Sunday, May 1, 2011

வாண்டுமாமாவின் ஹீரோ சங்கர்

வணக்கம் தோழர்களே, அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள், பதிவிடுதலில் விழுந்துவிட்ட பெரிய இடைவெளியை குறைப்பற்காக ஒரு சிறிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். மேகலா பத்திரிக்கை குழுவினர் தனியாக மேகலா காமிக்ஸ் என்ற காமிக்ஸ் பத்திரிக்கை நடத்தி  வந்தது நம் அனைவரும் அறிந்தது. அதே போல் அவர்களின் மாத நாவலிலும் எட்டு பக்கங்களை படக்கதைக்கு ஒதுக்கும் வழகத்தினை கொஞ்ச காலம் கொண்டிருந்தனர். பெறும்பாலும் இந்த பக்கங்களை அலங்கரிப்பது நம் வாண்டுமாமாவின் சித்திரக்கதைகளே. குஷிவாலி ஹரிஸ், சமத்து சாரு போன்ற கதாபாத்திரங்களை பார்த்த ஞாபகம் உள்ளது. இதோ இங்கு நீங்கள் பார்க்கும் கதை "ஹீரோ சங்கர்" எனும் சிறுவனுடைய சாகஸம். பார்வதி சித்திரக்கதைகளில் நாம் பார்த்திராத வாண்டுமாமா கதைகளில் இதுவும் ஒன்று. கயவர்களால் கடத்தப்பட்ட ஒரு சிறுமியை ஹீரோ சங்கர் வையாபுரி என்னும் துப்பறியும் அன்பரின் துணையுடன் மீட்பதே கதை. சித்திரங்களை சசி வரைந்துள்ளார். இந்த சித்திரக்கதை 'மே 1996' தேதியிட்ட இதழில் வெளிவந்துள்ளது. இந்த கதையின் சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு...





 இந்த கதை வெளிவந்த மேகலா இதழ்

9 comments:

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

மாத நாவல்களில் வாண்டுமாமாவின் சித்திரக்கதை வெளிவந்த செய்தி காமிக்ஸ் உலகிற்கு அரிய செய்தி!
பதிவிற்கு நன்றி!

Lucky Limat - லக்கி லிமட் said...

இதே போல் ஒரு கார் பொம்மைக்குள் போதை மருந்தோ , வைரமோ கடத்தும் சித்திர கதை வந்தது நண்பரே... உங்களிடம் இருக்கிறதா

HAJA ISMAIL said...

நண்பர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல
வாழ்த்துக்கள்,
நண்பரே தங்களும் ஒரு பதிவை இட்டு "வாண்டு மாமா" அவர்களின் கதாபாத்திரமான ஹீரோ சங்கரை அறிமுகபடுத்தியதர்க்கு நன்றி
சித்திரங்கள் சுமார் தான் என்றாலும், கதை நன்றாக எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது
அன்புடன்
ஹஜா இஸ்மாயில்

SIV said...

தங்களில் முதன்மையான கருத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி அய்யம்பாளையத்தார் அவர்களே

SIV said...

கருத்திற்கு நன்றி லக்கி. நீங்கள் குறிப்பிடும் அந்த கதை ஞாபகம் வரவில்லை.
இங்கு நீங்கள் பதிவு போட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டதை நினைவு படுத்துகிறேன்

SIV said...

கருத்திற்கு நன்றி ஹாஜா, என்னுடைய தனிப்பட்ட கருத்தின் படி, இந்த சித்திரக்கதையானது சித்திரத்திலும் கதையிலும் சுமார் தான். ஓருவேளை சிறுவனாக இருக்கும் போது படித்திருந்தால் சுவையாக இருந்திருக்குமோ என்னவோ.

Anonymous said...

What i find tough is to find a blog that can seize me for a minute however your blog is different. Bravo.

Anonymous said...

This was pretty provided that there are a lot of out there just waiting for the right.

அரவிந்த் said...

நன்பேண்டா!!!!