Saturday, January 23, 2010

கல்கியின் மோகினித்தீவு சித்திரக்கதை(Kalki's Mohini theevu in comics)

வணக்கம் தோழர்களே,


பொன்னியின் செல்வன் படித்த காமிக்ஸ் ரசிகர்கள் பெரும்பாலானோர்க்கு பொன்னியின் செல்வனை சித்திரக்கதை வடிவத்தில் பார்க்கும் ஆசை இருக்கும். அந்த ஆசை இன்னும் நிறைவேறவில்லையென்றாலும் கல்கியின் வேறு ஒரு படைப்பை சித்திரக்கதை வடிவத்தில் பார்க்கும் ஆசை சிறிது நாட்களுக்கு முன் நிறைவேறியது. அதற்கான நன்றியை வாண்டுமாமா அவர்களுக்கும் பூந்தளிர் நிறுவனதிற்கும் செலுத்தவேண்டும்.

" கதை - ஆனந்தி, படம் - வினு " இந்த கூட்டணி பல சித்திரக்கதைகளை கோகுலம் இதழில் படைத்திருக்கிறார்கள். சிறிது நாட்களுக்கு பிறகு இந்த கதைகள் பூந்தளிர் இதழிலும் வெளிவந்தன. அப்போது பூந்தளிர் இதழானது ஒரு சிறிய இடைவெளிக்கு பின் வாண்டுமாமா அவர்களின் மேற்பார்வையில் வெளிவர தொடங்கி இருந்தது. கல்கியின் நூற்றாண்டு விழா ஆண்டான 1999 ல் கல்கியின் மோகினித்தீவு சித்திரக்கதை வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது.



கல்கியின் படைப்புகளில் பொன்னியின் செல்வன் போன்ற நெடுங்கதைகளே மிகவும் பிரபலம். ஆனால் மோகினித்தீவு 100 பக்கங்களுள் அடங்கிவிடக்கூடிய குறுங்கதையாகும். மோகினிதீவு கதை உருவானது பற்றி ஒரு சுவையான தகவலை அவரது மகன் திரு கி ராஜேந்திரன் அவர்கள் மோகினித்தீவின் நாவல் வடிவ புத்தகத்தில் கூறிள்ளார்.

முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் 60வது ஆண்டு பிறந்தநாள்க்கு ஒரு சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டது. அதில் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட சிறுகதையே மோகினிதீவு ஆகும். இந்த சிறுகதைதான் பின்னாளில் ஒரு குறு நாவலாக மாற்றி கல்கி இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இந்த கதை ஆயுத குறைப்பு பற்றி குறிப்பிடுவதால் நேருவிற்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.



பர்மாவிலிருந்து கப்பலில் வரும் பாஸ்கர கவிராயர் என்பவர் பயனத்தின் இடையே ஒரு மக்கள் வசிக்காத ஒரு தீவினுள் செல்கிறார். பழைய சோழர்கால சிற்ப்பங்களையும் கலை படைப்புகளையும் பார்த்து வியந்துகொண்டிருக்கும் போது அழகே வடிவான ஒரு பெண் மற்றும் ஒரு ஆடவன் அங்கு வருகிறார்கள். அவர்கள் சொல்லும் கதையே மோகினிதீவு. சோழர்கள் காலத்தில் நடந்த பாண்டிய இளவரசிக்கும் சோழ இளவரசனுக்கும் இடையேயான காதல் கதையை அவர்கள் கூறுகிறார்கள். சோழர்களும் பாண்டியர்களும் பகைமை பாராட்டிகொண்டிருந்த நிலையில் அவர்களுடைய காதல் எப்படி நிறைவேரியது என்பதை சுவாரிஸ்யாமாக விளக்குகிறார்கள்.



100 பக்கங்களில் படிப்பதற்க்கு இனிமையாக வழங்கப்பட்டிருக்கும் இந்த கதையை 16 பக்கங்களில் இனிமை குன்றாமல் வழங்குவது என்பது எளிமை அல்ல. இநத முயற்ச்சியில் ஓரளவே வெற்றி பெற்று இருக்கிறார்கள் ஆனந்தி மற்றும் வினு. 16 பக்கம் தான் என்ற கட்டுபாட்டை மீறி இருந்தால் மிகவும் அருமையான ஒரு சித்திரக்கதையை படித்திருக்கலாம் என்பது என் கருத்து. சித்திரக்கதையில் கதை சுருக்கம் படிப்பது போலவே இருக்கிறது. பெரும்பாலான காதல் காட்சிகளை நீக்கிவிட்டே இந்த சித்திரக்கதையை தொகுத்து இருக்கிறார்கள். எனினும் வினுவின் உயிர்ப்பான சித்திரங்களை பார்த்துகொண்டே இருக்கலாம். நீங்கள் மோகினிதீவு நாவல் வடிவத்தை படிக்காமல் இந்த சித்திரக்கதையை படித்தால் சிறப்பான ஒரு கதையாகவே தெரியும்.

கல்கியின் படைப்பை சித்திரக்கதை வடிவில் படிப்பது எனும் எனது ஆசை ஓரளவு நிறவேறியது என்று கூறலாம். எனினும் பொன்னியின் செல்வன் போன்ற கதைகளை சித்திரக்கதை வடிவில் வழங்குவது தமிழ் சித்திரக்கதை உலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பது என் எண்ணம்.

பதிவை படித்து விட்டு உங்கள் கருத்துகளை வழங்கிடுங்கள்.
 
கல்கியின் மோகினித்தீவு நாவலை online ல் படிக்க இங்கே கிளிக்கவும்

15 comments:

Lucky Limat - லக்கி லிமட் said...

me the first

Lucky Limat - லக்கி லிமட் said...

மறுபடியும் ஒரு காவிய சித்திரக்கதையை அறிமுகபடுத்தி உள்ளீர்கள். அருமை நண்பரே...

//பெரும்பாலானோர்க்கு பொன்னியின் செல்வனை சித்திரக்கதை வடிவத்தில் பார்க்கும் ஆசை இருக்கும்//

ஆமாம் நண்பரே . அதன் சுவை குன்றாமல் சித்திரக்கதை வடிவத்தில் வந்தால் பலரும் வாங்குவர் என்பதில் ஐய்யமில்லை. வந்தியதேவன், பொன்னியின் செல்வன் ஆகியோரை சித்திரக்கதை வடிவத்தில் பார்க்க யாருக்கு தான் ஆர்வம இருக்காது?

அன்புடன்,
லக்கி லிமட்

தமிழ் காமிக்ஸ் - கிமுவில் சோமு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நன்றி சிவ்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பின் தொடர்பவர் பட்டியல் எங்கே தலைவரே..,

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

நல்லதொரு அறிமுகம். நன்றி.

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

இந்தக் கதைதான் ஆயிரத்தில் ஒருவனுக்கு INSPIRATION என்று தகவல்! கதையின் PLOT SIMILAR ஆகத்தான் உள்ளது!

ஆனால் இது காமிக்ஸ் வடிவில் அதுவும் 1999-ல் பூந்தளிரில் வந்துள்ளது என்பது இன்ப அதிர்ச்சி! அந்த சமயத்தில் பூந்தளிர் நின்றுவிட்டது என்றே எண்ணியிருந்தேன்! தகவல்களுக்கு நன்றி!

தலைவர்,
அ.கொ.தீ.க.

SIV said...

தங்களது முதன்மையான கருத்துக்கு நன்றி லக்கி லிமிட். பக்க கணக்கை பார்க்காமல் இன்னும் சிறிது சிரத்தை எடுத்து இந்த கதையை கொடுத்து இருந்தால் உங்களுடைய "காவிய சித்திரக்கதை" அடைமொழி இன்னும் சிறப்பாக பொருந்தும்

SIV said...

suresh, பின் தொடர்பவர்கள் யாரும் இல்லை என்பதே உண்மை. எனினும் உங்களது விசாரிப்புக்கு பின் follower list ஐ சைடில் சேர்த்து விட்டேன்

SIV said...

வருகைக்கு நன்றி கனவுகளின் காதலரே,

டாக்டர் அவர்களே, ஆயிரத்தில் ஒருவனுக்கும் மோகினிதீவிற்க்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனால் செல்வராகவன் மோகினிதீவு கதையே முழுமையாக தழுவி இருந்தால் படம் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கும் என்பது என் கருத்து. என்ன சொல்கிறீர்கள்?

ஓவியர் தங்கம் அவர்களின் இராஜகம்பீரம் கதை கூட ஆயிரத்தில் ஒருவன் கதையுடன் சில ஒற்றுமைகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது

Rafiq Raja said...

பூந்தளிரின் முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்க்ஸ் முழுவதும் அவற்றின் தீவிர ரசிகனாக இருந்தேன். கடையில் அந்த சமயங்களில் ரத்னபாலாவும் போட்டிக்கு இருக்கும். ஆனால், கையில் காசு கம்மியாக இருந்தால், நான் வாங்கும் ஒரே இதழ் பூந்தளிராக தான் இருக்கும்.

இப்படிபட்ட சித்திரகதைகள், கூடவே டிங்கிள் கதைகளின் தமிழாக்கம் என்பவை தான் அதன் அட்ராக்ஷனே. இந்த கதை கொஞ்சம் கொஞ்சம் நினைவிருக்கிறது... உங்கள் பதிவிற்கு பிறகு, திரும்பவும் எடுத்து படிக்க போகிறேன்.

King Viswa said...

ஷிவ்,

தாமதத்திற்கு மன்னிக்கவும். என்னுடைய பயண களைப்பும், இணைய இணைப்பான் செய்த சதியாலும் என்னால் கமெண்ட் இட இயலவில்லை.

இந்த பதிவு வருவதற்கு முன்பே நான் இந்த கதையை பற்றி மேதகு பயங்கரவாதி டாக்டர் செவனிடம் சொல்லி இருந்தேன் (ஆனால், அவர் அதனை இடவில்லை என்பது வேறு விஷயம்). அநேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் இது சம்பந்தமான ஒரு பதிவை அவரிடம் இருந்து எதிர்பாருங்கள்.

கடந்த இரண்டு மாதங்களாக இந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றி அந்த படக் குழுவினரிடம் இருந்து எனக்கு பல தகவல்கள் வந்துக் கொண்டே இருந்தன. குறிப்பாக ஒரு புகழ் பெற்ற முத்து காமிக்ஸின் தழுவல் தான் இந்த கதை என்று. ஆனால், சமீபத்தில் இந்த இயக்குனர் அதனை மறுத்து விட்டார். அப்போது நான் அந்த படத்தை பார்க்காததால் என்னால் மோகினி தீவை பற்றி கேட்க இயலவில்லை. ஆனால், படம் வந்தபின் இன்னமும் இயக்குனரை சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை.

மோகினி தீவின் பிளாட் ஒரு அருமையான ராபின்சன் க்ருசோ கான்செப்ட். அதனுடைய மையக் கருவும் இந்த ஆயிரத்தில் ஒருவன் மையக் கருவும் ஒருங்கே இருப்பது கோ இந்சிடேன்ஸ் மட்டுமில்லை.

ஸ்கான்களை சற்று சரி பாருங்கள்.

SIV said...

ரபிஃக், கருத்துக்கு நன்றி.
ரத்தினபாலாவா பூந்தளிரா என்று வரும் போது நம்மை போன்ற காமிக்ஸ் ரசிகர்களின் தேர்வு எப்போதுமே பூந்தளிர் தான்.
1999 ஆம் ஆண்டு மறுமலர்ச்சியுடன் வெளியிடப்பட்ட பூந்தளிர் இதழ்களில் டிங்கிள் கதைகளின் தமிழாக்கம் வெகுவாக குறைக்கப்பட்டு இருந்தது (முந்தைய இதழ்களுடன் ஒப்பிடுகையில்). கபீஷ் மட்டுமே தொடர்ந்த இடத்தை பெற்று இருந்தான்.

SIV said...

விஷ்வா, தங்களது கருத்துக்கு பின் ராபின்சன் க்ருசோ பற்றி விக்கிபீடியாவில் படித்தேன். ராபின்சன் க்ருசோவிற்கும் மோகினிதீவிற்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும் அப்பாவிகளை கொன்று குவிக்கும் மனப்பான்மை மோகினிதீவின் எந்த கதாபாத்திரத்துக்கும் இல்லை என்பது முக்கியமான வேறுபாடாக தெரிகிறது.

அப்பாவிகளை கொடுமைபடுத்துவது என்பது தமிழர்களின் மனப்பான்மை இல்லை என்பதால் தான் ஆயிரத்தில் ஒருவனின் இரண்டாம் பகுதி பெரும்பாலானோருக்கு பிடிக்கவில்லை என நான் நினைக்கிறேன்.

எது எப்படி இருந்தாலும் ஆயிரத்தில் ஒருவன் கதை அமைப்பை ஒட்டிய பல காமிக்ஸ்கள் தமிழில் வந்துள்ளது என்பது தெளிவு.
உதாரணத்துக்கு மோகினிதீவு, இராஜகம்பீரம், நீங்கள் குறிப்பிடும் முத்து காமிக்ஸ் போன்ற கதைகளை எடுத்துகொள்ளலாம்.

நீங்கள் குறிப்பிடும் முத்து காமிக்ஸ் என்ன என ஊகிக்க முடியவில்லை. என்ன முத்து காமிகஸ் அது

King Viswa said...

இந்த வார இறுதியில் பயங்கரவாதி டாக்டர் 7'ன் பதிவை படியுங்கள் அல்லது ஒலக காமிக்ஸ் ரசிகனின் அடுத்த பதிவுக்கு காத்திருங்கள். இந்த இரண்டு பேருமே இந்த படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.

Unknown said...

Please anybody tell me where can I buy "ஓணாய் கோட்டை" சித்திர‌ கதை