பெரும்பாலும் சிறுகதை / நாவல் வடிவத்திலேயே எழுதப்பட்ட இக்கதைவரிசை அவப்போது சித்திரக்கதை வடிவிலும் வந்துள்ளது. அதில் என் கைக்கு சிக்கிய ஒரு புத்தகத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்
1993 யில் (1997இல் மறுபதிப்பு) மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ள 52 பக்கங்கள் கொண்ட "அப்புசாமியின் கலர் டி.வி" சித்திரக்கதை புத்தகத்தின் அட்டைபடம் உங்கள் பார்வைக்கு.
இந்த இதழுக்கு சித்திரங்கள் வரைந்திருப்பது ஓவியர் ஜெயராஜ் ஆகும். இதுவரை வெளிவந்துள்ள அனைத்து அப்புசாமியின் கதைகளுக்கும் சித்திரம் வரந்திருப்பது இவரே. புத்தகதிற்கு லேனா தமிழ்வாணன் எழுதிய முன்னுரையும் இதழின் சில பக்கங்களும் உங்கள் பார்வைக்கு.
கதையில் எம்.ஜி.ஆர் தோற்றம்
அப்புசாமி கலர் டி.வி க்கு ஆசைப்பட்டு அதனால் சீதாப்பாட்டிக்கு வந்திடும் தொல்லைகள் பற்றியே கதை. நகைச்சுவைக்கு சிறிதும் பஞ்சம் இல்லாது கதை போகிறது. நிறைய இடங்களில் வாய்விட்டு சிரிக்கலாம். சித்திரக்கதையானாலும் பெரியவர்களையும் கவரும் விதமாகவே கதை பின்னப்பட்டுள்ளது. புத்தக வடிவமைப்பை பார்க்கும் போது இந்த கதை ஏற்கனவே வார இதழ் ஏதோ ஒன்றில் வந்த கதை போல் இருக்கிறது. குமுதமாக இருக்க கூடும். ஓவியர் ஜெயராஜ் கவர்ச்சியாக படம் வரைவதில் புகழ்பெற்றவர். அவரின் ரசிகர்களுக்காக ஒரு படம்.
இந்த இதழை பொறுத்த வரை மகிழ்ச்சியான மற்றும் சோகமான செய்தி என்னவென்றால் இன்னும் இப்புத்தகம் பதிப்பகத்தாரிடம் ஸ்டாக் இருப்பதே. இன்றும் இப்புத்தகதை வாங்கலாம் என்பது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும் ஒரு சித்திரக்கதை இதழ் 12 வருடங்களாக விற்பனையாகாமல் இருப்பது ஆரோக்யமான செய்தி அல்ல.....
- - - இதழின் விலை ரூ.10 மட்டுமே. இதழை வாங்க 044 - 24342926 க்கு தொடர்பு கொள்ளவும் - --
எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி
அப்புசாமி - சீதா பாட்டி
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிற்சேற்கை 1 - ஓவியர் ஜெயராஜ் அவர்கள் அப்புசாமி - சீதாப்பாட்டி கதை வரிசைக்கு ஓவியம் வரைந்ததை மிகவும் பெருமையாக் குறிப்பிடுகிறார். ஓவியர் ஜெயராஜ் அவர்கள் பற்றி தினமலர்-வாரமலர் இதழில் தொடர் கட்டுரை வந்தது. அதில் சீதாப்பாட்டி, அப்புசாமி பற்றி அவர் கொடுத்துள்ள செய்தி மற்றும் பேட்டி.
கேள்வி : சீதாப்பாட்டி, அப்புசாமி தாத்தா என்ற மறக்க முடியாத உருவங்களை, நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள். அவர்கள் உருவான கதை பற்றி?
பிரபல எழுத்தாளரும், குமுதத்தின் முன்னாள் உதவி ஆசிரியருமான ஜ.ரா.சுந்தரேசன், காலத்தால் அழியாத, மறக்க முடியாத இரு பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார்.
ஓவியர் ஜெயராஜ்
அப்புசாமியை வைத்து முதல் கதை எழுதியபோது, என்னிடம், "நல்ல பழுத்த கிழம், நல்ல புத்தி உள்ள ஒரு கேரக்டரை வைத்து கதை எழுதப் போகிறேன்...' என்றார். கொஞ்சம் யோசித்து தாத்தா உருவத்தை வரைந்தேன். சுந்தரேசன் சாருக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது. உடனே அந்த டிராயிங்கை ஆசிரியர் எஸ்.ஏ.பி.,யிடம் காண்பித்தார்.
ஓவியர் ஜெயராஜ்

அவரும், "ரொம்ப பொருத்தமாக இருக்கு. அப்படியே போடுங்க...' என்று உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து ஜ.ரா., சொல்லாமலே நானே, அந்த தாத்தாவிற்கு ஒரு ஜோடியாக, வயதான பாட்டியின் படம் வரைந்தேன். அதுவும் அவர்களுக்குப் பிடித்துப் போயிற்று.
அப்புசாமி தாத்தாவின் முகத்தையே, சீதாப்பாட்டிக்கும் போட்டேன். அதற்கு மேலே தலைமுடி, மூக்குக் கண்ணாடி, குங்குமம் என்று சில எக்ஸ்ட்ரா விஷயங்களை வரைந்தேன். வாசகர்களுக்கும் இரு உருவ அமைப்புகளும் மிகவும் பிடித்து விட்டன. கிளாமராக நான் வரைந்த இளம் பெண்களின் படங்களை விட, எனக்கு அதிகமான அங்கீகாரம், புகழ்பெற்றுக் கொடுத்தது, அப்புசாமி - சீதாப்பாட்டி என்பது தான் மறுக்க முடியாத உண்மை. தமிழ்ப் பத்திரிகை உலகில், சாகாவரம் பெற்ற இரு பாத்திரங்கள். அவர்கள் ஏற்கனவே நல்ல வயதானவர்கள் என்பதால், அவர்களுக்கு இனி வயதாகாது. இவர்களின் உருவங்களைத் தான், நான் என் விசிட்டிங் கார்டில், ஒரு ஓவியன் என்று சட்டென்று விளங்க, உபயோகப்படுத்துகிறேன்.
சிறுகதை, தொடர்கதை, சித்திரக்கதை என்ற மூன்று வடிவங்களிலும் வந்திருக்கும் ஒரே கதை (நான் அறிந்தவரை) சீதாப்பாட்டி - அப்புசாமி கதை. குமுதம் முன்னாள் உதவி ஆசிரியர் ஜ.ரா.சுந்தரேசன், பாக்கியம் ராமஸ்வாமி (அவரது பெற்றோர் பெயரில்) என்ற பெயரில் எழுதிய அந்தக் கதைக்கு, ஆரம்பம் முதலே படம் வரையும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
பல ஆண்டுகள் குமுதத்திலும், பிறகு விகடன், குங்குமம், கல்கி என்று பல பத்திரிகைகளிலும் அப்புசாமி கதைகள் வந்தன. எந்த பத்திரிகையில் அப்புசாமியின் கதை வந்தாலும், அதற்கு படம் போடும் வாய்ப்பை, தொடர்ந்து எனக்கே கொடுத்தனர். இதுவும் ஒரு வகை சாதனை தான்!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிற்சேற்கை 2 - அப்புசாமி காமிக்ஸ் பற்றி ஏற்கனவே லக்கிலூக் வலைதளத்தில் விவாதம் நடந்துள்ளது. இங்கு ஒரு அப்புசாமி - சீதாப்பாட்டி சித்திர சிறுகதையும் நீங்கள் படிக்கலாம். அதற்க்கான தொடர்பு
கிழக்கு பதிப்பகத்தினர் அப்புசாமியின் கதைகளை சித்திரக்கதைகளாக வெளியிட போவதாக கூறி இருந்தனர். அதற்க்கான தொடர்பு
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பதிவினை படித்துவிட்டு உங்கள் கருத்தை கூறிவிடுங்கள்
7 comments:
நண்பரே,
சிறு வயதிலேயே நான் அப்புசாமி ரசிகனாகி விட்டேன். லேடீஸ் கிளப்பிற்கு செல்லும் சீதேய் கெயவி அப்புசாமியை வெற்றி கொள்ளும் போதெல்லாம் ஒரு தடவையாவது கிழவர் ஜெயிக்க மாட்டாரா என்று தோன்றும். அதே போன்று அவரின் வலதுகை ரசகுண்டுவும் சிறப்பான பாத்திரமே. ஓவியர் ஜெயின் கவர்ச்சி சித்திரங்கள் தனிரகம். அவர் வரையும் பெண்களின் சேலை இடுப்பிலிருந்து அபாயமான ஆழத்தில் இறங்கி நிற்கும். அவர் வரைந்த சுஜாதாவின் கணேஷ்- வசந் பாத்திரங்களும் நினைவிலிருந்து மறையாதவை. அருமையான பதிவு.
Dear comics lovers,
It is very sad to inform you people that One of India's greatest ever comics artist Mr Govind Brahmania is No More.
May His soul rest in peace.(Info courtesy: Usman Bhai)
Vedha
Govind Bramania (02-03-1938 - 09-12-2009) R.I.P
நண்பர் சிவ், சிறு வயதில் வார மாத இதழ்கள் பலவற்றில் அப்புசாமி சீதாபாட்டி சித்திரகதைகளை ஆவலுடன் படித்திருக்கிறேன்... முக்கியமாக அப்புசாமியின் சில்மிஷ சீண்டல்கள் (நீங்கள் கூட ஒரு படத்தை பிரதானபடுத்தி இருக்கிறீர்களே) அந்த வயதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை.
வாரமலரில் ஜெயராஜின் மலரும் நினைவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். அப்புசாமி சித்திரகதை பற்றி அவரின் நினைவுகளை அங்கு தான் தெரிந்து கொள்ள முடிந்தது. கூடிய விரைவில் அவர் அனுபவங்களை புத்தக வடிவில் யாரால் பதிந்தால் சிறப்பு.
இந்த புத்தக கண்காட்சியில் இந்த காமிக்ஸ் புத்தகத்தை கையபடுத்தி விடுகிறேன். பதிவிற்கு நன்றி.
கனவுகளின் காதலரே, கதையில் எப்போதும் சீதேய் கெயவி தான் வெற்றிகொள்வார் எனினும் ரசிகர்கள் மனதை வெற்றிகொள்வது பெரும்பாலும் அப்புசாமி கிழவரே.
வேதா, சோகமான செய்தி..அவருக்கு இரங்கல்கள் ..
கனவுகளின் காதலர் மற்றும் ரஃபிக் போன்று நம்மில் பலரும் ஜெயின் கவர்ச்சி சித்திரங்களுக்கு ரசிகர்கள் என்று தெரிகிறது. இவர் அப்புசாமி கதை மட்டுமில்லாது வேறு சில காமிக்ஸ்களுக்கும் படம் வரைந்திருக்கிறார்.
வாரமலரில் வந்திட்ட சித்திர பேசுதடி தொடர் முழுவதையும் இப்போது தினமலர் வலைதளத்தில் படித்திடலாம்.
சிவ் நண்பரே ,
நானும் சிறுவயதில் அப்புசாமி கதைகளை படித்துள்ளேன் . தினமலர் வாரமலரோ ,கதைமலரோ இரண்டில் ஒன்றில் ஒன்றிரண்டு கதைகள் வந்துள்ளன . சுட்டிகளுக்கு நன்றி நண்பரே ..
அன்புடன் ,
லக்கி லிமட்
உலவல்
என்ன இது உங்கள் வலைப்பூவில் அதிரடி மாற்றம்?!!
இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது!
தலைவர்,
அ.கொ.தீ.க.
நன்றி லக்கி லிமிட்.
\\என்ன இது உங்கள் வலைப்பூவில் அதிரடி மாற்றம்?!!
இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது!\\
பெரிதாக ஒன்றும் இல்லை. template மாற்றி இருக்கிறேன். உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி
Post a Comment