புத்தக கண்காட்சியின் இறுதி நாளன்று சேகரித்த புத்தகங்கள். இதில் நேரடி காமிக்ஸ் என்று பார்த்தால் காமிக்ஸ் கிளாஸிக் மட்டுமே.
மாற்றுவெளி - சித்திரக்கதை சிறப்பிதழ்:
நண்பர்கள் தமிழ் காமிக்ஸ் பற்றி ஆய்விதழான இவ்வெளியீடைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்க கூடும். விஜயன், மருது, ஜெ, மணியம் செல்வன் என்று பல காமிக்ஸ் ஆர்வலர்களின் பேட்டியும் பல இணைய நண்பர்களின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ள இந்த இதழ் ஒவ்வொரு காமிக்ஸ் ஆர்வலரின் கைகளிலும் இருக்க வேண்டிய முக்கியமான புத்தகமாகும். விஜயன் சாரின் மிக விரிவான நேர்காணல் இவ்விதழின் மிக முக்கியமான அங்கம். நிறைய தகவல்கள் புதைந்துள்ள இந்த நேர்காணலை யாரும் மிஸ் செய்திட வேண்டாம்.
கண்காட்சியில் இதழை மிஸ் செய்தோர்க்காக.....
வானதி பதிப்பகம்:
சென்றமுறை வானதியில் மிஸ் செய்திட்ட 'எதிர்நீச்சல்' இதழை இந்த முறை வாங்கியாகிவிட்டது. விசாகன் என்பது வாண்டுமாமாவின் இன்னொரு புனைப்பெயர் என்ற விஸ்வாவின் தகவல் மூலம் இன்னும் இரண்டு புத்தகங்கள் என் வாண்டுமாமா சேகரிப்பில் சேர்ந்து கொண்டன. வாண்டுமாமா தனது மனைவி பெயரில் (அல்லது அவரது மனைவியே) எழுதிய வயலின் வசந்தாவும் வாண்டுமாமா சேகரிப்பில் சேர்ந்து கொண்டது.
திராவிட நாட்டுக் கதைகள்:
பிரேமா பிரசுரத்தின் 'விக்கிரமாதித்தன் கதைகள்' இதழை இன்னும் படிக்கவில்லை. ஆனாலும் புரட்டி பார்த்த பாதிப்பில் வாங்கிய புத்தகம் இது. இவ்விதழும் 500 பக்கங்களுக்கு மேல். ஆனால் விலை ரு100/- மட்டும் தான்.
இறுதியாக....
- நன்றி-

வயலின் வசந்தா
மாஜிக் மாலினி
மாயாவி இளவரசன்
உலகம் சுற்றும் குழந்தைகள்
எதிர்நீச்சல்
திராவிட நாட்டுக் கதைகள்:
பிரேமா பிரசுரத்தின் 'விக்கிரமாதித்தன் கதைகள்' இதழை இன்னும் படிக்கவில்லை. ஆனாலும் புரட்டி பார்த்த பாதிப்பில் வாங்கிய புத்தகம் இது. இவ்விதழும் 500 பக்கங்களுக்கு மேல். ஆனால் விலை ரு100/- மட்டும் தான்.
இறுதியாக....
- நன்றி-
6 comments:
வணக்கம் நண்பரே!
சிறு பிள்ளையிலிருந்தே வாண்டுமாமாவின் அதிதீவிர விசிறி நான். பழைய பூந்தளிர் இதழ்கள், பார்வதி சித்திரக் கதைப் பொத்தகங்கள் ஆகியவற்றைப் பொக்கிஷம் போல் போற்றிப் பாதுகாத்து வருபவன். ஆனால் இணைய உலகம் எனக்கு இரு ஆண்டுகளுக்கு முன்புதான் அறிமுகமானது. அதுவும் தொடக்க காலத்தில் எனக்கு இருந்த வசதிக்கு என்னால் கைப்பேசி வழியாகத்தான் இணையத்தை அணுக முடிந்தது. அண்மையில்தான் கணிணி வாங்கினேன். ஆனால் என் கெட்ட நேரம், நான் கணிணி வாங்கியதிலிருந்து விஸ்வா, அ.கொ.தீ.க முதலான தீவிரப் பதிவர்கள் செயல்படுவதேயில்லை. இந்தத் தளமும் எனக்கு அறிமுகமாகவில்லை. இன்றுதான் உங்கள் தளத்தையும், அதில் ஒரு புதுப் பதிவையும் கண்டேன். மிக்க மகிழ்ச்சி! உங்களைப் போன்ற சிறுவர் இலக்கிய விரும்பிகள் தொடர்ந்து பதிவுலகில் இயங்க வேண்டுகிறேன்!
வாண்டுமாமாவின் வெகுநாள் விசிறியான எனக்கு, அவருக்கு விசாகன் என்றொரு புனைப்பெயர் இருப்பதும், தன் மனைவியின் பெயரிலேயே அவர் ஒரு புதினம் எழுதியிருக்கிறார் எனபதும் தெரியவே தெரியாது. இப்பொழுது இதைப் படித்துதான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி!
நான் அவ்வப்பொழுது விஸ்வா அவர்களின் பழைய பதிவுகளைப் படிப்பது வழக்கம். அப்படி ஒரு முறை படித்துக் கொண்டிருந்தபொழுது வாண்டுமாமா அவர்களின் பல நூல்கள் இன்றும் வானதி பதிப்பகத்தில் இருப்பதாக அவர் கடந்த ஆண்டுப் பதிவு ஒன்றில் கூறியிருந்ததைச் சில மாதங்களுக்கு முன்பு பார்த்தேன். பேசி மூலம் நூல்கள் இருப்பதை உறுதிப்படுத்தியும் வைத்துக் கொண்டேன். ஆனால் கடந்த வாரம் தம்பியை அனுப்பி வாங்கி வரச் சொன்னால் எல்லாப் பொத்தகங்களும் அண்மையில் நடந்த பொத்தகக் கண்காட்சியில் விற்றுத் தீர்ந்து விட்டதாகக் கூறினார்கள். எப்படியும் அவை உங்களைப் போன்ற பதிவர்களிடமோ அல்லது இத்தகைய வலைப்பூக்களைப் படிக்கும் ஆர்வலர்களிடமோதான் சென்று சேர்ந்திருக்கும் என்று யூகித்தேன். இந்தக் கண்காட்சியில்தான் வாண்டுமாமாவின் 'மர்ம மனித'னை வாங்கினேன் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதிலிருந்து அஃது உறுதியாகி விட்டது. உங்களைப் போன்ற ஆர்வலர் ஒருவரிடம் -அதுவும் பதிவர் ஒருவரிடம்- அது சென்று சேர்ந்திருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சியே!
கருத்திற்கு நன்றி ஞானபிரகாசம் அவர்களே.
//எல்லாப் பொத்தகங்களும் அண்மையில் நடந்த பொத்தகக் கண்காட்சியில் விற்றுத் தீர்ந்து விட்டதாகக் கூறினார்கள்//
நான் புத்தக காட்சியின் இறுதி நாளன்று இந்த புத்தகங்களை வாங்கிடும் போது ஒவ்வொரு இதழும் 20க்கும் மேற்பட்ட பிரதிகள் ஸ்டாலில் இருந்தது. முடிந்தால் இன்னும் ஒருமுறை வானதி பதிப்பக அலுவலகத்திற்கே சென்று பார்த்தால் பெரும்பாலான இதழ்களை நீங்கள் வாங்கிடலாம் என் நினைக்கிறேன்
அப்படியா! மிக்க மகிழ்ச்சி!! தகவலுக்கு நன்றி நண்பரே! நான் மீண்டும் முயன்று பார்க்கிறேன்.
அன்பு நண்பரே!
நமது பேரன்பிற்கும், தனிப்பெருமதிப்பிற்கும், ரசனைக்கும் உரிய திரு.வாண்டுமாமா அவர்களுக்கு ஃபேஸ்புக்கில் இதுவரை Fan page இல்லாமல் இருந்தது. எனவே அவருக்காக நான் புதிதாக ஒரு Fan page தொடங்கியுள்ளேன். நீங்களும் அங்கு வந்து உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும் (அதாவது அந்த page-க்கு Like கொடுக்க வேண்டும்) எனவும் உங்கள் வலைப்பூ, ஃபேஸ்புக் அக்கௌண்ட் முதலியவற்றின் மூலம் உங்கள் நண்பர்கள் விசிறிகள் என அனைவருக்கும் இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அன்புடன் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
வாண்டுமாமா பக்கத்துக்கு Like கொடுக்க Vaandumama என ஃபேஸ்புக்கில் தேடுங்கள்! அல்லது சொடுக்குக: http://www.facebook.com/#!/pages/Vaandumama-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/256135227797792
தமிழ் புத்தகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்... தமிழில் முன்னணி பதிப்பகங்களின், 10000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள்...click me
Post a Comment