தைய இதழின் அட்டைப்பட ஓவியர் தாம்ஸ் என்று வாசகர் கடிதத்தில் கூறப்படுகிறது.
3) தேதி குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இங்கே இருக்கும் இதழ் 38 வது இதழ்.
4) ஆச்சிரியப்படும் வகையில் வாசகர் கடிதங்கள் ஓவியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உள்ளன.
அவ்வளவுதான் நண்பர்களே. இந்த மனி பதிவு இத்துடன் நிறைவுறுகிறது. உங்கள் மேன்மையான கருத்துக்களையும் கஸ்தூரி பற்றி (காமிக்ஸ் தாங்க) மேலதிக தகவல்கள் ஏதேனும் இருப்பின் அதை பகிர்ந்து கொள்ளவும தவறாதீரகள் நண்பரகளே....
Sunday, January 11, 2015

புத்தக கண்காட்சி - 2015

வணக்கம் நண்பர்களே. பதிவுகளில் விழுந்திட்ட மிகப்பெரிய இடைவெளியை குறைக்க இந்த பதிவு. 

புத்தக கண்காட்சி 2015:

நமது லயன் வெளியீடுகளை படிக்கவே நேரம் சரியாக இருந்ததால் போன வருடம் புத்தக கண்காட்சியில் வாங்கிய காமிக்ஸ் அல்லாத புத்தகங்கள் பெரும்பாலும் படிக்காமலே இருப்பதால் இந்த வருடம் குறைவான புத்தகங்களையே வாங்குவதாக திட்டமிட்டு இருந்தேன். 
லயன் ஸ்டால் தவிர வேறு எங்கும் காமிக்ஸ் வாங்கவில்லை.

 இதோ இந்த வருடம் வாங்கிய புத்தகங்கள் ஒரு பார்வை.