குமுதத்தில் 1990 களில் வெளிவந்த 'ப்ளாண்டி' என்ற சித்திரக்கதை தொடர் பற்றியும் அதன் ஸ்கேன்கள் சிலவற்றையும் இந்த பதிவில் பார்ப்போம். எங்கள் வீட்டில் எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து குமுதம் வாங்கப்பட்டு வருகிறது. எழுத்து கூட்டி படிக்கும் காலங்களில் வெளிவந்த பிளாஷ் கார்டன் கதைகளும் பிளாண்டியும் தான் எனக்கு முதன் முதல்லில் அறிமுகமான காமிக்ஸ் வடிவ கதைகளாக இருக்க கூடும்.
பரந்து விரிந்த பாலைவனம், வேறுபட்ட ஒரு காலகட்டம் என்று வித்தியாசமான கதைத்தளம் கிடையாது, விதவிதமான கதாப்பாத்திரங்க கிடையாது, பரபரப்பன சம்பவங்கள் கிடையாது. கணவன் - மனைவி, வீடு, அலுவலம் மற்றும் இன்னும் ஐந்து ஆறு கதாப்பாத்திரங்கள் இவற்றை வைத்துக்கொண்டும் இனிமையான பல கதைகளை ஒவ்வொரு வாரமும் ஒன்று என வழங்கி உள்ளார்கள். ப்ளாண்டி என்ற அழகான, சுறுசுறுப்பான பெண், மற்றும் அவளின் கணவன் இவர்களே இந்த தொடரின் பிரதான பாத்திரங்கள். இத்தொடர் பற்றிய மேலதிக தகவல்களை விக்கியிலும், ப்ளாண்டி பிரதான வெப் சைட்டிலும் பார்க்கலாம்.
குமுதத்தில் வெளிவந்த சில ப்ளாண்டி பக்கங்களை காணலாம்.
முழுவதும் படித்தீர்களா நண்பர்களே.. தங்களின் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாமே. நீங்கள் ஆங்கிலத்தில் இன்னும் நிறைய ப்ளாண்டி கதைகளை படிக்க விரும்பினால் இங்கு உங்கள் வாசிப்பை தொடரலாம் நண்பர்களே.
21 comments:
வெல்கம் பேக் ஷிவ்.
இந்த குமுதம் தொடர் வெளிவந்த நேரத்தில் தான் தி அமேசிங் ஸ்பைடர் மேன் தொடரும் வெளிவந்தது என்னிடம் இருக்கும் பைண்டிங்க்கில் இந்த இரண்டு தொடரும், சில பல ஃப்ளாஷ் கோர்டன் பக்கங்களும் உள்ளன.
பை தி வே, உங்கள் தளம் லோட் ஆக நிறைய நேரம் எடுத்துக்கொள்வது எனக்கு மட்டும்தானா?
ஆழ்மனதில் பார்த்த ஞாபகம் இருக்கிறது.
ஆனால் குமுதத்தில் தானா என்பதில் எனக்கு சிறிது சந்தேகம்.
இது அதில் மட்டும்தான் வந்ததா?
சிறுவயதில் குமுதத்தில் விரும்பி படித்தது. பழைய நினைவுகளை இதன் மூலம் கிளறி விட்டீர்கள். தூக்கத்தில் ஆபீஸ் போகும் கதை இன்னும் நினைவில் இருக்கிறது. ஸ்கேன் மற்றும் லிங்க்குகளுக்கு நன்றி.
சிறுவயதில் இதை படிக்கும் போது அப்போது இதில் வரும் காமெடிகள் சில புரியவில்லை.
- லக்கி லிமட்
//சிறுவயதில் இதை படிக்கும் போது அப்போது இதில் வரும் காமெடிகள் சில புரியவில்லை.//
உண்மை
பார்த்த ஞாபகமில்லை தோழா! நன்றி!
குமுததில் பிளாஷ்கார்டன் மற்றும் ப்ளாண்டி பார்த்துள்ளேன். அமேசிங் ஸ்பைடர் மேன் பற்றி கேள்விபட்டதில்லை.
//உங்கள் தளம் லோட் ஆக நிறைய நேரம் எடுத்துக்கொள்வது எனக்கு மட்டும்தானா?//
அப்படித்தான் என நினைக்கிறேன். வருகைக்கும் கருத்திற்கு நன்றி விஸ்வா
//இது அதில் மட்டும்தான் வந்ததா// சரியாக தெரியவில்லை கிருஷ்ணா. ஆனால் தற்போது எதோ ஓரு ஆங்கில நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை பக்கங்களில் ப்ளாண்டி தலைகாட்டுகிறார் என எண்ணுகிறேன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி லக்கி லிமிட்.
//சிறுவயதில் இதை படிக்கும் போது அப்போது இதில் வரும் காமெடிகள் சில புரியவில்லை//
:)
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜான். பார்த்த ஞாபகம் இல்லையென்றாலும் இங்கு இடப்பட்டு இருக்கும் கதைகளை ரசிக்கலாம் நண்பரே..
90-களில் வந்ததா?! எப்படி மிஸ் செய்தேன்?!! இவற்றை படித்த ஞாபகம் சுத்தமாக இல்லை! நைஸ் கலெக்ஷன்! :)
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி karthik.
//தற்போது எதோ ஓரு ஆங்கில நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை பக்கங்களில் ப்ளாண்டி தலைகாட்டுகிறார் என எண்ணுகிறேன்.//
Deccan Chronicle Sunday Strips.
Yes... Thanks for the info Viswa
ஹ்ம்ம்...பல காலம் நினைவுப்பேழையின் மிக ஆழமான பகுதிகளில் யாரும் கேட்பாரற்று உறைந்து கிடந்த இனிமையான இளமைக்கால நினைவுகள்...அந்த காலகட்டத்தில் நானும் ப்ளாண்டி சேகரித்து வைத்த ஞாபகம்.ப்ளாண்டி=blonde யா ?? அப்போது கதை புரியாமல் வண்ணமயமான கார்ட்டூன் character காக தொடர்ந்து படித்தேன்(படம் பார்த்தேன் என்பதே உண்மை).
//ப்ளாண்டி=blonde யா ??//
அது ஃப்ளாண்டி தான்.
ஒரு ரகசியம் சொல்லவா? இந்த கதையின் ஹீரோ பெயர் அது கிடையாது அவரது மனைவியின் பெயரே ஃப்ளாண்டி.
தற்போது டெக்கன் குரோனிக்கல் நாளிதழில் தினசரி காமிக்ஸ் ஸ்ட்ரிப் ஆக ஃப்ளாண்டி வருகின்றது.
ஜாலியாக டைம் பாஸ் ஆக Deccan Chronicle ஒரு சிறந்த சாதனம்.
அணைத்து காமிக்ஸ் ஸ்ட்ரிப் Daily Strip கதைகளுமே சூப்பர்.
இப்போதைய நாளிதழ்களில் காமிக் ஸ்ட்ரிப்'ஐ பொருத்தவரையில் DC is the Best one Which is very good
//அது ஃப்ளாண்டி தான்.// தாங்கள் பதிலுக்கு நன்றி விஸ்வா!
actualla இத்தனை நாள் நான் இருந்த அறியாமையின் வெளிப்பாடே...
/ப்ளாண்டி=blonde யா ??/ இந்த கேள்விக்குறிக்கு பதில் ஒரு ஆச்சர்யக்குறியை சேர்த்து படிக்கவும். : )
//அப்போது கதை புரியாமல் வண்ணமயமான கார்ட்டூன் character காக தொடர்ந்து படித்தேன்(படம் பார்த்தேன் என்பதே உண்மை).
//
ஆம் நண்பரே, கதை புரியவில்லையென்றாலும் ரசிக்க கூடிய சித்திரங்கள் தான்.
எனக்கு ரொம்ப பிடிச்ச கார்ட்டூன் இது.. அதையும் தமிழில் படிக்கறப்போ... அருமை.. அருமை. நல்லவேளை இந்த பதிவை மிஸ் பண்ணலை...
குமுதம் எங்கள் வீட்டிற்கு வந்தவுடன் நான் முதலில் படிப்பது இதனைத்தான் , இதையெல்லாம் எப்படி மறந்துவிட்டு வெறும் நடிகைகளுக்குமட்டும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததோ குமுதம் ! அந்த பொற்காலம் வார இதழ்களில் மீண்டும் வராதா என எண்ணவைக்கின்றது. பழய நினைவுகளை நினைவூட்டியதற்கு நன்றி நண்பரே!
தாமதத்திற்கு மன்னிக்கவும். எப்படியோ படிக்க விட்டு போச்சு. நீங்கள் லயன் காமிக்ஸ் FaceBOOK க்ருப்பில் உங்கள் பதிவுகளை பகிர்கிறீர்களா ?
நானும் படித்த நியாபகம் இருக்கிறது, எதில் என்று தெரியவில்லை. எனக்கு பிடித்த ஒரு காமிக் ஸ்ட்ரிப். ஸ்கேன்னுக்கு நன்றி.
கருத்திற்கு நன்றி ஸ்வர்ணரேகா.
//அந்த பொற்காலம் வார இதழ்களில் மீண்டும் வராதா என எண்ணவைக்கின்றது.//
ஆம் நண்பரே, தற்போதைய வார இதழ்கள் ஒன்றில் கூட படக்கதைகள் வருவதில்லை..
ராஜ் குமார் முத்து, FaceBOOK க்ருப்பில் பெரும்பாலும் பகிர்வதில்லை. இனிமேல் செய்திட்டால் போயிற்று...
Post a Comment