Sunday, November 14, 2010

ரஷ்ய சித்திரக்கதைகள் (Russian comics)

சிறிது நாட்களுக்கு முன்பு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் வலை தளத்தில் புத்தக வாசிப்பு பற்றிய ஒரு கட்டுரையில் தன் சிறு வயதில் படித்த படக்கதை ஒன்று பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

அந்த பதிவினை படிக்க இங்கே கிளிக்கவும்
\\\சிறுவயதில் படித்த படக்கதை ஒன்று.

ஒரு பூனை ஒன்று நூல்கண்டை உருட்டிக் கொண்டிருக்கிறது. நூல் உருண்டு உருண்டு போகிறது. பூனை நூலின் பின்னாலே விரட்டி போகிறது. முடிவில் நூல் முடிந்துவிடுகிறது. பூனை நூல் எங்கே போனது என்று புரியாமல் திகைத்து போய் நிற்கிறது. அந்த திகைப்பு அற்புதமானது.இந்த சித்திரக்கதை எனக்கு மிகவும் பிடித்தது. எட்டே வண்ணச்சித்திரங்கள். வெறுமையை புரிந்து கொள்ள முடியாத பூனை தான் வாசகனின் மனது.\\\
இதை படித்த உடன் என் மனதில் அட இது போன்ற ஒரு கதையை நாம் எங்கயோ படித்திருக்கிறோமே என்று பட்டது. அப்போதே அடுத்த முறை ஊருக்கு போகும் போது பழைய புத்தகங்களை புரட்டி போட்டாவது இந்த சித்திரக்கதை எதில் வந்தது என பார்த்து அந்த இதழை எடுத்திட வேண்டும் என் எண்ணிக்கொண்டேன். அவ்வாறே திபாவளி விடுமுறையில் ஊருக்கு சென்ற போது சில மணி நேர தேடல்களின் முடிவில் அவ்விதழினை கையகப்படுத்தினேன்.
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிடும் அந்த சித்திரக்கதை மற்றும் அவ்விதழின் அட்டைபடம் இதோ....

அட்டைப்படம்

பூனையும் நூல்கண்டும்

அனேகமாக இந்த புத்தகம் தான் எனக்கு முதன்முதலில் வாங்கி கொடுக்கபட்ட புத்தகம் என எண்ணுகிறேன். இந்த இதழ் ரஷ்யாவின் ராதுகோ பதிப்பகம் இந்தியாவின் நியு சென்சுரி புக் ஹவுஸ் மூலமாக 19வெளியிட்டு இருக்கிறது. அட்டகாசமான அச்சுத்தரம், சிறப்பான சித்திரங்கள், வேடிக்கையான கதைகள் என ஒரு சிறந்த குழந்தைகள் புத்தகமாக திகழ்கிறது.  Off course இன்று இந்த புத்தகங்கள் கிடைப்பதில்லை.
இதே இதழில் இடம்பெறும் வேறு சில சித்திரக்கதைகள். சித்திரக்கதைகளுக்கான தலைப்புகள் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது.

தவளைகளின் அட்டகாசம்


எங்கே என் தொப்பி

வால் இழுக்கும் போட்டி


இந்த எளிய சித்திரக்கதைகள் எப்படி இருக்கின்றன?? படித்துவிட்டு பதிவை பற்றிய உங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டுகிறேன்.
அப்புறம் சொல்ல மறந்து விட்டேன்.  இரத்தப்படலம் கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்னை போன்ற கிடைக்காதோர்க்கு சீக்கிரம் கிடைக்க வாழ்த்துக்கள்

Update on 09/01/12 :

Reprint of the above book is available in NCBH. With different coverpage. Price-Rs 60/-. For more details see here.


19 comments:

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

மீ த ஃபர்ஸ்ட்டு!

பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

தலைவர்,
அ.கொ.தீ.க.

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

கடைசி மூன்று படக்கதைகளும் பெரிதாக மறுக்கின்றன! தயை கூர்ந்து அவற்றை பெரிதாக்கி படிக்க உதவுங்களேன்!

NCBH-ல் உள்ளா பழைய ஸ்டாக்கில் இது போல் சிலபல அரிய பொக்கிஷங்கள் கிடைக்க இன்னும் வாய்ப்புள்ளது! தீவிரமாகத் தேடினால் கிடைக்ககூடும்!

சிறு வயது நினைவுகளை மீண்டும் ஒரு முறை தூண்டி விட்டமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

தலைவர்,
அ.கொ.தீ.க.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

என் சிறுவயதில் படித்து மகிழ்ந்த புத்தங்களில் ஒன்று. அருமையான நினைவுகளை அருகில் எடுத்து வந்த உங்கள் பதிவிற்கு நன்றி நண்பரே.

King Viswa said...

//கடைசி மூன்று படக்கதைகளும் பெரிதாக மறுக்கின்றன! தயை கூர்ந்து அவற்றை பெரிதாக்கி படிக்க உதவுங்களேன்!//

ஒருவேளை படங்களை ஸ்கான் செய்ததே அந்த அளவில்தானோ என்னவோ?

நானும் இந்த கதைகளை படித்துள்ளேன். ஐ தின்க், இன்னமும் எங்கள் வீட்டின் ஏதோ ஒரு புத்தகப்பெட்டியில் இந்த புத்தகம் இருக்கிறது.

Muruganandan M.K. said...

எனது பிள்ளைகளுக்காக வாங்கி நானும் படித்து ரசித்தீருக்கிறேன். ஞாபகப்படு்தியதற்கு நன்றி

புலா சுலாகி said...

சிவ்,
பல மாதங்கள் கழித்து பதிவிட்டமைக்கு நன்றி. சிறப்பான பதிவு. அப்படியே என்னுடைய சிறுவயது நினைவுகளை தூண்டிவிட்டது.

SIV said...

டாக்டர் அவர்களே, ""மீ த ஃபர்ஸ்ட்டு!"" ல் உங்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை போலிருக்கிறது.
//கடைசி மூன்று படக்கதைகளும் பெரிதாக மறுக்கின்றன! தயை கூர்ந்து அவற்றை பெரிதாக்கி படிக்க உதவுங்களேன்//
uploading ரொம்ப மெதுவாக இருந்ததினால் சிறிதாக்கி வெளியிட்டேன். நேரம் கிடைக்கும் போது சரியான அளவில் ஸ்கேன்களை பதிப்பித்தால் போயிற்று.

SIV said...

கனவுகளின் காதலரே, தங்களின் கருத்திற்கு நன்றி.

SIV said...

விஸ்வா, தங்களின் சேகரிப்பில் இந்த இதழ் இருப்பதில் மகிழ்ச்சி.

உங்களுடைய இரத்தப்படலம் தொடர்பான பதிவிற்காக காத்திருக்கிறேன். இன்னும் மூன்று நாட்களே உள்ளன.

SIV said...

Dr.எம்.கே.முருகானந்தன் சார், தங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன் நான். (பின்னூட்டம் இடாமல்)தங்களின் சித்திரக்கதை வளைதளத்திற்கான வருகை மகிழ்ச்சி அளிக்கிறது

SIV said...

புலா சுலாகி, தங்களின் கருத்திற்கு நன்றி. உங்கள் தளத்தில் விரைவில் பதிவு ஒன்று போடுங்கள்

Cibiசிபி said...

வாவ் சூப்பர்

என்னிடமும் இதே புத்தகம் உள்ளது ஆனால் முழுதாக இல்லை
சேலம் NCBH புத்தக கண்காட்சியில் சிறுவயதில் வாங்கியது

இது போன்ற தங்களுடைய சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் :))
.

Cibiசிபி said...

// அப்புறம் சொல்ல மறந்து விட்டேன். இரத்தப்படலம் கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்னை போன்ற கிடைக்காதோர்க்கு சீக்கிரம் கிடைக்க வாழ்த்துக்கள் //

என்ன கொடுமை சார் இது !! :((
கண்டிப்பாக வந்திருக்க வேண்டுமே
கொரியர் அலுவலகத்தில் விசாரித்து பாருங்கள்
.

SIV said...

கருத்திற்கு நன்றி சிபி.
//கண்டிப்பாக வந்திருக்க வேண்டுமே
கொரியர் அலுவலகத்தில் விசாரித்து பாருங்கள் //
நாளை அதுதான் முதல் வேலை சிபி.

SIV said...

எனக்கே தெரியாமல் வந்து விழுந்த அந்த போஸ்டுக்கு மன்னிக்கவும். அதற்கும் தங்களுடைய மேன்மையான கருத்துகளை பதிவிட்டதற்கு நன்றி டாக்டர் மற்றும் விஸ்வா.

சந்தனமுல்லை said...

WOW! I still have this book. ஆனா அட்டைதான் கிழிஞ்சு போச்சு...எனக்கு பிடித்த புத்தகத்தை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி. எறும்பு குடும்பத்தின் கதை புத்தகம் ஒன்று இருக்குமே...தகர டப்பாவில் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் தேநீர் விருந்து கூட நடத்தும்....

Shiv said...

Dear Sir, Can you give the name of this book and the name of the publication in english?

Shiv said...

Dear Sir,
Can you give the name of this russian book in English along with its publications. Thanks & Rgds.,

SIV said...

Dear Shiv,
Its Raduga Publishers, Moscow, Russia. For more details,

http://www.publishersglobal.com/directory/publisher.asp?publisherid=6133.