சமீப காலங்களில் தமிழ் வெகுஜன பத்திரிக்கைகள் சித்திரக்கதைளுக்கு முக்கியத்துவம் எதும் கொடுப்பது இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனினும் தமிழின் முக்கியமான பத்திரிக்கைகளில் காமிக்ஸ்கான இடங்கள் பற்றி பார்த்தால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவே இந்த பதிவு.
குமுதம்:
தமிழ் பத்திரிக்கை உலகின் ஜாம்பவான்கள் என்று நம்பப்படும் ஆனந்த விகடன் மற்றும் குமுதம் இதழ்களில் சித்திரக்கதைகளுக்கான இடம் மிகவும் குறுகியது தான். காமிக்ஸ் வடிவம் என்பது நகைச்சுவை துணுக்குகளுடன் நின்றுவிடுகிறது. குமுதத்தில் ஓவியர் பாலாவின் கார்டூன்கள் மிகவும் கலக்கலாக இருக்கிறது. தனி கார்டூன்கள் 'அடடே மதி' மாதிரியான ஸ்டைலில் இருக்கிறது. நமது அரசியல்வாதிகளின் முகங்கள் இவரது தூரிகையில் படாதபாடுகிறது. குறிப்பாக கலைஞர் அவரகளை வரைய ஸ்பெஷல் பயிற்சி எடுத்திருப்பார் போல. பல விதமான முக பாவனைகளில் பிரமாதப்படுத்துகிறார். தலையங்க கார்டூன் இல்லாமல் நான்கு பக்க நய்யாண்டி சித்திரக்கதை ஒன்றும் வாரவாரம் இடம் பெறுகிறது. தற்போது ஒரு சாமியாரும் அவரது சிஷ்யரும் அரசியல் நிகழ்வுகளை கலாய்கிறார்கள். கொஞ்சம் நாட்களுக்கு முன்பு வரை செந்தில்-கவுண்ட்மணி வைத்து இந்த நய்யாண்டி சித்திரக்கதை ஓடும். இங்கும் செந்திலை பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கும் ஓவியங்கள்தான் ஹை-லைட். ஓவியர் பாலாவின் சித்திரங்கள் காமிக்ஸ் வடிவத்திற்கு நன்கு பொருந்துகிறது. ஏதேனும் முழுநீள சித்திரக்கதைக்கு அவர் ஓவியம் வரைந்தால் நிச்சியம் ஹிட் தான். மற்றபடி குமுததில் சித்திரங்களுக்கான இடம் ரொம்ப குறைந்துவிட்டது.
(இந்த சாக்கில் தமிழ் காமிக்ஸ் வலைபக்கங்களில் முதன்முறையாக சுவாமி நித்தியானந்தா பற்றிய சித்திரக்கதை வெளியிடப்பட்டு உள்ளது.)
குமுதம்:
தமிழ் பத்திரிக்கை உலகின் ஜாம்பவான்கள் என்று நம்பப்படும் ஆனந்த விகடன் மற்றும் குமுதம் இதழ்களில் சித்திரக்கதைகளுக்கான இடம் மிகவும் குறுகியது தான். காமிக்ஸ் வடிவம் என்பது நகைச்சுவை துணுக்குகளுடன் நின்றுவிடுகிறது. குமுதத்தில் ஓவியர் பாலாவின் கார்டூன்கள் மிகவும் கலக்கலாக இருக்கிறது. தனி கார்டூன்கள் 'அடடே மதி' மாதிரியான ஸ்டைலில் இருக்கிறது. நமது அரசியல்வாதிகளின் முகங்கள் இவரது தூரிகையில் படாதபாடுகிறது. குறிப்பாக கலைஞர் அவரகளை வரைய ஸ்பெஷல் பயிற்சி எடுத்திருப்பார் போல. பல விதமான முக பாவனைகளில் பிரமாதப்படுத்துகிறார். தலையங்க கார்டூன் இல்லாமல் நான்கு பக்க நய்யாண்டி சித்திரக்கதை ஒன்றும் வாரவாரம் இடம் பெறுகிறது. தற்போது ஒரு சாமியாரும் அவரது சிஷ்யரும் அரசியல் நிகழ்வுகளை கலாய்கிறார்கள். கொஞ்சம் நாட்களுக்கு முன்பு வரை செந்தில்-கவுண்ட்மணி வைத்து இந்த நய்யாண்டி சித்திரக்கதை ஓடும். இங்கும் செந்திலை பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கும் ஓவியங்கள்தான் ஹை-லைட். ஓவியர் பாலாவின் சித்திரங்கள் காமிக்ஸ் வடிவத்திற்கு நன்கு பொருந்துகிறது. ஏதேனும் முழுநீள சித்திரக்கதைக்கு அவர் ஓவியம் வரைந்தால் நிச்சியம் ஹிட் தான். மற்றபடி குமுததில் சித்திரங்களுக்கான இடம் ரொம்ப குறைந்துவிட்டது.
(இந்த சாக்கில் தமிழ் காமிக்ஸ் வலைபக்கங்களில் முதன்முறையாக சுவாமி நித்தியானந்தா பற்றிய சித்திரக்கதை வெளியிடப்பட்டு உள்ளது.)
ஆனந்த விகடன்:
நகைச்சுவை துணுக்குகளுக்கு புகழ்பெற்ற விகடனில் இன்னமும் நிறைய நகைச்சுவை துணுக்குகள் வெளியிடப்படுகிறது. அதிலும் பொக்கிஷம் பகுதியில் வரும் நகைச்சுவை துணுக்குகள் நன்றாக இருக்கிறது. இங்கு காமிக்ஸ் வடிவில் இருக்கும் ஒரே பகுதி நய்யாண்டி சித்திரக்கதை தான் (ஓவியர் - கண்ணா). இங்கும் இந்த வாரம் சுவாமி நித்தியானந்தா ஸ்பெஷல் தான். மதனின் ஓவியங்கள் ஆங்காங்கே தென்படுகிறது. விகடனில் தொடர்கதை மற்றும் சிறுகதைகளுக்கான சித்திரங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. ஸ்யாம், அரஸ் போன்றவர்களின் கைவண்ணம்
செய்திதாள்கள்
தினத்தந்தி:
தினத்தந்தி - சித்திரக்கதை - சிந்துபாத். இக்கதை பற்றி அய்யபாளைத்தாரின் தளத்தில் முழு விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். தினத்தந்தி இலவச இணைப்பில் சிறுகதை மற்றும் தொடர்கதைகளுக்கு சிறப்பான ஓவியங்கள் தென்படுகின்றன. பொதுவாக தினமணி, தினமலர் மற்றும் தினகரன் ஆகிய பத்திரிக்கைகளின் சிறுகதை மற்றும் தொடர்கதைகளுக்கு ஓவியங்கள் நன்றாக இருக்கிறது. தினத்தந்தி - தங்கமலரரில் மூன்று சித்திரக்கதை தொடர்கள் வெளிவருகிறது. இதில் இரண்டு தொடர்கள் Tinkle தமிழாக்கம் என்று எண்ணுகிறேன்.
தங்கமலர் சித்திரக்கதைகள்
தினமணி:
தினமணியில் வெளிவரும் அடடே மதி எப்போதும் என் all time favorite ஆகும். தினமணி - சிறுவர் மணி இதழும் சித்திரக்கதைகளுக்கு சிறப்பான பங்களிப்பை செய்து வருக்கிறது. 5 சித்திரக்கதைகளை வெளியிடும் சிறுவர்மணியில் 32 பக்கங்களில் 16 பக்கங்கள் சித்திரக்கதைகளால் நிரம்பி உள்ளது. இதில் அறிவியல் அறிஞர்கள் பற்றிய ஒரு அருமையான சித்திரத்தொடரரும் அடங்கும். (கதை, சித்திரம் - காலெப்). அலிபாபா +40 சித்திரத்தொடரும் சிறப்பான சித்திரம் மற்றும் கதையமைப்புடன் வெளிவருகிறது. (கதை, சித்திரம் - விஷ்னு)
சிறுவர்மணி சித்திரக்கதைகள்
தினமலர் - சிறுவர்மலர்:
இரண்டு சித்திரக்கதை தொடர்கள் இடம் பெற்றுள்ளது. ACK தமிழாக்கம் போல் தெரிகிறது.
காலைக் கதிர்:
தினமலர் பத்திரிக்கையின் நகல் போல் வெளிவரும் காலைக்கதிர் நாளிதழில் தினசரி காமிக்ஸ் தொடர்கதை வெளியிடப்படுகிறது. தற்போது தெனாலிராமன் பற்றிய காமிக்ஸ் தொடர்கதை வந்து கொண்டு இருக்கிறது. காலைக்கதிரின் சிறுவர் இணைப்பிலும் சில சித்திரக்க்தைகள் வெளிவருகின்றன. இவையும் தினமலர் பாணியிலேயே உள்ளன. (ஸ்கேன்கள் வரைவில்)
தினமலர் பத்திரிக்கையின் நகல் போல் வெளிவரும் காலைக்கதிர் நாளிதழில் தினசரி காமிக்ஸ் தொடர்கதை வெளியிடப்படுகிறது. தற்போது தெனாலிராமன் பற்றிய காமிக்ஸ் தொடர்கதை வந்து கொண்டு இருக்கிறது. காலைக்கதிரின் சிறுவர் இணைப்பிலும் சில சித்திரக்க்தைகள் வெளிவருகின்றன. இவையும் தினமலர் பாணியிலேயே உள்ளன. (ஸ்கேன்கள் வரைவில்)
ஆன்மீகப்பத்திரிககைகளான சக்தி விகடன் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் ஆகிய பத்திரிக்கைகளிலும் சித்திரக்கதை தொடர் வெளிவருகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயமில் வரும் சித்திரக்கதைகள் கதைமலரில் வெளிவரும் கதைகளின் மூலம் ஆகும்.
ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் - கதை1
ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் - கதை2
வாரபத்திரிக்கைகளில் வரும் தொடர்கதை சித்திரங்களில் ஒரு சில உங்கள் பார்வைக்கு.... (வரிசை - 1,2 - விகடன், 3 - குடும்ப மலர், 4 - குங்குமம்)
வயாகரா தாத்தாவிற்காக 'குடும்ப' பத்திரிக்கையான குமுதத்தில் வெளிவந்த ஒரு படம். இதுவும் காமிக்ஸ் வடிவம் தானே.. (இதற்கு வசனம் எழுதிய 'இலக்கியவாதி' யாரென்று தெரியவில்லை)
பல சித்திரக்கதைகளை தமிழ் மொழிக்கு தந்த கல்கி வார இதழில் தற்போது எந்த சித்திரக்கதையும் வருவதில்லை என்பதுதான் சோகம்.
சத்தி விகடனில் வெளிவந்த சித்திரக்கதைகள் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் பார்த்திருந்தோம். தற்கால கோகுலம், சுட்டி போன்ற சிறுவர் பத்திரிக்கைளில் வரும் காமிக்ஸ் பற்றி வேறு ஒரு பதிவில் பார்ப்போம்
உங்களுக்கு தோன்றும் கருத்துகளை தெரிவித்துவிடுங்களேன்..
18 comments:
Siv,
நல்லதொரு பதவு.
இதே போன்று ஆனால் முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிவினை விரைவில் பிரியத்திற்குரிய ஐய்யம்பாளயத்தரிடம் இருந்து எதிர்ப்பாருங்கள்.
Siv,
ஆனந்தவிகடனில் தற்போது வரும் பொக்கிஷம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஒரு சிறிய ஸ்டிரிப் காமிக்ஸை பார்க்கலாம், (மூன்று அல்லது நான்கு பேனல்களை கொண்டது).
நன்றி விஸ்வா அவர்களே, ஐய்யம்பாளயத்தாரை சீக்கிரம் பதிவு போட சொல்லுங்கள். அவருடைய பதிவுகள் ரொம்ப குறைந்து விட்டது
ஆனால் நீங்கள் மிஸ் செய்த பத்திரிகை ஒன்று உள்ளது - துக்ளக். அதில் அனைத்து கருத்துக்களும் முழுக்க முழுக்க சித்திரங்களின் வாயிலாகவே சொல்லப்பட்டு இருக்கும்.
அரசியல் தகவலின் நையாண்டி : இரண்டு - மூன்று பக்கங்கள் (முழுக்க முழுக்க காமிக்ஸ் வடிவில்)
துக்ளக் கேள்வி பதில் - பல சித்திரங்கள் இடம்பெறும்.
ஒரு நையாண்டி கட்டுரை - இரண்டு பக்கம் (ஒரு கார்டூன் படத்துடன்)
என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
P.S:வெகுஜனப் பத்திரிகை என்று நீங்கள் கூறியதால் இதனை இணைக்க மறந்து இருக்கலாம்.
நண்பரே,
அருமையான பதிவு, நீங்கள் தேர்ந்தெடுந்திருக்கும் பக்கங்களின் தெரிவு சிறப்பாக இருக்கிறது. திறந்தால் மூட முடியலை என்பது இதழைக் குறிக்கிறது என்று எண்ணுகிறேன். அவரின் கைகளில் இருக்கும் இதழை :))
கிங்காங் அட்டைப்படம் அருமை, விரைவில் அதனைப் பதிவாக இட்டு எங்களை மகிழ்வியுங்கள். இந்திய அவதார் கேலிச்சித்திரம் நல்ல கற்பனை.
ஆம் விஸ்வா, அட்டைபடத்தில் கூட சித்திரத்துணுக்கு போடும் தமிழ் பத்திரிக்கை அது. ஆழ்ந்த அரசியல் என்பதால் அந்த புத்தகம் ஓரிரு முறைதான் படித்திருக்கிறேன்.
\\ஆனந்தவிகடனில் தற்போது வரும் பொக்கிஷம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஒரு சிறிய ஸ்டிரிப் காமிக்ஸை பார்க்கலாம், (மூன்று அல்லது நான்கு பேனல்களை கொண்டது).\\
பதிவிடும் போது அந்த ஸ்கேன் மிஸ் ஆகி விட்டது. இப்போது இணைத்து விட்டேன்
நன்றி கனவுகளின் காதலரே, நல்ல வேளை எந்த இதழ் என்று கூறிவிட்டீர்கள். இல்லையென்றால் மக்களின் கற்பனை எங்கோ சென்றிருக்கும்.
சிவ்,
அருமையான, அவசியமான ஒரு தலைப்பை ஆராய்ந்துள்ளீர்கள். பாராட்டுக்கள!70,80களில் தமிழ் இதழ்களில் வெளிவந்த சித்திரக் கதைகளுடன் தற்போதைய இதழ்களில் வெளிவரும் சித்திரக்கதைகளை ஒப்பிடவே முடியாது. அப்போதுள்ள தரத்தில் 25 சதவீதம் கூட இப்போது இல்லை. விஸ்வா கூறியது போல இது எனது கனவு பதிவு. கூடிய விரைவில் (தயவு செய்து திட்ட வேண்டாம்...) இதே தலைப்பில் சற்றே விரிவாக நான் பதிவிட இருக்கிறேன். தமிழ் சித்திரக்கதைகளை பொருத்தவரை இன்றைய தமிழ் குழந்தைகளுக்கு நம்மை போல தரமான சித்திரங்களுடன் கூடிய கதைகளை வாசிக்கும் வாய்ப்புகள் குறைவாக கிடைக்கின்றன.
நன்றி அய்யம்பாளையம் நண்பரே, நல்ல தரமான சித்திரக்கதை படிக்காமலே ஒரு தலைமுறை வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது வேதனையான விஷயம் தான். தங்களுடைய பதிவு இன்னும் ஆழமானதாக இருக்கும் என நம்புகிறேன்.
// தங்களுடைய பதிவு இன்னும் ஆழமானதாக இருக்கும் என நம்புகிறேன்//
ஆழம்ணா, எப்படி ஒரு அம்பது அடி இருக்குமா?
சிவ், தற்போதைய தமிழ் பத்திரிக்கைளில் காமிக்ஸ் பற்றிய அருமையான ஒரு கருத்தாய்வை இட்டு உள்ளீர்கள்.
நான் படித்து வளர்ந்த பல வார பத்திரிக்கைள், சிறுவர் பத்திரிக்கைகள் என்று மார்தட்டி கொள்ளும் வகைகள் உட்பட, இன்று அவற்றின் முந்தைய இமாலய தரத்திற்கு,சற்றும் ஈடு இல்லா தரித்திர தரத்தில் வெளிவருவதை காணும் போது, இக்கால குழந்தைகள் தவறும் விடயங்கள் நெஞ்சை கனக்க செய்கிறது.
அவர்கள், பத்திரிக்கைள் மற்றும் அச்சு ஊடகங்களை விட்டு விலகி செல்ல வைப்பதற்கு இதுதான் தலையாய காரியமாக இருக்கும்.
இன்று வார பத்திரிக்கைளில் இருக்கும் நல்ல கார்டூனிஸ்டுகளை பயன்படுத்தி யாரேனும் சிறு சித்திர தொடர்களை நல்ல தரத்துடன் பதிந்தால், சந்தோஷபடும் ஏனையோரில் நானும் ஒருவனாக இருப்பேன்.
நடக்குமா.... கனா தான் காணலாம் போலிருக்கிறது.
கவுண்டரே, நீங்கள் உடல் நலம் தேறி இன்னும் இது போல நக்கல் டயலாக்குகள் பேச வேண்டும்.
ரஃபிக், நீங்கள் கூறுவது போல் தரமற்ற சித்திரக்கதைகள் வெளியிட்டு சித்திரக்கதைகள் மேல் வெறுப்பை வரவழைப்பதற்கு பதில் சும்மாகவே இருந்துவிடலாம் தான்.
பகிர்வுக்கு நன்றி.
நல்ல பதிவு நண்பரே. சுட்டி விகடனில் ஒரு தொடர் காமிக்ஸ் நடப்பதாக ஞாபகம்!
பகிர்ந்தமைக்கு நன்றி
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
Hello
you can register in our website http://www.thalaivan.com and post your articles
install our voting button and get more visitors
Visit our website for more information http://www.thalaivan.com
Latest tamil blogs news
நல்லதொரு பதிவு
அன்புடையீர்,
அனைவருக்கும் அம்பேத்கர் தின, தமிழ் புத்தாண்டு, விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்.
கிசு கிசு கார்னர் 7 வலையேற்றப்பட்டுள்ளது.
லெட் த கும்மி ஸ்டார்ட்.
இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.
பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.
Post a Comment