Sunday, January 31, 2010

பொன்னியின் செல்வன் சித்திரங்கள் - சுழற் காற்று (Ponniyin selvan pictures II)

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் சித்திரங்களிலான முந்தைய பதிவை அடுத்து இரண்டாம் பாகமான சுழற் காற்றின் சித்திரங்கள் இந்த பதிவு மூலம் வழங்கப்படுகிறது. முன்பு ஓவியர் வினுவின் கைவண்ணத்தை பார்த்தோம். இப்போது ஓவியர் மணியம் அவர்களின் கைவண்ணத்திலான் ஓவியங்களை பார்ப்போம். பொன்னியின் செல்வன் 1987 ல் கல்கியில் தொடர்கதையாக வந்த போது வெளிவந்த சித்திரங்கள் இவை. பைன்டிங் செய்யப்பட்ட புத்தகம் என்பதால் சில ஸ்கேன்களின் நடுவே வரும் கருப்பு கோடு தவிர்க்க முடியாததாகி விட்டது. இரண்டாம் பாகத்தின் பல சித்திரங்களில் ஒரு சில சித்திரங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.

பதிவின் கடைசியில் இருக்கும் வரைபடம் பொன்னியின் செல்வன் கதை படிக்கும் போது கதையை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

பூங்குழலியின் அழகிய தோற்றம்
வந்தியத்தேவனும் வைத்தியர் மகனும் கோடியக்கரையில் நுழையும் காட்சி


வந்தியத்தேவனும் பூங்குழலியும்


நீச்சல் தெரியாத வந்தியத்தேவனை வேடிக்கை செய்யும் பூங்குழலி

பூங்குழலியின் வீட்டில்

இராமேசுவரத்திலிருந்து அநிருத்த பிரம்மாதிராயர் தனது குழுவுடன் இலங்கை செல்லும் காட்சி

காவரித்தாய் மீட்டெடுத்த பொன்னியின் செல்வன்.

சுந்தர சோழரின் ஊமைராணி பற்றிய நினைவுகள்

இலங்கையில் மத யானை ஓடிவரும் காட்சி

யானையை துரத்த முயலும் ஆழ்வார்க்கடியான்

சீனத்து யாத்திரீகர்களின் யானை பவனி. (யானை பாகனாக பொன்னியின் செல்வன்)

இலங்கை வீதிகளில் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான்

புத்த பிஷூ சங்கத்தில் இளவரசர்

பூங்குழலியும் இளவரசரும்

யானை பாகனாக இளவரசரும் பூங்குழலியும்

அரேபியர்களுடான சண்டையில் வந்தியத்தேவன்

அரேபியர்களின் கப்பலை தாக்கும் இடி

அந்த கப்பலில் மரணத்தை சந்திக்க தயாராகும் வந்தியத்தேவன்

வந்தியத்தேவனை காப்பற்றும் முயற்ச்சியில் பொன்னியின் செல்வர்

பூங்குழலியின் படகு மூலம் கரைக்கு செல்லும் காட்சி

கதை நடக்கும் இடங்களில் வரைபடம்

பொன்னியின் செல்வன் சித்திரங்கள் - முதல் பாகம்
கல்கியின் மோகினி தீவு சித்திரக்கதை பற்றிய பதிவை படிக்க....
கல்கியின் புதல்வி ஆனந்தி அவர்களின் சித்திரக்கதை பற்றிய பதிவை படிக்க....
பொன்னியின் செல்வன் கார்டூன் பற்றிய நண்பர் லக்கி லிமிடின் பதிவை படிக்க...

குறிப்பு: பொன்னியன் செல்வன் மீதுள்ள பற்றால் ஓவியங்கள் பதிவு இடபட்டுள்ளது. உரிமையாளர் விரும்பினால் நீக்கப்படும்.

18 comments:

Lucky Limat - லக்கி லிமட் said...

me the first

Lucky Limat - லக்கி லிமட் said...

சித்திரங்களை காண உதவியதற்கு நன்றி நண்பரே

கருந்தேள் கண்ணாயிரம் said...

அருமை. அற்புதம். சூப்பர்! பின்னி விட்டீர்கள்.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் சித்திரங்கள் சிறப்பாக உள்ளன. நாவலை மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன. தொடர்கதைக்கு சித்திரங்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. அபாரமான ஸ்கேன்களிற்கு நன்றி.

Rafiq Raja said...

நண்பர் சிவ்,

அக்கால ஓவியகலைகளுக்கு தான் எவ்வளவு நளினம். இக்காலத்தில் ஆங்கில, பிரஞ்சு கலவைகளில் வெளிவரும் நம் சித்திரங்களில் இந்த தனித்துவம் தொலைந்து போனது ஒரு துரதிஷ்டமே.

காலத்திற்கு ஏற்ப மேம்படாத எந்த கலைக்கும், அதுதான் விதி போல. நாவல்களுக்கு எழுத்துகள் ஆன்மாவை தருவித்தாலும், சித்திரங்களே உயிரோட்டத்தை பகிரும் என்பதை மீண்டும் நினைவுபடுத்தும் விடயம்.

பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.

shanevel said...

சித்திரங்கள் அனைத்தும் நல்லாயிருக்கு. எடுத்துப்போட்ட உங்களுக்கு மிக்க நன்றி

dharsh said...

Hi,
Is it possible for me to get d photo copy r series collection of ponniyin selven printed in old weekly books ? ? cause,it'll b more interesting to read old issues with worthfull pictures than in a new edition..

SIV said...

கருத்துகளுக்கு நன்றி லக்கி லிமிட், shanevel மற்றும் கருந்தேள் கண்ணாயிரம்.

SIV said...

கனவுகளின் காதலரே, நானும் முதல் முறை சித்திரங்களே இல்லாத புத்தகத்தில் படித்ததோடு சரி. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும். நேரம் தான் கிடைக்க மாட்டேன் என்கிறது.

SIV said...

ரபிஃக், நமது சித்திரங்களின் தனித்துவம் குறைந்து வருகிறது என்பது உன்மையே... மேலும் தற்போது இருக்கும் பத்திரிக்கைகளில் தொடர்கதைகளின் சித்திரங்களை பார்ப்பதே அரிதாகி விட்டது.

SIV said...

Dharshini, நீங்கள் உங்கள் பகுதி பழைய புத்தக கடைகள் மற்றும் வாடகை புத்தக கடைகளில் விசாரித்து பார்க்கலாம். கிடைக்க வில்லை என்றால் தங்கள் மெயில் ID கூறுங்கள். முடிந்த வரை என்னிடம் இருக்கும் ஸ்கேன்களை அனுப்பி வைக்கிறேன்

dharsh said...

thanks siv,Searched.cant find anything,thnk all knows d value of those pages.If possible fwd those scanned 2 :befriends.dharsh@gmail.com

நெல்லை ரவீந்திரன் said...

sir, this is really very great.
paaratta vaarthaikal illai

ILLUMINATI said...

தல.புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

http://illuminati8.blogspot.com/2010/02/wasabi-punisher-max.html

Booma said...

The first picture is not oomai Rani... It is Poongulazhi....This is the first page of the part 2 PS in old editions...

Harish.M said...

This is awesome.. Awesome..Awesome.. Am going to follow this blog..Great job sir..Keep updating this space

Unknown said...

Superb

Unknown said...

Superb