Saturday, February 13, 2010

ஆனந்த விகடனும் தமிழின் முதல் சித்திரக்கதையும் (Comics in Ananda vikatan)

வணக்கம் காமிக்ஸ் நண்பர்களே,


  • 10/15 வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்தின் அனைத்து முன்னனி வாரபத்திரிக்கைகளிலும் ஒரு சித்திர தொடர்கதையாவது கண்டிப்பாக இடம்பெற்று இருக்கும். பழைய கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் இதழ்களை நீங்கள் பார்க்க நேரிட்டால் இதை உணரக்கூடும். இந்த வகையில் கல்கியில் வாண்டுமாமா படைத்த பல சித்திரக்கதைகள் தமிழ் சித்திரக்கதை உலகின் முத்துக்கள். யாருடைய சதி என்று தெரியவில்லை இன்று கண்ணுக்கு எட்டியவரை வாரபத்திரிக்கைகளில் சித்திர தொடர்கதை எதுவும் தென்படவில்லை

  • இந்த பதிவில் ஆனந்த விகடன் இதழ்களில் வெளிவந்த சில படக்கதைகள் பற்றி பார்ப்போம். இந்த பதிவு ஆனந்த விகடனின் காமிக்ஸ் சேவை பற்றிய முழு வரலாறு கிடையாது என்பதையும் எனக்கு தெரிந்த சில தகவல்களை பகிர்ந்து கொள்ளும் முயற்சியே என்பதையும் இப்போதே சொல்லிவிடுகிறேன்.
  • இந்த வார ஆனந்த விகடன் இதழில் தமிழின் முதல் படக்கதை பற்றிய செய்தி துணுக்கு ஒன்று 'பொக்கிஷம்' பகுதியில் வெளியிட்டு உள்ளது.

(தமிழின் முதல் படக்கதை பற்றி ஆ.வி வெளியிட்டிருக்கும் தகவல்கள், தலைப்பு - ஜமீந்தார் மகன், கதை - முத்து, ஓவியம் - மாயா, ஆண்டு - 1956)


  • ஆனந்த விகடன் பெரும்பாலும் பெரியவர்களை கவரும் விதமான சித்திரக்கதைகளுக்கே முன்னுரிமை கொடுத்துள்ளார்கள் என்பது என் கணிப்பு. ஆனால் கல்கியோ சிறுவர்களை கவரும் சித்திரக்கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்கள்.

  • 1970 களில் வெளிவந்த சில சித்திரக்கதை தொடர்களின் ஸ்கேன்கள் உங்கள் பார்வைக்கு. இங்கு இரண்டாவதாக பார்க்கும் 'பொன்மகள் பூமா' தமிழின் முதல் சித்திரக்கதையின் ஓவியர் மாயாவின் கைவண்ணம்.
பொன்னின் நிழல்

பொன்மகள் பூமா
ஸ்வீட் செவண்டீன் (முதல் வாரம் மட்டும் இருவண்ணம்)

  • சராசரியாக ஒரு கதை 20~25 வாரங்களுக்கு வெளிவந்திருக்கிறது. பெரும்பாலான கதைகள் 1960 களின் சினிமாக்களை நியாபகப்படுத்துகிறது. குறை சொல்ல முடியாத சித்திர தரம் மற்றும் எளிமையான கதை அமைப்பும் இக்கதைகளின் சிறப்பு அம்சங்கள்.  
  • 1980களில் வந்த 'தசாவதாரம்' சித்திரக்கதை சமீபத்தில் பொக்கிஷம் பகுதில் மறுபதிப்பு செய்யப்பட்டது. கதை - புகழ்பெற்ற பேய் கதை எழுத்தாளர் பீ.டி சாமி. 
  • ஆனந்த விகடனில் கொஞ்ச நாட்களாக சித்திரக்கதை தொடர் ஏதுவும் வருவதில்லை என்றாலும் நிறைய கார்டூன் துணுக்குகள் வருவது மகிழ்ச்சி. 
  • ஆனால் பக்தி விகடனில் சிறிது காலமாக வாரம் ஒரு சித்திரக்கதை வெளிவந்து கொண்டிருந்தது. (தற்போது வருகிறதா என தெரியவில்லை)







 வாரபத்திரிக்கைகளின் வெளிவந்த காமிக்ஸ் பற்றிய நண்பர் சாத்தானின் பதிவுகளை படிக்க.....
நண்பர் அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரனின் 1970களில் வெளிவந்த காமிக்ஸ் பற்றிய பதிவை படிக்க....
அப்புறம் இப்போது வரைக்கும் எனக்கு சம்பந்தம் இல்லாத ஒரு விஷயமாக இருந்தாலும் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

18 comments:

மதுரை சரவணன் said...

nalla kavithai

மதுரை சரவணன் said...

sorry chiththira kathai. nalla thakaval .

Rafiq Raja said...

நண்பரே,

முன்பெல்லாம் வார மாத இதழ்களை பழைய புத்தக கடைகளில் பார்க்கும் போது, அவற்றில் நான் முதலில் தேடுவது ஏதாவது சித்திர தொடர்கதை இருக்கிறதா என்பதே. இரு வண்ணங்களில் சில தொடர்களை பார்க்கும் போது எழும் பூரிப்பு வார்த்தைகளில் சொல்லி அடங்காது.

அருமையான சித்திரங்கள், பூர்வாங்க காமிக்ஸ் கலைஞரை பற்றிய தகவல்களுடன். நன்றி சிவ்.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

தேடித் தேடி தமிழ் காமிக்ஸ் குறித்து அறியத் தருகிறீர்கள். இது எல்லாம் உங்கள் பதிவு மூலமாகவே அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி.

காமிக்ஸ் தொடர்களை வார இதழ்கள் இப்போதும் கூட ஆரம்பிக்கலாம். படிப்பதற்கு வாசகர்கள் இருக்கிறார்கள் ஆனால் சினிமாவே அதிக இதழ்களில் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது, அதற்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. எனவே காமிக்ஸ் தொடர்களைப் போட்டு பக்கங்களை இதழ்கள் வீணடிக்கமாட்டார்கள் அல்லவா!

ஐயா மன்மதா, சிவ் பக்கமா ஒரு டஜன் கண்டவுடன் காதல் அம்பை எய்யப்பா :))

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

நண்பரே,

உண்மையில் முதன் முதலில் வந்த படக்கதை இதுவே. ஆனால், சித்திரக்கதை இதுவல்ல. அதாவது காமிக்ஸ் வடிவில் வந்த கதை (வசன பலூன்களுடன் கூடிய சித்திரக் கதை) இந்த வருடம் தான் வெளிவந்தது. ஆனால் இந்த பத்திரிகையில் அல்ல. அதனை பற்றிய விவரங்களை விரைவில் அளிக்கிறேன்.

SIV said...

Thanks Saravanan...

ரபிஃக், கருத்துக்கு நன்றி. உங்கள் வலைபூவில் பதிவுகளை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. இதையும் கொஞ்சம் கவனிங்க சார்

SIV said...

கனவுகளின் காதலரே, சித்திரக்கதை மட்டுமல்ல பொதுவாகவே தொடர்கதைகளை வாரபத்திரிக்கைகளில் குறைத்து விட்டாகள். குமுதத்தில் மொத்தமாகவே நிறுத்திவிட்டார்கள். சினிமா அலுத்து போகும் நாட்களின் திரும்ப சித்திரக்கதைகள்க்கு இடம் கிடைக்கும் என் நம்பலாம்.

மன்மதனிடமான சிபாரிசுக்கு நன்றி. (சிம்பு இல்லையே?)

SIV said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஒலக காமிக்ஸ் நண்பரே, ஆனந்த விகடன் போன்ற பெரிய நிறுவனகள் இது போன்ற செய்திகள் வெளியிடும் முன் உறுதி செய்யபட்ட தகவல்களையே அளிப்பார்கள் என நம்புகிறேன்.
இதே வருடம் வெளியான காமிக்ஸ் பற்றி சீக்கரம் தகவல் அளிக்கவும்.

சித்திரக்கதை - படக்கதை ஒரே அர்த்தம் இல்லையா? சற்று விளக்கவும்..

Lucky Limat - லக்கி லிமட் said...

நண்பரே,
சித்திரகதை புதையல்களை தேடி அளிப்பதற்கு நன்றி .

SIV said...

Thank you Lucky limit

ILLUMINATI said...

தல.புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

http://illuminati8.blogspot.com/2010/02/wasabi-punisher-max.html

பூங்காவனம் said...

காமிக்ஸ் நண்பர்களே,

வேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா?

புஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்

இன்ஸ்பெக்டர் இன்பராஜின் விசாரணை - காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1
காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1

பூங்காவனம் said...

காமிக்ஸ் நண்பர்களே,

வேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா?

புஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்

இன்ஸ்பெக்டர் இன்பராஜின் விசாரணை - காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1
காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1

பூங்காவனம் said...

காமிக்ஸ் நண்பர்களே,

வேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா?

புஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்

இன்ஸ்பெக்டர் இன்பராஜின் விசாரணை - காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1
காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1

Vedha said...

why is that poongaavanam has commented 3 times in your blog? anything special?

Vedha said...

very nice info.

thanks for the posting siv.

now you have developed a lot. started touse the side bar to advertise the next post as well.

The Spider said...

நண்பர்களே,

புதிதாக ஒரு பதிவு இட்டு உள்ளேன். வந்து உங்கள் மேலான கருத்துக்களை பதிக்கவும்.

நன்றி.

http://kingofcrooks.blogspot.com/2010/03/blog-post.html

SIV said...

நன்றி வேதா. பூங்காவனம் அம்மையார் ஏதோ தெரியாமல் மூன்று முறை கருத்து போட்டுவிடார் போலிருக்கிறது. தவறாக ஏதுமில்லை