Saturday, January 21, 2012

புத்தக கண்காட்சி இரண்டாவது சுற்று - 2012

புத்தக கண்காட்சியின் இறுதி நாளன்று சேகரித்த புத்தகங்கள். இதில் நேரடி காமிக்ஸ் என்று பார்த்தால் காமிக்ஸ் கிளாஸிக் மட்டுமே.


மாற்றுவெளி - சித்திரக்கதை சிறப்பிதழ்:


நண்பர்கள் தமிழ் காமிக்ஸ் பற்றி ஆய்விதழான இவ்வெளியீடைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்க கூடும். விஜயன், மருது, ஜெ, மணியம் செல்வன் என்று பல காமிக்ஸ் ஆர்வலர்களின் பேட்டியும் பல இணைய நண்பர்களின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ள இந்த இதழ் ஒவ்வொரு காமிக்ஸ் ஆர்வலரின் கைகளிலும் இருக்க வேண்டிய முக்கியமான புத்தகமாகும். விஜயன் சாரின் மிக விரிவான நேர்காணல் இவ்விதழின் மிக முக்கியமான அங்கம். நிறைய தகவல்கள் புதைந்துள்ள இந்த நேர்காணலை யாரும் மிஸ் செய்திட வேண்டாம்.



கண்காட்சியில் இதழை மிஸ் செய்தோர்க்காக.....  

வானதி பதிப்பகம்:


சென்றமுறை வானதியில் மிஸ் செய்திட்ட 'எதிர்நீச்சல்' இதழை இந்த முறை வாங்கியாகிவிட்டது. விசாகன் என்பது வாண்டுமாமாவின் இன்னொரு புனைப்பெயர் என்ற விஸ்வாவின் தகவல் மூலம் இன்னும் இரண்டு புத்தகங்கள் என் வாண்டுமாமா சேகரிப்பில் சேர்ந்து கொண்டன. வாண்டுமாமா தனது மனைவி பெயரில் (அல்லது அவரது மனைவியே) எழுதிய வயலின் வசந்தாவும் வாண்டுமாமா சேகரிப்பில் சேர்ந்து கொண்டது.
வயலின் வசந்தா

மாஜிக் மாலினி

மாயாவி இளவரசன்

உலகம் சுற்றும் குழந்தைகள்

எதிர்நீச்சல்
 
திராவிட நாட்டுக் கதைகள்:


பிரேமா பிரசுரத்தின் 'விக்கிரமாதித்தன் கதைகள்' இதழை இன்னும் படிக்கவில்லை. ஆனாலும் புரட்டி பார்த்த பாதிப்பில் வாங்கிய புத்தகம் இது. இவ்விதழும் 500 பக்கங்களுக்கு மேல். ஆனால் விலை ரு100/- மட்டும் தான்.
 
 
 
 இறுதியாக....
- நன்றி-

Tuesday, January 10, 2012

புத்தக கண்காட்சியில் காமிக்ஸ் சேகரிப்பு - 2012

அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பதிவு. புத்தக கண்காட்சியும், என் மனதெங்கும் நிறைந்திருக்கும் 'லயன் கம் பேக் ஸ்பெஷல்"ம் இந்த பதிவை எழுத தூண்டி விட்டது. 6/01 மற்றும் 07/01 ஆகிய இரு நாட்கள் புத்தக கண்காட்சி சென்றிருந்தேன். புத்தக கண்காட்சி மீதான காமிக்ஸ் தொடர்பான எனது பார்வையே இந்தப் பதிவு. முதல் நாள் உள்ளே நுழைந்த உடன் விறு விறு வென லயன் ஸ்டால்க்குச் சென்றேன். கைவசம் இல்லாத சில காமிக்ஸ் கிளாஸிக்குகளையும் லயன் கம் பேக் ஸ்பெஷலையும் எதிர்பார்த்து உள்ளே நுழைந்த எனக்கு ஏமாற்றமே. அங்கே விஸ்வா மற்றும் ரகு இருவரையும் சந்தித்தது மகிழ்ச்சியாய் இருந்தது. நான் வாங்கிய காமிக்ஸ் தொடர்பான புத்தகங்கள்.


1. லயன் கம் பேக் ஸ்பெஷல்:

இந்த இதழை பார்த்த உடன் தமிழ் காமிக்ஸ் புதியதோர் பரிணாமத்திற்குள் நுழைந்திருப்பதாகவே எனக்குப்பட்டது. வாழ்த்துக்கள் விஜயன் சார்.

மாயாவி கதைகள் : இப்போதைக்கு மாயாவியின் 'டாக்டர் மாக்ணோ' மட்டும் படித்துள்ளேன். களிமண் மனிதர்கள் போன்ற கதைகளை படித்து மாயாவி மேல் ஈடுபாடு இல்லாத நிலையில் இந்த கதை ஒரு
surprise piece. பரபப்பான கதை, சிறப்பான மொழிபெயர்ப்பு என எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. மாயாவி கதைகளை இனிமேல் வெளியிடுவதென்றால் இது போன்ற கதைளையே தேர்வு செய்தால் நலம். அந்த சூப்ப்பர் மேன் மாயாவி வேண்டாமே please.

லக்கி லூக் மற்றும் பிரின்ஸ் கதைகள்: இன்னும் படிக்கவில்லை. தூள் கிளப்பும் வண்ணம், பளபளப்பான காகிதம் புது புத்தக வாசனை. இவற்றில் இருந்தே தெரிகிறது இந்த கதைகள் ஒரு சிறப்பான வாசிப்பு அனுபவதை கொடுக்கப் போகிறது என்று.

காரிகன் சாகஸம்: வழக்கமான ஒரு குறைகள் இல்லாத காரிகன் சாகஸம்.

வரவிருக்கும் விளம்பரங்கள்: லக்கி, பிரின்ஸ், ஜானி, டெக்ஸ், காரிகன், ஜார்ஜ் என ஒரு பெரிய லிஸ்டே உள்ளது. இவை அனைத்தும் இந்த வருடத்தில் வெளிவரும் பட்சத்தில், 2012 ஒரு அருமையான வருடமாக இருக்கப்போவது உறுதி. அடுத்த எதிர்பார்ப்பு சூப்பர் ஹீரோ ஸ்பெஷ்ல் மீது விழுந்துள்ளதது. ( ஆனால் ஸ்பைடர், ஆர்ச்சி இவர்கள் அடிக்கடி வேண்டாம் என்பது என் கருத்து). என் அபிமான டைகர், ராபின் ஆகியோரரையும் பார்க்க ஆவலுடன் உள்ளேன்.

காமிக்ஸ் கிளாஸிக்கில் ஏற்கனவே கொலைகாரக் கலைஞன் வந்து விட்டது என்று நினைக்கிறேன்??.

விற்பனை முறை:

புத்தக கண்காட்சியில் அறிமுகம் செய்தது சிறப்பான ஐடியா. ஆனால் கம் பேக் ஸ்பெஷல் பற்றி இணைய தொடர்பு இல்லாத மற்றும் புத்தக கண்காட்சிக்கு வராத வாசகர்கள் எப்படி தெரிந்து கொள்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.

அடுத்து வெளிவர இருக்கும் இதழ்கள் கடைகளில் கிடைக்குமா? கிடைக்காது எனில் முன்பதிவு செய்வதற்கான கூப்பன் ஏதும் இந்த இதழில் இல்லை. ஆசிரியர் இதை சற்று விளக்க வேண்டும்.

அட்டைப்படம்:

என்னை பொருத்த வரை லயன் கம் பேக் இதழின் ஒரே ஏமாற்றம் இந்த அட்டைப்பட டிசைன் தான். கதைகளில் உள்ள வண்ணப்படங்களை அப்படியே zoom செய்தது போல் உள்ளது. வழக்கமான பெயிண்டிங் வகை ஓவியம் இல்லாத அட்டைப்படம் ஏனோ மனதில் ஒட்டவில்லை.

கம் பேக் ஸ்பெஷல் வெளியீட்டு நிகழ்ச்சி: விஜயன் சார் புத்தக கண்காட்சிக்கு வந்து இருந்ததையும் எள்ளிமையான ஒரு வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றதையும் பிறகு தான் தெரிந்துகொண்டேன். விஜயன் சாரை சந்திக்கும் வாய்ப்பினை இழந்தற்கு பெரிதும் வருந்ந்துகிறேன்.

2. சித்திரக்கதைகள் @ "யுரேகா புக்ஸ்" (ஸ்டால் 367)

இந்த ஸ்டாலில் குழந்தைகளுக்கான நிறைய சிறிய சிறிய புத்தகங்களை வைத்துள்ளனர். அவற்றில் எண் கண்ணில் பட்ட சித்திரக்க்தைகளை நூல்கள். இந்த இதழ்கள் கண்ணிப்பாக சிறுவர்களுக்கு மட்டுமே. Twinkel இதழ்களில் இடம்பெறும் தரத்துடன் இந்த கதைகள் மற்றும் சித்திரங்கள் உள்ளன. இதழின் தயாரிப்புத்தரம் அருமை. பில் போடும் போதுதான் விலையை கவனித்தேன். 16 பக்கங்களுக்கு 30ரூபாய் ரொம்ப அதிகம். இந்த ஸ்டாலில் வேறு சித்திரக்க்தைகள் இருக்கவும் வாய்பு உண்டு






3. சித்திரக்கதைகள் @ நியு சென்சுரி புக் ஹவுஸ்


பழைய பதிப்பு

சிறிய வயதில் படித்த ரஷ்யாவின் ராதுகோ பதிப்பகத்தின் சித்திரக்கதைகளை மறுபதிப்பு செய்துள்ளனர். வேறு ஒரு அட்டைப்படத்துடன் சற்று சிறிய வடிவில் இந்த முறை நியு சென்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டு உள்ளது. விலை ரூ 60/. அருமையான ஓவியங்கள் மற்றும் சிறு சிறு கதைகள் என காமிக்ஸ் ஆர்வலர்கள் மிஸ் செய்திடக்கூடாத ஒன்று. ஏற்கனவே பழைய பதிப்பு கைவசம் உள்ளதால் இப்ப்போது நான் வாங்கவில்லை. ஏற்கனவே நமக்கு அறிமுகமான ரஷ்ய புரட்சி இன்னும் இங்கு ஸ்டாக்கில் உள்ளது.

4. சே வாழ்க்கை வரலாறு மற்றும் அமெரிக்க பேரரசின் மக்கள் வரலாறு: (புதிய உலகம் - ஸ்டால் 29)

சென்ற வருடம் விஸ்வா அறிமுகம் செய்திட்ட இந்த இதழ்களை இந்த வருடம் வாங்கியாகிவிட்டது. ஸ்டாலின் உள்ளே சென்ற உடனே இந்த புத்தகங்களை எடுத்து வந்து பில் கவுண்டரில் கொடுக்கவும் மிகுந்த ஆச்சிரியத்திற்குள்ளானார் விற்பனையாளர். இந்த வருடத்தின் costly purchase இது தான் என்று நினைக்கிறேன். இதே இதழ்களை வேறு ஒரு பதிப்பகத்திலும் பார்த்தேன்.



விஸ்வாவின் சென்ற வருட புத்தக கண்காட்சி பதிவில் இருக்கும் அனைத்து காமிக்ஸ்களும் இன்னும் இருக்கிறது என்றே எண்ணுகிறேன். இப்போதைக்கு என் கண்ணில் பட்ட இதர காமிக்ஸ்கள் மட்டும் இங்கே.

1. ஈரான் (1&2 பாகங்கள்) - விடியல் பதிப்பகம்
2. தாராவும் குகை மனிதர்களும் - மணிமேகலை
3. சில சுட்டி காமிக்ஸ்கள் - விகடன் பிரசுரம்
4. ரஷ்யப் புரட்சி - நியு சென்சுரி புக் ஹவுஸ்
5. புராண சித்திரக்கதைகள் - அமுத நிலையம் (ஸ்டால் 235)
6. கதை மலர்
7. தமிழ் அமர் சித்திரக்கதைகள் - கிழக்குப் பதிப்பகம்.
8. பலே பாலு - வானதி பதிப்பகம்.

காமிக்ஸ் அல்லாது வாங்கிய சில சிறுவர் இலக்கிய புத்தகங்கள்:

1. வாண்டுமாமாவின் அன்றிலிருந்து இன்று வரை: (வானதி)


நுணுக்கமான அறிவியல் மற்றும் வரலாற்று கட்டுரைகளை கூட வாண்டுமாமா எல்லாருக்கும் புரியும் விதம் எழுதுவதில் வல்லவர். குழந்தைகளுக்கு என அவர் வழங்கிய பல அறிவியல் புத்தகங்கள் பெரியவர்களுக்கும் மிக்க பயன் உள்ளதாக இருக்கிறது. செல்லம் அவர்களின் ஓவியங்களுடன் கூடிய இந்த புத்தகம் என் 'பொது அறிவை' வளர்ப்பதற்காக. வானதியில் இது போல வாண்டுமாமாவின் பல பொது அறிவு புத்தகங்கள் உள்ளன. இவற்றை படித்தால் நீங்கள் கதைசொல்லி என்ற பிம்பத்தை தாண்டிய ஒரு வாண்டுமாமாவினைக் காணலாம். விஸ்வா ஒரு முறை வாண்டுமாமா அவர்களை சுஜாதாவுடன் ஒப்பிட்டு எழுதியதை இங்கு நினைவு கூர்கிறேன்

2. வாண்டுமாமாவின் மர்ம மனிதன்: (வானதி)

சென்ற வருடம் மிஸ் செய்திட்ட ஒரு இதழ். இந்த வருடம் வாங்கியாகிவிட்டது


3. விக்கிரமாதித்தன் கதைகள்: (பிரேமா பிரசுரம்)




விக்கிரமாதித்தன் கதைகள் ஏற்கனவே பல விதங்களில் அறிமுகம் ஆகியிருந்தாலும் ஓவியங்களுடன் கூடிய இந்த இதழ் வித்தியாசமான மொழிநடையில் புதுவித அனுபவத்தை கொடுக்க போகிறது என்று எண்ணுகிறேன். 600 பக்க இதழ் ருபாய் 90 மட்டுமே. இதே இதழ் பெரிய எழுத்துக்களுடன் கடின அட்டை பைடிங் உடனும் கிடைக்கிறது.

4. நல்லதங்காள் கதை:

ஒரு முழுமையான நல்லதங்காள் கதை பற்றிய புத்தகத்தை நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த எனக்கு மணிமேகலை பிரசுரத்தின் இந்த கதைச் சுருக்கமே கிடைத்தது.

பதிவை படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே..