வணக்கம் தோழர்களே,
இருபது வருடங்களுக்கு முன்பு குழந்தைகளாக இருந்தவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இனிமையான தமிழிலே வளமான தரத்திலே கோகுலம், பூந்தளிர், சிறுவர்மலர் போன்ற பல தமிழ் சிறுவர் பத்திரிக்கைகளை படிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்திருக்கிறது. அந்த இனிமையான யுகத்தின் இறுதி காலகட்டங்ளில் படிக்கும் பழக்கத்தை ஆரம்பித்திருந்த நானும் அதிர்ஷ்ட்டசாலி தான். தற்போதய குழந்தைகள் 'பவர் ரேஞ்சர்' தொடர் மற்றும் பல வீடியோ கேம்களுக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். அந்த இனிமையான கலகட்டங்களில் பல சித்திரகதைகளை கொடுத்திட்ட ஆனந்தி - வினு கூட்டணியின் படைப்புகளை பற்றியே இந்த பதிவு.
என்னிடம் இருக்கும் 1985 ~ 1990 இடைப்பட்ட காலங்களில் வந்த பல கோகுலம் புத்தகங்களின் நடுபக்கங்களை அலங்கரிப்பது ஆனந்தி - வினு கூட்டணியின் படைப்புகளே. 1986ல் அழ.வள்ளியப்பா அவர்கள் ஆசிரியராக இருந்தார். இந்த கூட்டணி எப்போது ஆரம்பித்தது, எவ்வளவு சித்திர கதைகளை படைத்திருகிறார்கள் போன்ற விபரங்கள் என்னிடம் துல்லியமாக இல்லை. கிட்டதட்ட 100 கதைகளுக்கு மேல் படைத்து இருப்பார்கள் என் எண்ணுகிறேன்.
நான் படித்திட்ட அனைத்து கதைகளும் சரியாக 16 பக்கங்கள் கொண்டவையே. சில பக்கங்கள் முழு வண்ணத்திலும் சில பக்கங்கள் இரட்டை வண்ணத்திலும் இருக்கும். பெரும்பாலும் புராண மற்றும் சரித்திர கதைகளையே உருவாக்கிருகிறார்கள். சரித்திர கதைகளை நிறைய எழுதியதற்கு ஆனந்தி அவர்கள் தமிழின் முதன்மையான சரித்திர கதை எழுத்தாளர் ஒருவரின் புதல்வியாக இருப்பது கூட காரணமாக இருக்கலாம். ஆம் நண்பர்களே ஆனந்தி அவர்கள் பொன்னியின் செல்வன் படைத்த எழுத்தாளர் கல்கியின் புதல்வியாகும். (அவர் தனது தந்தை பற்றி கொடுத்த பேட்டியை படிக்க இங்கே கிளிக்கவும்)
சரித்திர கதைகளை 16 பக்கங்களில் அடக்கி அனைவருக்கும் புரியும் படியாகவும் சுவையாகவும் கொடுப்பது என்பது அவ்வளவு எளிய காரியம் அன்று. அதனை திறம்பட செய்திருகிறது இந்த கூட்டணி. அதற்கு ஓவியர் வினுவின் பங்களிப்பும் முக்கியமானது. வினு அவர்களின் ஓவிய தரம் பற்றி யாரும் சொல்ல தேவையில்லை. கல்கி போன்றவர்கள் வர்ணணையில் கொண்டுவரும் அழகினை அப்படியே ஓவியத்தில் பதித்து விடுவார். ஆக இப்படி ஒரு தரமான எழுத்தாளர் மற்றும் ஒரு ஓவியர் சேர்ந்து அழகான சித்திரகதைகளை படைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அனைத்து கதைகளும் சிறுவர்களுக்கு உபயோகமான சரித்திர தகவல்களையும் தேவையான் அறிவுரைகளையும் கொடுக்கும் கதைகள்.
இங்கு கோகுலத்தி வெளிவந்த சில சித்திரகதைகளின் பக்கங்களை பார்க்கலாம்.
ஆனந்தி - வினு அவர்களின் கூட்டணியின் படைப்புகள் பூந்தளிரின் இறுதி காலகட்ட இதழ்களில் வெளிவந்தன. இவை வெளிவரும் போது பூந்தளிர் ஆசிரியராக இருந்தவர் நமது வாண்டுமாமா.
பதிவை படித்துவிட்டு கருத்துகளை கூறுங்களேன்....

ஆனந்தி அவர்கள்

தயமந்தி சுயவரம்
ஆனந்தி - வினு அவர்களின் கூட்டணியின் படைப்புகள் பூந்தளிரின் இறுதி காலகட்ட இதழ்களில் வெளிவந்தன. இவை வெளிவரும் போது பூந்தளிர் ஆசிரியராக இருந்தவர் நமது வாண்டுமாமா.
மந்திர பொம்மை
சிந்துபாத்
மந்திர அம்புகள்
பதிவை படித்துவிட்டு கருத்துகளை கூறுங்களேன்....
10 comments:
தங்களின் இலக்கியப்பணி வாழ்க! ஈடு இணையற்ற இலக்கியப்பணி. வாழ்த்துகள்.
நண்பரே,
மீண்டும் நல்லதொரு பதிவை வழங்கியிருக்கிறீர்கள். நீங்கள் வழங்கியிருக்கும் ஸ்கேன் பக்கங்களிற்கு நன்றி.
கோகுலம் 80களில் நான் படித்ததே அந்த 16 பக்க வண்ணப் படக்கதைகளுக்காகத்தான்! அதிலும் அவர்கள் வெளியிடும் அடுத்த இதழில் விளம்பரங்கள் அற்புதமாக இருக்கும்!
நீங்கள் வழங்கியிருக்கும் படங்களைப் பார்க்கும் போது பூந்தளிரில் வந்திருக்கும் கதைகள் மறுபதிப்புகள் என்பது தெரிகிறது!
தலைவர்,
அ.கொ.தீ.க.
நீங்கள் வழங்கியிருக்கும் ஆனந்தி அவர்களின் பேட்டிக்கான சுட்டியில் கிருமி இருப்பதாகத் தெரிகிறது!
கிருமிகள் ஜாக்கிரதை!
தலைவர்
அ.கொ.தீ.க.
நன்றி இளங்குமரன், கனவுகளின் காதலன் மற்றும் Dr.7.
//அதிலும் அவர்கள் வெளியிடும் அடுத்த இதழில் விளம்பரங்கள் அற்புதமாக இருக்கும்!//
உண்மை உண்மை...
//நீங்கள் வழங்கியிருக்கும் படங்களைப் பார்க்கும் போது பூந்தளிரில் வந்திருக்கும் கதைகள் மறுபதிப்புகள் என்பது தெரிகிறது!//
எனது கணிப்பும் அதுவே... கோகுலத்தில் பார்பதே வசீகரமாக இருகிறது,.
நண்பர் சிவ்,
நான் காமிக்ஸ் மற்றும் சிறுவர் இதழ்களை கடைகளில் சேகரிக்க ஆரம்பித்த சமயத்தில் எல்லாம் கோகுலம், இத்தனை சிரத்தையுடன் வெளியிடபடவில்லை. பிற்பாடு பழைய புத்தக கடைகளில் சில பிந்தைய வெளியீடுகள் கிடைக்கும்போது எல்லாம், நான் லயித்து பார்த்தது இந்த வண்ணம் தீட்டிய சொற்ப பக்கங்களை தான். கணிணி காலம் அதிகம் பரவாத நாட்களிலும், வண்ணத்தேர்வுகள் சிறப்பானது என்று சொல்ல முடியாவிட்டாலும் கவனத்தை கவரும் விதம் அமைத்திருப்பது வினுவின் திறமையை பறைசாட்டுகிறது.
பிற்காலத்தில் பூந்தளிரிலும், பார்வதி சித்திர கதைகளிலும் வினுவின் சித்திர தொடர்களை ஓர் வண்ணக்லவையிலும், கருப்பு வெள்ளையிலும் பார்த்த போது அதன் தாக்கம் மிகவும் சொற்பம் தான்.
திருமதி ஆனந்தி பற்றிய தகவலுக்கும், வண்ணமயமான ஸ்கான் பிரதிகளுக்கும், மிக்க நன்றி. தொடருங்கள் உங்கள் சித்திரக்கதை பொக்கிஷ பதிவுகளை.
ரஃபிக் ராஜா
காமிக்கியல்
நன்றி ரபிக்..
//பிற்காலத்தில் பூந்தளிரிலும், பார்வதி சித்திர கதைகளிலும் வினுவின் சித்திர தொடர்களை ஓர் வண்ணக்லவையிலும், கருப்பு வெள்ளையிலும் பார்த்த போது அதன் தாக்கம் மிகவும் சொற்பம் தான்.//
என்றுமே அசல் அசல்தான் (தல வாழ்க)
Good Job... U can also start a Yahoo! Group...
"ஓநாய் கோட்டை" சித்திர கதை புத்தகம் எங்கு கிடைக்கும்?
- Kiri
அருமையான பதிவு! வினு அவர்களின் ஓவியங்கள் மிகவும் அருமையாக இருக்கும். கதாபாத்திரங்கள் அப்படியே உயிர்த்தெழுந்து மனதில் பதிந்து விடும். வண்ணங்கள் அந்தக் கால பிரிண்ட் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இருக்க வேண்டிய சூழலில் இருந்ததால் அதை விட வேறு வழியில்லை. - பார்த்திபன்.
Post a Comment