இது கதை மலர் - ஒரு அறிமுகம் பதிவின் தொடர்ச்சி.......
கதை மலரின் ஓவியர்கள்
ஏற்கனவே குறிப்பிட்ட படி கதை மலரின் 80% சித்திரங்களை ஓவியர் சங்கர் வரைந்துள்ளார். அது மட்டுமல்லாது தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்க்கு நன்கு பரிச்சியமான ஓவியர்கள் பலரை இங்கு பார்க்கலாம். (உ-ம்) செல்லம், வினு, மணியம் செல்வன், ரமணி, சித்ரலெகா, பத்மவாசன், கோபன், தாமரை, ஜயந்தி ஆகியோரின் ஓவியங்களை கதை மலரில் நாம் ரசிக்காலாம்.
10க்கு மேற்பட்டோர் கதை எழுதி உள்ளனர். அதில் வாண்டு மாமா, எ. சோதி (முட்டாள் கதைகள் புகழ்) போன்றவர்களும் அடங்கும். வாண்டு மாமா பீர்பால் கதைக்கு கதையமைப்பு செய்துள்ளார். ஓவியர்கள் அனைவரது கைவண்ணத்தையும் இங்கு நீங்கள் காணலாம்.
ஓவியர் செல்லம்
சித்ரலெகா
ஜயந்தி
கோபன்
தாமரை
ஓவியர் ரமணி
ஓவியர் வினு
பத்மவாசன்
ஓவியர் மணியம் செல்வன்
வாண்டு மாமாவின் பீர்பால் கதை
கதை மலர் Vs அமர் சித்திர கதா
கதை மலரில் இடம்பெற்றுள்ள பல கதைகள் வட இந்தியாவில் இருந்து இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளிவரும் "அமர் சித்திர கதா" இதழிலும் இடம்பெற்றுள்ளன. இரண்டு இதழ்களும் புராண கதைகளை வெளியிடும் பத்திரிக்கைகள் என்பது ஒற்றுமை.
கதை மலரில் கிட்டதட்ட அனைத்து கதைகளும் 4 பக்க கதைகள். (எப்பிடிப்பட்ட புராண சம்பவத்தையும் 4 பக்கங்களில் அடக்கி விடுகிறார்கள்). ACK ல் 32 பக்க கதையாக தருகிறார்கள். கதை மலரில் சாந்தமான தெய்வீகமான் காட்ச்சிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் AKC ல் அதிரடியான ஆக் ஷன் சம்பவங்களுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது. ஓவியங்களில் கதை மலரை ACK யால் மிஞ்ச முடியாது. இந்த ஒப்பீட்டை கதை பகுதிகளில் இருந்து நீங்கள் கண்டு கொள்ளலாம்.
அய்யபன் வரலாறு கூறும் கதையை இந்த இரண்டு இதழ்களிலும் பார்க்க நேரிட்டது. அதில் வரும் ஒரு கட்சியை இரண்டு இதழ்களிலும் பாருங்களேன்...
அய்யபன் மகிஷியுடன் போரிட்டு அவளை வீழ்த்தும் காட்சி (ACK)
அய்யபன் மகிஷியுடன் போரிட்டு அவளை வீழ்த்தும் காட்சி (கதை மலர்)
கதை மலர் ஆங்கில பதிப்பு
கதை மலர் ஆங்கில பதிப்பு - அழகான ஆங்கிலத்தில் மொழிபெயற்ப்பு செய்யப்பட்டு "Pictorial stories for children" எனும் தலைப்பில் வெளியிடப்படுகிறது.
கதை மலர் ஆங்கில பதிப்பு 1990 களின் ஆரம்பத்தி தொடக்கத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. காமிக்ஸில் தமிழ் to ஆங்கிலம் மொழிமாற்றம் வேறு எங்கேனும் செய்யப்பட்டு இருக்கிறதா?? என்க்கு தெரியவில்லை
ஆங்கில இதழின் சில பக்கங்கள் இங்கே...
படித்துவிட்டு கருத்துகளை கூறிடுங்கள் நன்பர்களே....
6 comments:
கதை மலர் மற்றும் அமர்சித்திரக்கதை ஒப்பீடு அருமை. அமர்சித்திரக்கதையின் தரத்திற்கு போட்டி போடவில்லை என்றாலும், நம் கலைஞர்களின் கைவண்ணத்தில் வெளியான பக்கங்களை காண்பதில் ஒரு தனி சுகம் தான். முக்கியமாக செல்லம் கைவண்ணம், என்றென்றும் திகட்டாத விருந்து.
தமிழில் இருந்து ஆங்கில மொழி பெயர்ப்பு அதுவும் காமிக்ஸில், புதிய ஒன்றுதான் என்று நினைக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி சிவ்.
நண்பரே,
பல ஓவியர்களின் கைவண்ணத்தினை சித்திரக் கதை பக்கங்களில் ஒருங்கே காண வைத்து ஆனந்தம் கொள்ள வைத்து விட்டீர்கள். நன்றி.
வினு அவர்களின் சித்திரங்களில் ஒர் தனிக்கவர்ச்சி உண்டு என்று உணர்கிறேன்.
அமர் சித்திர கதாவினை தமிழில் கிழக்கு பதிப்பகத்தின் சிறுவர் பிரிவு வெளியிடப்போவதாகக் கூறுகிறார்கள்.
இவ்வகையான கதைகள் இன்று சிறுவர்களிற்கு அறிமுகப்படுத்தப்படுவது சிறப்பானது என்று கருதுகிறேன்.
சிறப்பான பதிவு நண்பரே.
அருமையான பதிவு. பதிவு தொடர வாழ்த்துக்கள்.
//காமிக்ஸில் தமிழ் to ஆங்கிலம் மொழிமாற்றம் வேறு எங்கேனும் செய்யப்பட்டு இருக்கிறதா?? என்க்கு தெரியவில்லை//
உள்ளது. அதுவும் எண்பதுகளிலேயே. விரைவில் அதனைப் பற்றி நான் ஒரு முழு பதிவு இடுகிறேன்.
ரஃபிக், நமது ஒவ்வொரு கலைஞரின் கைவண்ணம்மும் தனி தனி அனுபவத்தை கொடுக்கிற்து என்பது உண்மை.
கனவுகளின் காதலரே, மற்ற ஓவியர்களின் பக்கங்களில் இருந்து வினு அவர்களின் பக்கம் மட்டும் தனித்து தெரிகிறது என்பதை நானும் உண்ர்கிறேன். கதாபாத்திரங்களின் உண்ர்ச்சி வெளிபாடுகளை தத்ரூபமாக வரைந்து இருப்பதே காரணம் என எண்ணுகிறேன். இதை பொன்னியின் செல்வன் தொடர்க்கு அவர் வரைந்த்திட்ட ஓவியங்களிலும் காணலாம். செல்லம், ரமணி ஆகியோர்களின் ஓவியங்களும் சிற்ப்பாக இருக்கிறது.
அமர் சித்திர கதாவினை கிழக்கு பதிப்பகம் தமிழில் வெளியிடும் செய்தி மகிழ்ச்சியை தந்தாலும், மொழிமாற்றம் செய்யாமல் ஒரு புதிய சித்திர கதை தொடரை தமிழில் உருவாக்கி வெளியிட்டால் இன்னும் சிற்ப்பாக இருக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காமிக்ஸ் பிரியன். உங்களின் மொழிமாற்றம் பற்றிய பதிவை விரைவில் வெளியிடுங்கள். தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.
FROM SPIDER,
GREAT POST THALIVARE.ADI PINNUGA.
Post a Comment