வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். NBS ஐ ஆவலுடன் அனைவரும் எதிர்பர்த்துக் கொண்டு இருக்கும் வேளையில் லயன் காமிக்ஸ் பற்றி ஒரு பதிவு. முத்து காமிக்ஸ் பற்றிய தகவல்கள் பதிவு வை அடுத்து இப்போது இதோ லயன் காமிக்ஸ் பற்றிய பதிவு இங்கே. முத்துவில் இல்லாத ஒரு சிரமம் லயனில் என்னவென்றால் லயனி நிறைய மல்டி ஹீரோ ஸ்பெஷல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை பகுப்பது மிகவும் சிரமமாக இருந்தது. அதனால் பல இடங்களில் மல்டி ஹீரோ ஸ்பெஷல் என்று மட்டும் பொதுவாக பகுக்கபட்டு இருக்கும்.
நாயகர்களின் பங்கு மற்றும் டாப் டென் நாயகர்கள்:
முதல் இடத்தை இன்றைய சூப்பர் ஸ்டார் டெக்ஸ் வில்லரும் இரண்டாம் இடத்தை நேற்றைய சூப்பர் ஸ்டார் குற்றசக்கரவர்த்தியும் பிடிக்கிறார்கள். முன்றாம் இடத்தை மாடஸ்டி பிடிக்கிறார்.
டெக்ஸ், காரிகன், ரிப் கெர்பி போன்றோர் அணைத்து காலகட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
கதைகளின் தாயகங்கள்:
ஸ்பைடர், ஆர்ச்சி, மாடஸ்டி ஆகிய மூவரில் பலத்தினால் பிரிட்டன் கதைகளின் தாயகங்களில் முதலிடம் பிடிக்கிறது. டெக்ஸ் என்ற தனியொரு நபர் மூலம் இத்தாலி இரண்டாம் இடம் பிடிக்கிறது. முத்துவில் இரண்டாம் இடம் (38%) பிடித்த அமெரிக்கா லயனில் முன்றாம் இடம் பிடிக்கிறது. ஆனால் வரவிருக்கும் நாட்களில் ஐரோப்பியாவின் ஆதிக்கம் இருக்கும் என்பது கண்கூடு.
கதைகளின் சுவைகள்:
இதழ்களின் சைஸ்கள்:
சாதாரன் சைஸில் 136 இதழ்களும் பாக்கெட் சைஸில் 63 இதழ்களும் பெரிய சைஸில் 15 இதழ்களும் வந்துள்ளன. இனிமேல் பாக்கெட் சைஸும் சாதாரண சைஸும் கிடையாது என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம் தான். சின்ன சைஸ் தரும் comfort அலாதியானது. ஆகையால் அவ்வப்போது சின்ன சைஸ் இதழ்களை வெளியிட வேண்டும் என்பது என் தனிப்பட்ட ஆசை.
இங்கு நான் சாதாரண சைஸ் என்று பொதுவாக கூறி இருநதாலும் அதில் சற்று பெரிய சைஸ் (உ-ம் தலைவாங்கி குரங்கு) 7 இதழ்கள், கிரைம் நாவல் சைஸ் (உ-ம் வாரிசு வேட்டை) 4 இதழ்கள், என்று பல சைஸ்களில் இதழ்கள் வந்துள்ளன.
லயனின் ஆரம்ப காலத்திலேயே தற்போது இருக்கும் பெரிய சைஸ் ஐ விட பெரிய சைஸில் 3 இதழ்கள் வந்துள்ளன. (இரும்பு மனிதன், கொலைப்படை, சதி வலை). இடையில் பெரிய சைஸ் என்பது இரத்த்ப்படலம் இதழ்களுக்கு மட்டுமே.
MDS முதல் ஸ்பெஷல் இதழ்கள் அனைத்தும் பெரிய சைஸில் வெளிவருகின்றன.
இறுதியாக வெளிவந்த பாக்கெட் சைஸ் இதழான டெக்ஸ் வில்லரின் மெக்சிகோ படலம் வெளிவந்து கிட்டதட்ட 10 வருடங்கள் ஆகிறது.
இன்னும் சில தகவலகள்:
1. டெக்ஸ் வில்லர் தொடர்ச்சியாக 6 இதழ்களில் தலை கட்டியுள்ளார் (169 to 174). இவரைத்தவிர யாரும் இரண்டு கதைகளுக்கு மேல் தொடர்ச்சியாக தலைகாட்டவில்லை.
2. ரிப் கெர்பி, காரிகன் - இந்த இருவரும் லயன் மற்றும் முத்து இரண்டு காமிக்ஸ்களின் டாப்10 இலும் இடம் பிடித்துள்ளனர்.
3. லயனின் முதல் முழு வண்ண இதழ் ஜெஸ்ஸி ஜேம்ஸ் (sl . no 104). இதுவரை மொத்தம் 10 இதழ்கள் முழு வண்ணத்தில் வெளிவந்துள்ளன.
4. மூன்று இதழ்கள் மறுபதிப்புகளாக வந்துள்ளன. (பழிவங்கும் பொம்மை-99, எத்தனுக்கு எத்தன்-108, குற்ற சக்கரவர்த்தி-111)
5. இதுவரை 100 ரூபாய் விலை இதழ்கள் 7ம் ஒரு 200 ரூபாய் இதழும் வெளிவந்துள்ளன.
அரைசதம் நெருங்கும் டெக்ஸ்:
டெக்ஸ் வில்லர் இதுவரை மொத்தம் 48 லயன் இதழ்களில் தலைகாட்டி உள்ளார். (இந்த எண்ணிக்கை சரி என்றுதானா? பிழை இருந்தால் திருத்தவும்.). லயனின் 50, 100, 150, 200 என அனைத்து மைல் கல் இதழ்களையும் அலங்கரித்த டெக்ஸ் தன் தனிப்பட்ட அரைசதத்தை பூர்த்தி செய்ய உள்ளார். (அவரின் திகில் மற்றும் cc இதழ்களை கண்ணக்கில் கொள்ளாமல்). ஆகவே ஓய்வில் இருந்து மீண்டு வருகையில் அவரின் அரைசதத்தை கொண்டாடிடுவார்.
பின் குறிப்பு:
1. இந்த பதிவுக்கான அடிப்படை தகவலான லயன் பட்டியல் பதிவை வெளியிட்டு உள்ள முதலைப்பட்டாளம் அவர்களுக்கும் பல சந்தேகங்களை (குறிப்பாக இதழ்களின் சைஸ் பற்றி) தொலைபேசி வழியாக திர்த்து வைத்த RT முருகன் அவர்களுக்கும் நன்றி. விஸ்வாவின் ஸ்பெஷல் இதழ்கள் பற்றிய பதிவும் பயனுள்ளதாக இருந்தது.
2.ஒரே இதழில் ஒன்றுக்கு மேறபட்ட நாயகர்களின் கதைகள் இடம் பெறும் பட்சத்தில் முதன்மையான் ஹீரோவின் கதை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது.. முடிந்த வரை தவறுகள் இல்லாமல் ரெடி செய்துள்ளேன். தவறுகள் இருப்பின் தயவு செய்து சுட்டி காட்டவும்.

13 comments:
நல்ல தகவல்களை திரட்டி வழங்கியுள்ளீர்கள். நன்றி நண்பரே!
//டெக்ஸ் வில்லர் இதுவரை மொத்தம் 48 லயன் இதழ்களில் தலைகாட்டி உள்ளார்//
இந்த தகவல் சரி என சேலம் " டெக்ஸ்" விஜய ராகவன் உறுதிபடுத்தியுள்ளார்
நன்றி நண்பரே, டெக்ஸ் பற்றிய தகவலை உறுதிப்படுத்தியதற்கு நன்றி. bytheway யார் இந்த சேலம் " டெக்ஸ்" விஜய ராகவன் என்று சொன்னால் நன்றாக என்று சொன்னால் நன்றாக
ஆசிரியரின் பெங்களூரு காமிக்கான் பதிவில் விஜய ராகவன் பற்றி எழுதியுள்ளார். டெக்ஸ் வில்லர் மீது தனக்குள்ள அபிமானத்தின் காரணமாக " டெக்ஸ்" என்ற அடை மொழியை சேர்த்துள்ளார்
Thats fine. Thanks for the Info Stalin
லயன் கணக்கெடுப்புகள் கனஜோர். Statistics க்கும் நமக்கும் கொஞ்சம் அலர்ஜி. ஆனால் அவற்றை இப்படி Chart வடிவத்தில் காணும் போது தனி கவர்ச்சி தான்.
அப்புறம், அட்வான்ஸ்ட் கல்யாண நல்வாழ்த்துகள்,சிவ் :D
Hello sir .i am that guy.you can see more on me in super hero super special -mathaam oru vasagar
Hi SalemTex, nice to see your comment. I will chk SHSS soon
Thanks for comment and wishes Rafiq..
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/02/4.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன். உங்கள் மூலமே இத்தகவலை நான் அறிந்து கொள்ள முடிந்தது.
என் சித்திரக்கதை வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்கு வலைசரம் தளத்திற்கு நன்றிகள்.
நமது காமிக்ஸ் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
.

good job. thodarnthu eluthungal.
Post a Comment