Thursday, April 15, 2010

பூவிழி காமிக்ஸ் (Poovili comics & bright moon comics)

தமிழ்நாட்டில் எப்போதும் ஏப்ரல்~ஜூன் மாதங்களில் காமிக்ஸ் விற்பனை அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் மட்டுமே வெளிவக்கூடிய காமிக்ஸ் பத்திரிக்கைகள் சில உண்டு. அவற்றில் ஒன்றுதான் பூவிழி பப்ளிக்கேஷன்ஸ். மதுரையில் இருக்கும் இவர்களுடைய நிறுவனத்திலிருந்து 'பூவிழி காமிக்ஸ்' மற்றும் 'பிரைட் மூன் காமிக்ஸ்' என இரண்டு காமிக்ஸ்கள் வெளிவந்தன. இவை வெளிவந்த ஆண்டு 1996 லிருந்து 1999 வரை. மொத்தம் வெளிவந்த காமிக்ஸ்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. கண்ணால் பார்த்த காமிக்ஸ்களை வைத்து பார்க்கும் போது குறைந்தபட்சம் பூவிழி காமிக்ஸில் 10 புத்தகங்களும் பிரைட் மூன் காமிக்ஸில் 3 புத்த்கங்களும் வந்திருக்க வேண்டும். M. உதயகுமார் என்பவரை ஆசிரியராக கொண்டு இந்த இதழ்கள் வெளிவந்திருக்கிறது. எம். ஐஸ்வர்யா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கதைகளை படைத்திருக்கிறார்கள். இதில் ஸ்ரீகாந்த் அவர்களின் படைப்புகளை மலர் காமிக்ஸ் மற்றும் தேசமலர் காமிக்ஸில் நீங்கள் படித்திருக்ககூடும். (இவரின் படைப்புகள் பற்றிய ஒரு பதிவை விரைவில் இடலாம் என இருக்கிறேன்). இறுதி இதழ்கள் அனைத்தும் எதாவது ஒரு ஆங்கில படத்தை மூலமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

நிறுவனம் - பூவிழி பப்ளிக்கேஷன்ஸ், மதுரை
ஆசிரியர் - M. உதயகுமார்
பக்கங்கள் - 48
விலை - ரூ 4
ஆண்டு - 1996 லிருந்து 1999 வரை (தோராயமாக)
எண்ணிக்கை - 13 (தோராயமாக)
 
இனி சில காமிக்ஸ்களின் அட்டைபடங்கள் மற்றும் சில பக்கங்கள்
 
1. வேட்டையாடும் பிசாசு - ஸ்ரீகாந்த்

2. மோகினித்தீவு - ஐஸ்வர்யா

3. விண்வெளி அரக்கன் - ஐஸ்வர்யா
(இங்கு அட்டைபடத்தில் கதை தலைப்பு மட்டும் தனியாக ஒட்டப்பட்டிருக்கிறது. பூவிழி காமிக்ஸின் லோகோவும் மாறி உள்ளது) 

4. பூத சுரங்கம் - ஐஸ்வர்யா
(இங்கும் அட்டைபடத்தில் கதை தலைப்பு மட்டும் தனியாக ஒட்டப்பட்டிருக்கிறது)


5. டினோசர் பயங்கரம் - ஸ்ரீகாந்த்
(ஜூராசிக் வேல்டு திரைப்படத்தை தழுவிய கதை)

6. எரிந்த மனிதன் - ஐஸ்வர்யா
 இந்த இதழில் ஸ்ரீகாந்த் உருவாக்கிய 'சிங்கரதம்' என்ற 32 பக்க வரலாற்று கதையும் இடம் பெற்று இருக்கிறது

7. பறவை மனிதன் - ஐஸ்வர்யா
(இந்த கதை கிட்டதட்ட பேட்மேன் கதை போலவே உள்ளது) 

இரத்தப்பேய் - ஐஸ்வர்யா
(இந்த இதழில் நமது காக்கை காளியை தழுவிய ஒரு சித்திர சிறு கதையும் இடம் பெற்றுள்ளது. 

இனி பிரைட் மூன் காமிக்ஸ் பற்றி பாப்போம். காமிக்ஸ் பெயரை தவிர பூவிழி காமிக்ஸ்க்கும் பிரைட் மூன் காமிக்ஸ்க்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. இதில் தான் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கிங்காங் சித்திரக்கதை வெளியிடப்பட்டிருக்கிறது. எண்ணிக்கையில் குறைவாகவே வெளிவந்துள்ளதாக தெரிகிறது.

1. பேய் சொல்லைத் தட்டாதே - ஐஸ்வர்யா

2. கல்லறைக் காவலன் - ஐஸ்வர்யா

கிங் காங் - ஐஸ்வர்யா
இந்த இதழின் அட்டைபடத்தை பார்த்த சில்ர் இந்த கதை அடுக்குமொழி புகழ் தமிழ் நடிகர் பற்றிய கதையா என விசாரித்தனர். அப்படியெல்லாம் இல்லை நண்பர்களே. இந்த கதை அப்படியே ஆங்கில படத்தின் காமிக்ஸ் வடிவமே ஆகும். இங்கும் ஒரு காட்டு குரங்கு சூப்பர் பிகர் ஓன்றை கரைட் செய்து அலம்பல் செய்கிறது. கதையின் கிளைமாக்ஸ் தான் நாம் யாருமே எதிர்பார்க்காத முடிவு. இந்த இதழ் வெளிவந்த ஆண்டு 1998. இந்த இதழில் ஸ்ரீகாந்த் எழுதிய தூங்காத துப்பாக்கி எனும் 32 பக்க கதையும் இடம் பெற்றுள்ளது.


மேற்கண்ட இதழ்களின் தரம் பற்றி நீங்களே ஓரிரு பக்கங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். ஆனாலும் தமிழில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு நாம் நன்றி கூறியே ஆக வேண்டும்.
வண்ணமையமான அட்டைப்படங்களும் சிறபாக உள்ளன. பள்ளி படிக்கும் போது இந்த இதழ்களை வாங்க தூண்டியதே வண்ணமையமான அட்டைபடங்களே.
இதழ்களின் விற்பனை தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டதாக தெரியவில்லை.


இந்த இதழ்களை பற்றி நண்பர்கள் ஏதேனும் தகவல்கள் இருந்தாலும் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்.

(பி-கு) சி.ஐ.டி சிங்காரம் பதிவு கூடுதல் தகவல்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

தாமதமானாலும் விஸ்வா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பதிவை படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே

18 comments:

King Viswa said...

நண்பர் சிவ்.வின் பதிவில் முதலில் கருத்தினை பதிப்பது நானேதான்.

SIV said...

தாமதமானாலும் விஸ்வா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

King Viswa said...

நண்பரே,

இந்த புத்தகங்கள் நம்முடைய ஒலக காமிக்ஸ் ரசிகரிடமும் பயன்கரவாதியிடமும் உள்ளன. அவர்கள் இருவரும் போட்டியாக ஒரு பதிவினை நெடுநாட்களாக பிளான் செய்துள்ளனர். எப்போது இடுவார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

அந்த பதிவு வரும்போது உங்களுக்கு இன்னமும் சில ஆச்சரியங்கள் காத்திருக்கும். நானும் இந்த புத்தக வரிசையில் ஒன்றிரண்டை வைத்துள்ளேன். அவர்களைப்போலவோ, உங்களைப்போலவோ என்னிடம் பெரிய பொக்கிஷ கலெக்ஷன் இல்லை என்பது பெரிய குறை.

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

மலையாளத்துல என்ன பரஞ்சுள்ளதுன்னு முழிப்போருக்காக...

EXPANSION FORMULA 144

ஒரு முழுநீள சித்திரக்கதா விலை 2 ரூ.

தலைவர்,
அ.கொ.தீ.க.

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

கேங் லீடரு,

மீக்கு மலையாளம் தெலுசா?

சொல்லவே இல்லை?

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

ஓமனக்குட்டியுடன் ஒருக்களிச்சுப் படுத்த ராவுகளின் விளைவு!

தலைவர்,
அ.கொ.தீ.க.

King Viswa said...

//ஓமனக்குட்டியுடன் ஒருக்களிச்சுப் படுத்த ராவுகளின் விளைவு!//

என்ன கமெண்ட்டு சார் அது?

ஏதோ மேட்டர் போல இருக்கிறதே? என்னை போல சிறுவர்கள் வந்து படிக்கும் இடத்தில் இப்படியா?

Rafiq Raja said...

மதுரை மாநகரத்தில் இருந்து கூட காமிக்ஸ் முயற்சிகள் நடந்திருக்கிறது அறிய தந்தற்கு நன்றி சிவ்.

பூவிழி காமிக்ஸின் அந்த தலைப்பை ஒட்டும் பாணி, பொன்னி காமிக்ஸின் தொனியில் இருக்கிறது. கூடவே, இரண்டிற்கும் பொதுவாக ஸ்ரீகாந்த் வேறு ஓவியம் வரைந்திருக்கிறார்.... எல்லா புத்தக வெளியீடுகளும் ஒரே பாணியில் இருப்பதற்கு, அவைகள் சிவகாசியில் அச்சானது காரணமாக இருக்கலாமோ...

கூடவே, அட்டைபடங்கள் பிரின்ட் செய்வதற்கு தனியாக ஒரு அச்சகத்தையும், கருப்பு வெள்ளை படங்கள் பிரின்ட் செய்வதற்கு தனியாகவும் நிறுவனங்களை அவர்கள் அமத்துவார்கள் என்று கேள்விபட்டிருப்பதால், அது காரணமாக கூட இருக்கலாம்.

ஓவியங்கள் இப்புத்தகங்களை சேர்த்து வைக்க கூட எண்ணம் வராமல் செய்து விடுகிறது... உங்களிடம் இருப்பில் இருப்பதால் அவற்றை இணையத்தில் திரும்ப பார்க்க ஒரு வாய்ப்பு கிடைப்பதே போதும் :)

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

ஒரு வகையில் இதுவும் சிறு வயது ரசிகர்களை கனவுலகிற்கு இட்டுச் செல்லும் கதைகளே. சிறு வயதினர் இந்த அட்டைப்படங்களைக் கண்டதும் நிச்சயம் அதில் மயங்கி விடுவர். கதையும் அவர்களைக் கிலிப்படுத்துவதாகவே அமையும். கிங்காங் கதையின் முடிவு! என்ன ஒரு ஆச்சர்யம். வழமைபோலவே இந்த காமிக்ஸ்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் நண்பரே.

SIV said...

நன்றி விஸ்வா அவர்களே,
அவர்களுடைய பதிவு சீக்கரம் வரட்டும்.

SIV said...

டாக்டர் மற்றும் ஒலக காமிக்ஸ் ரசிகர் அவர்களின் கருத்திற்கு நன்றி.

\\ஓமனக்குட்டியுடன் ஒருக்களிச்சுப் படுத்த ராவுகளின் விளைவு!\\
அந்த சமயத்தில் வேறு ஏதும் செய்யாமல் மலையாளம் கற்ற உங்களின் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.

SIV said...

கருத்திற்கு நன்றி ரபிஃக், பொன்னி காமிக்ஸ்க்கும் இவைக்கும் ஒற்றுமைகள் இருப்பதும் உண்மை.

\\ஓவியங்கள் இப்புத்தகங்களை சேர்த்து வைக்க கூட எண்ணம் வராமல் செய்து விடுகிறது... உங்களிடம் இருப்பில் இருப்பதால் அவற்றை இணையத்தில் திரும்ப பார்க்க ஒரு வாய்ப்பு கிடைப்பதே போதும் :)\\

அப்படி நாம் ஒதுக்கிவிடத்தேவையில்லை. ராணி காமிக்ஸின் கடைசி இதழ்களை ஒப்பிடும் போது இந்த புத்தகங்கள் எவ்வளவோ தெவலை

SIV said...

நன்றி கனவுகளின் காதலரே, சிறுவர்களுக்கு இந்த கதைகள் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த இடத்தில் மோகினி தீவு கதையின் முதல் பக்கத்தை படிக்க வேண்டுகிறேன்

:) said...

:)

Mr. J said...

அருமை நண்பரே. எங்கிருந்துதான் கிடைக்கிறதோ உங்களுக்கு எல்லாம் :)

அதைவிட நண்பரே வாழ்த்துக்கள் தொடர்ந்தும் பதியுங்கள்.

SIV said...

நன்றி Mr.J.
நம் இதர காமிக்ஸ் வலைபதிவர்ளுடன் ஒப்பிட்டால் இதுவெல்லாம் ஒன்றுமே இல்லை

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் அம்பேத்கார் தின வாழ்த்துக்கள்.

நண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

டார்லிங் லீனாவின், உருளைக் கண்ணாடியில் என் முகம் தெரியுமாறு ஏதாவது ஜித்து விளையாட்டுக்களை செய்தால் மோகினித்தீவை ஒரு கை பார்த்து விடலாம் :)) சிக்ஸ் பேக்குடன் நிற்கும் கல்லறைக் காவலனின் உடம்பைப் பார்த்தால் கட்டழகு காளை ரஃபிக் அவர்களின் நினைவு வருகிறது :)