Tuesday, October 4, 2011

சூர்யா காமிக்ஸ்

சிறுவர்களுக்கான பல நூலகளை எழுதியவர் பஞ்சுமாமா (தேவக்கோட்டை பஞ்சுநாதன்). சிறுவர்களுக்கான நீதிக்கதைகள், தெனாலிராமன் கதைகள் மாதிரியான நூல்களை இவர் வழங்கியிருக்கிறார். புத்தகப்பூங்கா பதிப்பகம் மூலம் இவரின் புத்தகங்களை நீங்கள் பார்த்திருக்க கூடும். 1990களில் இவர் வெளியிட்ட சித்திரக்கதை இதழ் தான் சூர்யா காமிக்ஸ். இந்த காமிக்ஸின் 3வது (என்று நினைக்கிறேன்) இதழான 'பனிமலையில் தம்பித்துரை'  பற்றி கொஞ்சமாக இந்த பதிவில் பார்க்கலாம்.

அட்டைப்படம்

ஆசிரியர் பகுதி

கதையின் சில பக்கங்கள்



வாசகர் கடிதம்

புத்தகப் பூங்கா விளம்பரம்

வழக்கம் போல கதை எழுதியவர் பெயர் மற்றும் சித்திரங்களின் சொந்தக்காரர் பற்றிய தகவல் ஏதும் இல்லை.

கதை - இமயமலை ஏறும் குழுவினர் காணாமல் போக, நாட்டில் உள்ள அனைவரும் மண்டையை பிச்சு கொண்டிருக்க, நம் கதையின் நாயகன் தம்பித்துரை தமிழ்நாட்டில் இருந்து இமயமலை கிளம்புகிறான். மலை ஏறும் குழுவினர் ஏன் காணாமல் போயினர் எங்கு இருக்கின்றனர் போன்ற அனைத்து விபரங்களையும் தம்பித்துரை கண்டு பிடிக்கிறான்.

தெளிவான கதையோட்டம், அதற்கேற்ற வசனங்கள், ஓரளவு தரமான சித்திரங்கள் என இந்த இதழ் சராசரியான தமிழ் சித்திரக்கதைகளின் தரத்தை விட சற்று சிறப்பாகவே உள்ளது.  முந்தைய இதழான சிங்கபுரி ரகசியம் இதழ் இல்லை என்றாலும் படித்த ஞாபகம் லேசாக உள்ளது. அதுவும் தம்பித்துரை சாகஸம் தான். சுவாரிஸ்யமான கதை என்றே என் ஞாபகம் உள்ளது

மொத்தம் எத்தனை இதழ்கள் வந்தது என்பது பற்றி தெளிவான கருத்து இல்லை. 4 - 5 இதழ்கள் வந்திருக்க கூடும் என்பது என் எண்ணம்.  நண்பர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

நண்பர் கௌதம் அவர்கள் சூர்யா காமிக்ஸ் பற்றி தெரிவிக்கும் தகவகள் அவரின் வரிகளிலேயே..
""சூர்யா காமிக்ஸின் முதல் வெளியீடு ஓநாய் மனிதர்கள். மூன்று கதைகளும் தினமணி கதிரில் சித்திரத் தொடராக வந்தன. கதை எழுதியவர் கேயார். சித்திரம் -பாலாஜி""