Friday, January 8, 2010

அமுத நிலையத்தின் புராண சித்திரக்கதைகள் (Devotional comics by Amutha)

          புராண சித்திரகதைகள் தமிழ் சித்திரக்கதை உலகிற்கு புதியது அல்ல. பைக்கோ நிறுவனத்தின் அம்ர் சித்திர கதா, கதை மலர், சிறுவர்மலரின் தொடர்கதைகள் மற்றும் ஆனந்தியின் சில சித்திரகதைகள் புராண கதைகளை சித்திரகதை வடிவில் வழங்கும் வழக்கத்தை சிறப்பாக செய்திருந்தன. இதில் புகழ் பெற்ற சித்திரகதை ஓவியர்களை பலரின் கைவண்ணத்தை ஒருங்கே பார்க்கும் அனுபவத்தை கதைமலர் கொடுக்கிறது. இந்த வரிசையில் சென்னையின் அமுத நிலையம் சமயகுரவர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்திரக்கதை வடிவில் வெளியிடத்தொடங்கி இருக்கின்றனர்.
இதன் முதல் புத்தகம் திருஞானசம்பந்தர் பற்றியதாகும். 2003ல் வெளியிடப்பட்ட இப்புத்தகத்தின்  அட்டைபடங்களும் இன்ன பிற பக்கங்களின் ஸ்கேன்களும் உங்கள் பார்வைக்கு...இதில் இரண்டாவது புத்தகமான "திருநாவுகரசர் திவ்ய சரித்திரம்" இதழை இந்த புத்தக கண்காட்சியில் வாங்கினேன்.


சமயகுரவர்களின் வரிசையில் இது இரண்டாவது புத்தகம். முதல் நூல் திருஞானசம்பந்தர் பற்றியது. இந்த "திருநாவுகரசர் திவ்ய சரித்திரம்" நூல் திருவிடைமருதூர் என். இராசேந்திரன் என்பவரின் தனிபட்ட கைவண்ணத்தில் முழு இதழும் உருவாகி உள்ளது.

 டின் டின் புத்தகங்களின் size ல் ஒரு தமிழ் காமிக்ஸை பார்ப்பதே குதூகலம் தான் . புத்தகத்தை 125 ரூபாய் என்ற விலையில் வாங்கும் போது சற்று நெருடலாக தான் இருந்தது. ஆனால் இதழை படிக்கும் போது அந்த நெருடல் குறைந்து விடுகிறது.
எனக்கு புராண கதைகளின் மேல் அந்தளவு ஈர்ப்பு இல்லையென்றாலும் சித்திரக்கதை என்பதால் சீக்கரம் படித்து விட்டேன். கதை சுருக்கம் இதுதான்
 
திருநாவுகரசரின் பெற்றோர்கள் மற்றும் அவரது தமக்கையாருக்கு நிச்சியக்கப்பட்ட மாப்பிள்ளை ஆகியோர் போர் ஒன்றில் மரணமடைந்து விடுகிறார்கள். (சோழர்காலத்து கதை) தனித்து விடப்பட்ட குழந்தைகளில் அக்கா (திலகவதி) சைவ மதத்திலும் தம்பி (திருநாவுகரசர்) சமண மதத்திலும் பற்று கொண்டு வாழ்கின்றனர். தம்பியை சைவ மதத்திற்கு மாற்ற முயலும் திலகவதி அம்மையார் சிவனுடைய உதவியோடு வெற்றி பெறுகிறார். தற்போது முழுமையான சிவபக்தராக இருக்கும் திருநாவுகரசர் மீது சோழ அரசனின் பகைமை பார்வை படுகிறது. இதற்கு அப்புறம் தசாவதாரம் திரைபடத்தில் வரும் காட்சிகள் இந்த கதையிலும் வருகின்றன. (திரைபடத்தில் அரசர் - சைவ மதம், அம்பி - சமண மதம், இந்த கதையில் அப்படியே உல்டா. ஒரே மதத்தினுள் இத்தனை பகைமையா? )கதையில் வரும் தசாவதார காட்சிகள்...

சிவனுடைய அருளால் சோழ அரசனின் அனைத்து இக்கட்டுகள்லிருந்து மீள்கிறார் திருநாவுகரசர். அதன் பிற்கு நெடிய பயனங்கள் மேற்கொண்டு சைவ மதத்தின் அருமைகளை இனிய தமிழ் பாடல்களாக வழங்குகிறார். கதையின் இறுதியில் ரம்பை ஊர்வசி போன்றோரின் கிலுகிலுப்பான சில காட்சிகளும் இடம் பெறுகிறது. அவர்களின் திருநாவுகரசரை காமத்தில் வீழ்த்தும் முயற்சி படுதோல்வியில் முடிவதோடு கதையும் முடிகிறது.


தேவலோக கன்னிகளின் முயற்சிகள்

 
இன்னும் சில சிறந்த ஓவியங்கள்
 
இந்த இதழில் குறிபிடத்தகுந்த விஷயம் திருவிடைமருதூர் என். இராசேந்திரன் அவர்களின் சித்திரங்கள் தான். சித்திரங்கள் அட்டகாசம். அவ்வப்போது தலை காட்டும் பெயிண்டிங் ரக ஓவியங்கள் இன்னும் அருமை. சில இடங்களில் ஓவியர் செல்லம் அவர்களின் சாயல் தெரிகிறது. அமுத நிலயம் வெளியிட்டிருக்கும் மற்றோரு சித்திரக்கதையான திருஞானசம்பந்தர் புத்தக கண்காட்சியில் கிடைக்கவில்லை. நேரடியாக பதிப்பகத்தில் கிடைக்க கூடும்.


நண்பர்கள் பதிவை படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்களேன்...

13 comments:

Dr.Rudhran said...

thank you for sharing this.
if you are interested read nandini on amarchitra katha

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

உங்கள் சேவை தொடரட்டும்

வாழ்துக்கள்

King Viswa said...

ஷிவ்,

இந்த சித்திரங்களை சற்று உற்று பார்த்தால் ஒரு விஷயம் நன்றாக தெரியும். குறிப்பிட்ட சில படங்கள் மட்டும் நன்றாகவும் மற்ற படங்கள் சுமாராகவும் இருக்கின்றன. குறிப்பாக ஏழாவது ஸ்கானும், கடைசி இரண்டு ஸ்கான்'களும் அருமையான சித்திர தரத்தில் இருக்கின்றன.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது மதுரையில் இருந்த ஒரு காலத்தில் வந்த கோல்டன் காமிக்ஸ் தான் நினைவுக்கு வருகிறது.

Rafiq Raja said...

// ஒரே மதத்தினுள் இத்தனை பகைமையா? //

சான்றோர் முறை தொட்டு, வாழ்க்கை நெறிமுறைகளை ஒழுங்குபடுத்த, எழுப்பபட்ட மதங்கள், இன்று கோஷ்டி தகராறில் சிக்கி இடியாப்ப சிக்கலாக தெரிகிறது. காலத்தின் கோலம்.

இவற்றில் இருந்து ஒதுங்கி, சரித்திரத்தின் நிகழ்வுகளை பற்றி தெரிந்து கொள்ள இப்படி பட்ட இதிகாச கதைகள் நமக்கு ஒரு வரப்பிரசாதம் தான். அதுவும், நமக்கு பிடித்த சித்திர பாணி என்பது இன்னும் சிறப்பு.

125 ரூபாயில் சித்திரங்களிற்கான தேவையான நேர்த்தி புத்தகம் முழுவதும் இல்லையென்பது தெரிகிறது. அதற்கு காரணம், திரு.இராசேந்திரன், ஓவியங்கள் வரைவதில் திறமையானவர், ஆனால் சித்திர தொடர்களுக்கு தொடர்ந்து கட்டம் கட்டி ஒரே பக்கத்தில் பல ஓவியங்கள் வரைவதற்கு, பொதுவாக திறமை வாய்ந்த ஓவியர்களால் பொறுமை காக்க முடிவதில்லை. ஆங்கிலத்தில் Illustrator, Comics Artist என்று தனி தனியாக வகைபடுத்துவது இதற்கு தானே.

சில பக்கங்களில் தெரியும் அந்த ஓவிய பாணி புத்தகம் முழுவதும் அமைந்திருந்தால், இந்த புத்தகம் சர்வ மொழியிலும் வெளியிடும் தரத்திற்கு உயர்ந்திருக்கலாம்.

இன்னொரு சித்திர புத்தகத்திற்கான அறிமுகத்திற்கு நன்றி ஷிவ். கண்காட்சியில் இதையும் வாங்கி விடுகிறேன்.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

மீண்டும் ஒரு புதிய அறிமுகம். ஸ்கேன்களிற்கு நன்றி.
புத்தகத்தின் பின்னட்டைப்படம் அட்டகாசமாக உள்ளது :))

Chezhi said...

காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், அரிசிப் பொங்கல், வீட்டுப் பொங்கல், ஹோட்டல் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Lucky Limat - லக்கி லிமட் said...

Siv நண்பரே,
உங்களுக்கு மட்டும் எப்படி நண்பரே இதெல்லாம் கண்ணில் படுகிறது. ஆவலாக உள்ளது வாங்க வேண்டும்.

SIV said...

வருகைக்கு நன்றி Dr. Rudhran. nandini on amarchitra katha கிடைத்தால் படித்து பார்க்கிறேன்.

விஸ்வா, இந்த புத்தகத்தின் சித்திர தரத்தில் continuity இல்லாதது உண்மை. ரஃபிக் கூறூவது போல சிறந்த ஓவியரானாலும் காமிக்ஸில் வரைவதற்கு தனி திறமை வேண்டும் போலிருக்கிறது.

ரஃபிக், நீங்கள் கூறுவது போல் மதங்களின் மேல் என்றுமே தவறு இருந்ததில்லை. மனிதர்கள் தான் மதங்களை கொண்டு சண்டையிட்டு கொள்கிறார்கள்.

SIV said...

கனவுகளின் காதலரே, அழகான பெண்கள் காட்சி தரும் பின்னட்டைப்படம் உங்களுக்கும் எனக்கும் பிடித்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

செழில், இப்படி ஒரு பொங்கல் வாழ்த்தை நான் பார்த்ததே இல்லை. உங்களுக்கும் மற்ற அனைத்து நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

லக்கி லிமிட், ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில் தான் இந்த புத்தகம் கிடைத்தது. வேறு ஒன்றும் இல்லை.

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

தமிழ் காமிக்ஸ் உலக வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய உளம் கனிந்த மனவமுவர்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஒலக காமிக்ஸ் ரசிகன்,
100% உண்மையான பதிவுகள்.
காமிக்ஸ் வேட்டைக்காரன் - பாகம் இரண்டு
தமிழ் காமிக்ஸ் உலகில் காணவே கிடைக்காத பல அரிய காமிக்ஸ் புத்தகங்களின் அருமையான அணிவகுப்பு. எண்பதுகளிலும் தொன்னுருகளிலும் வெளிவந்த சிறந்த தமிழ் காமிக்ஸ் கதைளின் விவரங்கள்.இரும்புக்கை மாயாவிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றிய செய்திகள். பல அரிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு விருந்தாக உள்ளன.

Kumar Tiruppur said...

அருமை..

Kumar Tiruppur said...

அருமை...

Krishna said...

இந்த புத்தகங்கள் இன்றும் கிடைகின்றனவா?