Thursday, July 22, 2010

தமிழ்வாணன் - சில சித்திர துளிகள் (Tamilvannan and comics)

வணக்கம் நண்பர்களே,

வீடு மாற்றம், கால்பந்து மற்றும் BSNL லின் "அற்புத" சேவை ஆகிய காரணங்களால் சிறிது நாட்களாக பதிவிட முடியவில்லை. தமிழ் எழுத்தாளர்களில் தமிழ்வாணன் அவர்கள் மிக முக்கியமானவர். மிக வித்தியாசமானவர் கூட. தமிழில் துப்பறியும் நாவல்களை பிரபலப்படுத்தியவர் இவர்தான் என கூறலாம். நாவல் உலகின் நட்சத்திரமாக விளங்கிய தமிழ்வாணன் ஒருசில சித்திரக்கதைகளையும் படைத்திருப்பதாக அறிகிறேன். இவருடைய சித்திரக்கதைகளுக்கும் சரி நாவல்களிலும் சரி ஓவியர் ராமுவின் கைவண்ணமே அதிகம் தென்படுகிறது. இதோ என் கையில் கிடைத்த தமிழ்வாணனின் சித்திரக்கதை இதழின் சில பக்கங்கள்....

 

சென்னையில் படித்துகொண்டிருக்கும் சிங்கப்பூர் தொழிலதிபரின் மகன் துரைவேல் கப்பல் ஒன்று மூலமாக ஊருக்கு திரும்புகிறார். கப்பல் போய்கொண்டிருக்கும் போது சிறிய புயல் ஒன்று கப்பலை தாக்குகிறது. ஆனாலும் கப்பல் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்புகிறது. ஆனால் புயல் ஓய்ந்தபின் துரைவேலை காணவில்லை. துரைவேல் இல்லாமலே கப்பல் சிங்கப்பூர் அடைகிறது. துரைவேல் என்ன ஆனார்?? உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை சுவையாக சொல்லி இருக்கிறார் தமிழ்வாணன். ராமுவின் அற்புதமான சித்திரங்களில் இந்த கதை ஒரு சிறந்த தமிழ் சித்திரக்கதையாக விளங்குகிறது. கதையில் எதிர்பாராத திருப்பங்களுக்கு பஞ்சம் இல்லை. ஒரு குரங்கானது முக்கிய பாத்திரத்தில் வருகிறது. அதன் தியாக உள்ளம் மற்றும் உதவும் குணம் நெஞ்சை தொடுவதாக இருக்கிறது. தமிழில் படைக்கப்பட்ட சித்திரக்கதைகளில் முக்கிய இடம் "திரும்பி வரவில்லை" க்கு கண்டிபாக உண்டு. இந்த இதழின் அட்டைபடமும் அட்டகாசமான ஒன்று. இவ்விதழின் சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு...




 
தமிழ்வாணனின் துப்பறியும் நாவல்கள்:


'மனசில என்ன துப்பறியும் புலி சங்கர்லால் என நினைப்போ' என்று பேச்சு வழக்கில் வரும் அளவிற்கு சங்கர்லால் புகழ் பெற்ற ஒரு துப்பறியும் கதாநாயகனாக விளங்கினார்.பழைய கல்கண்டு இதழ்களில் சங்கர்லால் எனும் பாத்திரம் உயிருடன் உலாவது போன்றே தகவல்கள் வருமாம். முதலில் சங்கர்லால் துப்பறியும் நாவல்களை எழுதிய தமிழ்வாணண் பிறகு அவரது நாவல்களில் தானே நாயகன் ஆகிகொண்டார். (தற்போதைய தமிழ் இயக்குனர்கள் போல). தனித்தனி புத்தகங்களாக வெளிவந்த சங்கர்லால் புத்தகங்கள் தற்போது மூன்று தொகுதிகளாக அட்டகாசமான வடிவமைப்பில் விற்பனைக்கு கிடைக்கிறது. பழைய சில புத்தகங்களில் சில இன்னும் தனி நாவலாக கிடைக்கிறது. அவற்றில் சிலவற்றின் அட்டைபடங்கள்..

 
தமிழ்வாணன் எழுதிய பல நாவல்கள் கல்கண்டு புத்தகத்தில் தொடராக வந்தவையே.. அத்தகைய தொடர்களில் ஓவியர் ராமுவின் கைவண்ணங்கள்...

 






கனவுகளின் காதலர் சீறிபாயும் கார்கள் பற்றி கூறியிருந்தார். பழைய கல்கண்டு புத்தகங்களை புரட்டி பார்த்ததில் ஓவியர் ராமுவின் கைவன்ணத்தில்  நிறையவே கார்கள் சீறுகின்றன. சில படங்கள்..

AMIT என்ற காமிக்ஸ் இதழில் சங்கர்லால் கதைகள் சித்திரக்கதைகளாக மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. இங்கே இருக்கும் இதழ்கள் தவிற வேறு சில சங்கர்லால் சித்திரக்கதைகளும் வெளியிடப்படிருப்பதாக நண்பர் விஸ்வா ஒருமுறை கூறினார்.


பின்குறிப்பு : இது திரு தமிழ்வாணன் பற்றிய முழு தகவல் களஞ்சியம் அல்ல. என்னிடம் இருக்கும் தமிழ்வாண்னின் படைப்புகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியே. தமிழ்வாணனின் சித்திரக்கதை முயற்சிகள் பற்றி வேறு தகவல்கள் இருப்பின் பின்னூட்டம் மூலம் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

18 comments:

Rafiq Raja said...

சிவ், தமிழ்வாணணின் சித்திர கதைகளை சிறு வயதில் எங்கோ படித்த நியாபகம் இருக்கிறது, ஆனால் கைவசம் ஒரு புத்தகமும் நினைவிற்கு இல்லை. அதை நிவர்த்தி செய்யும்விதமாக ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.

நண்பர் ஒருவர் தமிழ்வாணணை தான் கண்ணாடி இல்லாமல் நேரில் பார்த்து இருப்பதாக பெருமையுடன் கூறி கொள்வார். அவர் தொப்பி, கண்ணாடியின் அடிப்படையே, வேதாளர் போன்ற கதாபாத்திரங்களின் தாக்கமே என்று விவரித்திருக்கிறார். மனிதரின் ஒவ்வொரு புகைபடத்தையும் காணும் போது, அது சரியாக தான் இருக்குமோ என்று தோன்றுகிறது. அந்த நாவல்களில் அவர் போஸ், தாங்க முடியவில்லை :)

சித்திரக்கதையிலும், நாவலிலும் ஒவியர் ராமுவின் கைவண்ணம் அதீத நேர்த்தி. ஆரம்ப காட்சியில் ஒரு முழு பக்கத்திற்கு படம் வரைந்து, சர்வதேச தரத்திற்கு நம்மாலும் முனைய முடியும் என்று நிரூபித்திருக்கிறார். இவரின் தற்போதைய படைப்புகளை அதிகம் காண முடிவதில்லை என்பது வருத்தமே. அவரை பற்றிய மேல் விவரங்களோ, அல்லது புகைப்படமோ இருந்தால், இல்லை கிடைக்கபெற்றால், கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள். (அவர் கையொப்பத்தை ஆரம்ப காலத்தில் பார்க்கும்போது, அது ராழி என்று நினைத்திருநதேன்)

நீங்கள் கொடுத்திருக்கும் அமித் காமிக்ஸ், இரண்டும் என் கைவசம் இல்லை, ஆனால் அதே நிறுவனத்தில் இருந்து வெளிவந்த வேறு சில புத்தகங்கள் இருக்கின்றன. மொத்தம் எத்தனை புத்தகம் வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

சிறுவயதில் சங்கர்லால் கதைகள் என்றால் விரும்பிப் படிப்பேன். அவர் அசிஸ்டென்டாக வரும் கத்தரிக்காய் பாத்திரமும் பிடிக்கும்.

கல்கண்டின் ஆஸ்தான ஓவியராக ராமு இருந்தார் என்றால் அது மிகையல்ல. அதுவும் தமிழ்வாணனின் ஜகுவார் கார் சீறிப் பாயவதுபோல் அவர் வரைந்த ஒரு சித்திரம் இப்போது நினைவிற்கு வருகிறது.

ஒரு தொப்பி, ஒரு கூலிங்கிளாஸ் இதனையே தன் ட்ரேட் மார்க்காக மாற்றி வெற்றி கண்டவர் தமிழ்வாணன்.

நீண்ட நாட்களின் பின் அரிய ஒரு பதிவு. சிறப்பாக இருக்கிறது.

King Viswa said...

நண்பரே,

// மற்றும் BSNL லின் "அற்புத" சேவை //
நீங்கள் BSNL பற்றி குறைகூறுகிறீர்கள்.

நானோ, பயணங்களின் போது ரிலையன்ஸ், டாடா போட்டன் பிளஸ் மற்றும் எங்கும் உள்ள நெட்வர்க் கொண்ட ஏர்டல் மீது கடுப்பாகி அடுத்தவாரம் முதல் BSNLஇன் 3G இணைப்பிற்கு மாறுகிறேன்.

King Viswa said...

//தமிழில் படைக்கப்பட்ட சித்திரக்கதைகளில் முக்கிய இடம் "திரும்பி வரவில்லை" க்கு கண்டிபாக உண்டு//

உண்மைதான். அதேசமயம் மற்றுமொரு பெருமையும் இதற்க்கு உண்டு. ஆம், இந்த கதை உண்மையில் 1959ஆம் ஆண்டு (+2 அல்லது -2 Years) வெளிவந்தது. அந்த கதையானது பின்னர் யாரிடமும் இல்லாமல் போய் விட்டதால் (Lost forever without any copy) ராமுவை கொண்டு மறுபடியும் வரைய வைத்த கதை இது.

1959 ஆம் ஆண்டு வந்த பல அரிய கல்கண்டு இதழ்களை கைப்பற்றிவிட்டேன். விரைவில் அவற்றை மெயிலில் அனுப்புகிறேன்.

King Viswa said...

எனக்கு தெரிந்த வரையில் கடைசியாக இருந்த மூன்று திரும்பி வரவில்லை புத்தகங்களையும்கூட நண்பர் ஒலக காமிக்ஸ் ரசிகர் சென்றவாரம் கைப்பற்றிவிட்டார். ஆகையால், இந்த புத்தகம் அவுட் அப் ஸ்டாக்.

ஒரு விஷயம் தெரியுமா? இந்த புத்தகம் பதிப்பித்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன.

SIV said...

முதன்மையான கருத்திற்கு நன்றி ரபிஃக், ராமுவின் சித்திரங்கள் சர்வதேச தரத்திற்கு சவால் விடுபவை தான். சித்திரக்கதைகள் விட நாவல்களில் இன்னும் நன்றாக இருக்கிறது.

SIV said...

கனவுகளின் காதலரே, தங்களுக்கு விருப்பமான கார் படங்களை பதிவில் சேர்த்தாகி விட்டது. காதலர் அழகான அம்மணிகளை விட்டு விட்டு கார்களை பற்றி பேசுவது வியப்பாக இருக்கிறது.

SIV said...

//ரிலையன்ஸ், டாடா போட்டன் பிளஸ் மற்றும் எங்கும் உள்ள நெட்வர்க் கொண்ட ஏர்டல் மீது கடுப்பாகி அடுத்தவாரம் முதல் BSNLஇன் 3G இணைப்பிற்கு மாறுகிறேன்//

நமக்கிருக்கும் வாடிக்கையாளர் உரிமைகளை சரிவர நாம் பயன்படுத்தாத வரை நம் தலையில் MNCகள் மிளகாய் அரைக்கத்தான் செய்வார்கள்

//பின்னர் யாரிடமும் இல்லாமல் போய் விட்டதால் (Lost forever without any copy) ராமுவை கொண்டு மறுபடியும் வரைய வைத்த கதை இது//

நானும் கேள்விபட்டேன் விஸ்வா. ஒன்று மட்டும் எனக்கு புரியவில்லை அலுவலகம் எல்லாம் வைத்து பத்திரிக்கைகள் நடத்துபவர்களால் குறைந்தபசம் ஒரு இதழையாவது பத்திரமாக வைத்து கொள்ள இயலாதா?

King Viswa said...

//நானும் கேள்விபட்டேன் விஸ்வா. ஒன்று மட்டும் எனக்கு புரியவில்லை அலுவலகம் எல்லாம் வைத்து பத்திரிக்கைகள் நடத்துபவர்களால் குறைந்தபசம் ஒரு இதழையாவது பத்திரமாக வைத்து கொள்ள இயலாதா?//

கண்டிப்பாக இயலாது. நான் உங்களுக்கு ஒரு தகவல் கூறுகிறேன் கேளுங்கள். சன் டிவி நிறுவனத்தினரின் குங்குமம் புத்தகத்தின் கடந்த பத்தாண்டு புத்தகங்களே அவர்களிடம் இல்லாமல் போய் மிகவும் சிரமப்பட்டு இப்போதுதான் அந்த லைப்ரரியை சரி செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பல அலுவலகங்களுக்கு இடம் மாறுவது, நிர்வாகமே கைமாறுவது, தலைமை அதிகாரிகள் பெயர்வது, தீ விபத்துக்கள், இயற்கை அசம்பாவிதங்கள், என்று பல விஷயங்கள் உள்ளன.

உதாரணம் ஒன்று (தீ விபத்துக்கள்): மூன்றரை வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் ராணி சிண்டிகேட்டில் இருந்த பல மாடிகள் சேதமாகி விட்டன. பல ஆவணங்களும், புத்தகங்களும் அழிந்துவிட்டன.

உதாரணம் இரண்டு (நிர்வாகமே கைமாறுவது) : அமர் சித்திரக் கதைகள் (இதனை பற்றி சுவையான விவரங்களை என்னுடைய அடுத்த பதிவில் பாருங்கள்).

உதாரணம் மூன்று (பல அலுவலகங்களுக்கு இடம் மாறுவது): ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸ் மற்றும் மதி காமிக்ஸ் (இந்த நிறுவனத்தினரிடம் அவர்கள் வெளியிட்ட பல இடஹ்கள் இல்லவே இல்லை).

இப்படியாக பல உதாரணங்களை என்னால் கூறிக்கொண்டே செல்ல முடியும். ஆனால் என்ன பயன்? லைப்ரரியின் முக்கியத்துவத்தை நமது ஆட்கள் உணருவதே இல்லை.

இவ்வளவு ஏன்? அருமை நண்பர், கிரைம் கதை மன்னன் திரு ராஜேஷ் குமார் அவர்களே அவர் எழுதிய பல நாவல்கள் அவரின் கைவசம் இல்லாமல் தேடிக்கொண்டு இருக்கிறார். கடந்த முப்பதாண்டு காலத்தில் எழுதிய இந்திய அளவில் அதிகம் விற்பனையாகும் ஒரு எழுத்தாளரின் புத்தகங்களே கிடைக்காத பட்ச்சத்தில் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வந்த கல்கண்டு கிடைப்பதென்பது குதிரை கொம்பே.

மட்டுமொரு விஷயம்: புத்தகங்களையும், ஸ்பெஷல் வெளியீடுகளையும் பாதுகாத்து வைக்கும் பதிப்பகங்கள், தினசரி, வார-மாத இதழ்களை பாதுகாப்பதில்லை. அக்கறையும் எடுப்பதில்லை.

King Viswa said...
This comment has been removed by the author.
King Viswa said...

//லைப்ரரியின் முக்கியத்துவத்தை நமது ஆட்கள் உணருவதே இல்லை.//

அப்படியே "வரலாறு மிக முக்கியம் அமைச்சரே" என்ற கான்சப்டை அவர்கள் உணர்ந்தாளும்கூட, ஆனந்த விகடன் போன்றவர்கள் தவறான வரலாற்றையே அளிப்பார்கள்.

உதாரணம்: தமிழின் முதல் சித்திரக்கதை ஆனந்த விகடனில் வெளிவந்தது என்று அவர்கள் வெளியிட்ட தகவல்.

விட்டால், இந்தியாவிலேயே முதல் காமிக்ஸ் இவர்கள் வெளியிட்டதுதான் என்று கூட சொல்வார்கள்.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

இச்சித்திரங்களைப் பார்த்த வயதில் அழகிகளின் மேன்மைகள் குறித்து அடியேன் அறிந்திருக்கவில்லை. இருப்பினும் கார் சித்திரங்கள் தூள். அதிலும் டோக்கியோவில் தமிழ்வாணன் சித்திரம் கிரேட் :)) கனிவான உள்ளத்துடன் இச்சித்திரங்களை வெளியிட்டதற்கு என் மனதார்ந்த நன்றிகள் நண்பரே.

Venkitachalam Subramanian said...

You brought back memories of my childhood. I remember reading "Kalkandu", magazine. The magazine you could compare it to at that time was "Readers Digest". It used to have so much trivia info and then some stories/novels. After his passing away, his son Lena(?) Thamilvanan ran the show, but was not able to keep up with the drastic changes that were happening in the print world.
Like the artist "J" in Kumudam and other magazines, Ramu used to draw some really enticing pictures in Kalkandu. I have a feeling that the director of the movie "Priya" (a horrible adaptation of Tamilvanan's novel) had SriDevi wear a towel exactly as depicted by Ramu !

I think RajeshKumar & RajendraKumar were two other crime writers who were really popular.

Cibiசிபி said...

சிவ் மிக அருமையான தகவல்கள்

என்னிடமும் இந்த இரண்டு அமித் காமிக்ஸ்களும் உள்ளது மேலும் ஒரு புத்தகம் உள்ளது ஆனால் அட்டை இல்லாமல் பெயர் நினைவுக்கு வரவில்லை.

Cibiசிபி said...

// தமிழின் முதல் சித்திரக்கதை ஆனந்த விகடனில் வெளிவந்தது என்று அவர்கள் வெளியிட்ட தகவல்.

விட்டால், இந்தியாவிலேயே முதல் காமிக்ஸ் இவர்கள் வெளியிட்டதுதான் என்று கூட சொல்வார்கள். //

விடுங்க அண்ணே இதுக்கெல்லாம் போய் கோவபட்டுகிட்டு இது எல்லாம் ஒரு விளம்பரத்துக்குதான்

.

bogan said...

ஒரு காலகட்டத்தில் பொது நூலகங்களில் தமிழ்வாணன் புத்தகம் முன்பதிவு இருந்தால்தான் கிடைக்கும்.சங்கர்லால் தமிழ்வாணன் துப்பறியும் கதைகளைவிடவும் அற்புதமான சில தனி நூல்களையும் எழுதிருக்கிறார்.குறிப்பாக கருநாகம்,பேய் பேய்தான் இரண்டும் குலை நடுங்கவைக்கும் த்ரில்லர்கள்.ஒன்று பழிவாங்கும் பாம்பைப் பற்றியகதை.அடுத்தது ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்க்கதை!

YUVA said...

தமிழ்வாணன் என் ஹீரோ!
நான் படித்த முதல் கதை "இறந்தவன் பேச முடியுமா?"
இன்னும் நினைவில் இருக்கிறது!
படித்த மாத்திரதிலிய எ திரைப்படமாக எடுக்க ஆசை முளைத்தது !
ஆறு வருடங்கள் ஆகிவிட்டது! இன்று வரை என்னை சுத்தி கிட்டே இருக்கு.
புதுவை ரோமன் ரோலாந்து நூலகத்தில் சலிப்படையாமல் தேடி தேடி படிகின்றேன், இன்றும்.
பகிர்வுகள் தொடரட்டும்.

YUVA said...

தமிழ்வாணன் என் ஹீரோ!
நான் படித்த முதல் கதை "இறந்தவன் பேச முடியுமா?"
இன்னும் நினைவில் இருக்கிறது!
படித்த மாத்திரதிலிய எ திரைப்படமாக எடுக்க ஆசை முளைத்தது !
ஆறு வருடங்கள் ஆகிவிட்டது! இன்று வரை என்னை சுத்தி கிட்டே இருக்கு.
புதுவை ரோமன் ரோலாந்து நூலகத்தில் சலிப்படையாமல் தேடி தேடி படிகின்றேன், இன்றும்.
பகிர்வுகள் தொடரட்டும்.