ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும் போது பழைய காமிக்ஸ்களின் சேகரிப்பில் இருந்து சிலவற்றை படிப்பது வழக்கம். இந்த வருடம் படித்த கதைகளுள் ஒன்று மந்திர மண்னில் மாடஸ்டி. எனக்கு பிடித்த லயன் டாப்10 ல் இந்த கதை கண்டிப்பாக இருக்கும்
பாலைவன நாட்டில் நடக்கும் கதை என்பதாலோ சூட்டை குறைக்க (அல்லது அதிகப்படுத்த) மாடஸ்டியுடன் சுமார் பத்து பிகர்கள் (சுமார் பிகர்கள் பத்து என படிக்க கூடாது) இந்த கதையில் களம் இறங்குகிறார்கள்.
பேரழிகியான மாடஸ்டியுடன் அரேபிய ஷேக் ஒருவர் நட்பாக இருக்கிறார். (ஆமாங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் பிரண்ட்ஸ் தான்). பெய்ரூட்டில் உள்ள ஒரு கிளப்பில் மாடஸ்டியுடன் சூதாடி கொண்டு இருக்கிறார். (நம்ம மன்மோகன் ஜீயும் அடிக்கடி பாரின் போறார். இப்படித்தான் அவரும் டைம் பாஸ் செய்வாரோ). இங்கு சீட்டாடியது போதாதென்று அவருடைய நாட்டிற்கும் மாடஸ்டியை சீட்டாட அழைக்கிறார் ஷேக். வேறு ஏதும் வேலை வெட்டி இல்லாத மாடஸ்டி-வில்லி உடனே கிளம்புகிறார்கள். உடன் வில்லியின் பெண் நண்பர்களான நடன அழக்கிகளும் கிளம்புகிறார்கள்.
அழகிகள் அந்தபுரத்தில், வில்லி வெளியே என இருக்கும் சூழ்நிலையில் அதையும் இதையும் செய்து தப்புகிறார்கள் நம் நீதி காவலர்கள். மீண்டும் ஷேக்கையே அரியனையில் உட்கார வைத்து அழகு பார்க்கின்றனர்.
அருமை சிறுமி கரிமா
இந்த டெம்பிளேட் கதையை சுவாரிஸ்யமாக்கிய பெருமை கரிமா என்ற சிறுமியைச் சாரும். வில்லியை பூதம் என நினைத்து அவள் அடிக்கும் கூத்துகள் அருமை. வில்லியும் அந்த சிறுமியும் பரிமாறிக் கொள்ளும் பாசம் படிப்பதற்கு இனிமையானது. குழந்தையின் மழழை மொழிபெயர்ப்பும் அருமை.
இந்த கதை லயனில் 102 வது இதழாக வெளிவந்தது. லயன் சென்சுரி ஸ்பெஷசல் என்ற மெகா கிட் இதழ் வந்த சமயத்தில் வந்திட்ட இதழ். கலக்கலான அட்டைப்படம்.
ஆங்கில வடிவம்
இந்த கதை ஆங்கிலத்தில் Willie de djinn என்ற பெயரில் இணையத்தில் முழுமையாக படிக்க கிடைக்கிறது. அதற்கான இணைப்பு. விஜயன் சார் நாமெல்லாம் கெட்டுப்போய் விடக்கூடாது என்று சென்ஸார் செய்திட்ட சில படங்கள் இங்கே.
பாலைவன நாட்டில் நடக்கும் கதை என்பதாலோ சூட்டை குறைக்க (அல்லது அதிகப்படுத்த) மாடஸ்டியுடன் சுமார் பத்து பிகர்கள் (சுமார் பிகர்கள் பத்து என படிக்க கூடாது) இந்த கதையில் களம் இறங்குகிறார்கள்.
ரூம் போட்டு யோசிக்கும் வழக்கம் இல்லை போல
அந்த டயலாக் பலூனை போட வேற இடமே கிடைக்கலையா
இதற்கு அப்புறம் கதை வேறு என்னவாக இருக்க முடியும். நம்ம காமிக்ஸ் ஹீரோக்கள் எங்கேயாவது சுற்றுலா சென்றால் கண்டிப்பாக பக்கத்து நாட்டிலோ அல்லது அந்த நாட்டிலோ எதாவது ஒரு புரட்சி நடந்து கொண்டிருக்கும். நமது காமிக்ஸ் ஹீரோக்கள் எதாவது ஒரு குரூப்பில் சேர்ந்து அந்த புரட்சியை முடிவுக்கு கொண்டு வந்து நீதியை நிலைநாட்டி விட்டு வருதானே வழக்கம். இங்கேயும் அதே நடக்கிறது. இங்கு நாடளும் ஷேக்கை ஓரங்கட்டி விட்டு தான் நாட்டின் அதிபராக ஆக ஷேக்கின் தம்பி முயற்சி செய்கிறார். (அரசு பணத்தில் மாடஸ்டியுன் சீட்டாடுவது போன்ற நல்ல விஷயங்களை செய்யும் ஷேக் பக்கம் தான் மக்கள் ஆதரவு). ஆனாலும் ராணுவத்தையும் தன் கட்டுப்பாட்டி வைத்து கொண்டுவந்து இருக்கும் ஷேக்கின் தம்பி ஷேக் ஊரில் இருந்து வருகையிலேயே கொலை செய்ய திட்டமிடுகிறார். அந்த சூழ்ச்சியினால் மாடஸ்டியின் உடன் வந்த விமான ஊழியர்கள் கொல்லப்படுகிறார்கள். வில்லி தப்புகிறார். மாடஸ்டியும் இளம்பெண்களும் அரண்மனை அந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் (அதானே பாத்தேன்).இந்த டவுசர் போட்ட போலீஸு தொல்ல தாங்கப்பா
அருமை சிறுமி கரிமா
இந்த டெம்பிளேட் கதையை சுவாரிஸ்யமாக்கிய பெருமை கரிமா என்ற சிறுமியைச் சாரும். வில்லியை பூதம் என நினைத்து அவள் அடிக்கும் கூத்துகள் அருமை. வில்லியும் அந்த சிறுமியும் பரிமாறிக் கொள்ளும் பாசம் படிப்பதற்கு இனிமையானது. குழந்தையின் மழழை மொழிபெயர்ப்பும் அருமை.
மக்கு பூதத்திற்கு ஆறுதல்
இந்த கதை லயனில் 102 வது இதழாக வெளிவந்தது. லயன் சென்சுரி ஸ்பெஷசல் என்ற மெகா கிட் இதழ் வந்த சமயத்தில் வந்திட்ட இதழ். கலக்கலான அட்டைப்படம்.
ஆங்கில வடிவம்
இந்த கதை ஆங்கிலத்தில் Willie de djinn என்ற பெயரில் இணையத்தில் முழுமையாக படிக்க கிடைக்கிறது. அதற்கான இணைப்பு. விஜயன் சார் நாமெல்லாம் கெட்டுப்போய் விடக்கூடாது என்று சென்ஸார் செய்திட்ட சில படங்கள் இங்கே.
லயன் டாப்10 கதைகளும் நாயகர்களும்
இந்த இதழில் லயன் ஆசிரியர் விஜயன் லயன் காமிக்ஸின் டாப்10 கதைகளையும் நாயகர்களையும் வாசகர் தேர்வு அடிப்படையில் பட்டியல் இட்டு இருக்கிறார். டாப்10 கதைகளில் ஒன்றை கூட நான் படித்ததில்லை என்பது எவ்வளவு பெரிய சோகம்
அட்டைபடம் மற்றும் ஆங்கில தலைப்பு உபயம் விஸ்வா. அவரின் இந்த பதிவில் மாடஸ்டியின் அனைத்து கதைகள் பற்றிய தகவல்கள் உள்ளன். இந்த பதிவு இங்குடன் முடிவடையகிறது. படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்.
15 comments:
சூப்பர் பதிவு ஷிவ்.
இந்த கதையின் பின்னணியில் ஒரு சுவையான கதை உண்டு. ஆட்சேபனை இல்லையென்றால் தொடர்ந்து படிக்கவும்.
இந்த மந்திர மண்ணில் மாடஸ்டி கதைதான் நாம் ரொமாரியோ வரைந்த முழு மாடஸ்டி கதை. இதற்கு முந்தைய கதையாகிய பீனிக்ஸ் வார் லார்ட்ஸ் (திகில் நகரம் டோக்கியோ) கதையின் பாதியில் மாடஸ்டி காமிக்ஸ் கதைகளின் ஆஸ்தான ஓவியர் ஜிம் ஹோல்டாவே இறந்துவிட, பாதி கதையில் இருந்து ரொமாரியோ தொடருகிறார். அந்த கதை முடிந்த பின்பு அடுத்த கதைக்கான கதை சுருக்கத்தை அனுப்புகிறார் பீடர் ஒ டானால். ஆனால் அந்த பதிப்பகத்தார் இந்த கதை சற்று கடினமான கதை, முதல் முறையாக முழு கதையை ரொமாரியோ வரைவதால் ஒரு சிம்பிள் ஆன கதையமைப்பை கொடுக்கவும் என்று கேட்கிறார். அதற்கேற்றாற்போல் ஒ டானாலும் கதையை மாற்றி ஒரு மசாலா ஆக்க்ஷன் கதையை கொடுக்கிறார். அதுதான் இந்த கதை.
கிங் விஸ்வா
சென்னை சூப்பர் காமிக்ஸ் - இரண்டாம் புத்தகம் - சென்னை சூப்பர் கிட்ஸ்
ஷிவ்,
நீங்கள் சரியாக தேதி பார்த்துதான் பதிவிட்டீர்களா என்று தெரியவில்லை. ஆனால் சரியாக நாற்பத்தியொரு ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் தான் இந்த மந்திர மண்ணில் மாடஸ்டி கதை முதலில் செய்திதாளில் வந்தது.
Willi the Djinn - Starting Date 01st June 1970.
ஷிவ்!
//பாலைவன நாட்டில் நடக்கும் கதை என்பதாலோ சூட்டை குறைக்க (அல்லது அதிகப்படுத்த) மாடஸ்டியுடன் சுமார் பத்து பிகர்கள் (சுமார் பிகர்கள் பத்து என படிக்க கூடாது) இந்த கதையில் களம் இறங்குகிறார்கள். //
இயல்பான எழுத்து நடை! நல்லதொரு விமர்ச்சனம். வாழ்த்துக்கள்!
அருமை ஷிவ்,
மந்திர மண்ணில் மாடஸ்தி, 10வது ஆண்டு மலராக பளபளக்கும் அட்டையில் வெளிவந்தது இன்றும் நியாபகம் இருக்கிறது. நினைவுகூறல் அருமை.
அந்த டாப் 10 கதைகளில், பெரும்பானவற்றை இரவல் வாங்கியாவாது படித்திருந்தாலும், கைவசம் 5 புத்தகங்கள் கூட இல்லை. என்ன வாழ்க்கைடா இது :)
மேலதிக தகவல்களுக்கு நன்றி விஸ்வா, சுவையான பின்னணி தான். இந்த கதையின் ஓவியர் ரொமாரியோ கொடுக்கப்பட்ட வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார்.
//நீங்கள் சரியாக தேதி பார்த்துதான் பதிவிட்டீர்களா என்று தெரியவில்லை//
சான்ஸே இல்ல. இது முழுமையான coincidence தான்.
//இயல்பான எழுத்து நடை! நல்லதொரு விமர்ச்சனம். //
தங்கள் கருத்திற்கு நன்றி அய்யம்பாளையம் அவர்களே
ரபிஃக், இப்படி அனைத்து வாசகர்களையும் ஆசிரியர் விஜயனையும் கவர்ந்த கதைகளில் எதுவுமே மறுபதிப்பு செய்யப்படவில்லை என்பது கொடுமை
//பளபளக்கும் அட்டையில் //
அந்த சமயங்களில் இந்த பளபளக்கும் அட்டை என்பது மிகவும் அரிது. இந்த வண்ணத்தெரிவும் வித்தியாசமானது. இந்த அட்டைப்படம் அந்த ஆண்டின் சிறந்த அட்டைப்படமாக தேர்வு செய்யப்பட்டதாக கூட நினைவு.
கருத்துகளுக்கு நன்றி ரபிஃக்
ஏப்பா தம்பி.. ராணி காமிக்ஸ் பத்தி கொஞ்சம் போடலாமுல்ல?? அந்த காலத்துல ரெண்டு ரூவாடா.. ரெண்டு ரூவா கொடுத்து வாங்கி படிச்சது. சூப்பர் மேனுக்கு முன்னாடியே, பேண்ட்டுக்கு மேல உள்ளாடை(?) போட்டவர் எங்க மாயாவி. அவரப் பத்தி போடணுமுன்னு கேட்டுக்குறேன். வேணுமுன்னா இதையும் கொஞ்சம் படிச்சுப் பார்.
http://sivigai.blogspot.com/2009/04/blog-post.html
http://sivigai.blogspot.com/2009/04/blog-post_23.html
அப்பவாவது என் பக்கமும் கொஞ்சம் காத்தடிக்கும்.
அரவிந்த் ராணி காமிக்ஸ் தாண்டி லயன் பக்கம் கரை ஒதுங்காதது வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் ராணி காமிக்ஸ் ரசிகர்களுக்கு என்றே தனியே ஒரு வலைதளம் இயங்குகிறது. என்ன பிரச்சனை என்றால் பதிவுகள் போட்டு just ஒரு வருடம் தான் ஆகிறது.
http://www.ranicomics.com/
மின்னல் வேகப் பதிவர் ரபிஃக் அவர்களே, உங்கள் வலைதள்த்திற்கு இம்பூட்டு டிமாண்ட் இருக்கையில் நீங்கள் சும்மா இருக்கலாமா?
\\அரவிந்த் ராணி காமிக்ஸ் தாண்டி லயன் பக்கம் கரை ஒதுங்காதது வருத்தம் அளிக்கிறது.\\
குசும்பு?!?! ஊர்ப்பக்கம் வருவல்ல?
ஹாய் ஷிவ்,
அந்த புத்தகத்தினை வாசித்த அருமையான நாட்களை ஞாபகப்படுத்தும் சிறப்பு பதிவு. கரிமாவின் பாத்திரம் கதையின் சுவாரஸ்யத்தினை கூட்டுவது நீங்கள் கூறியது போல் உண்மைதான். நான் editor's top 10இல் "மரணத்தில் நிழலில்" மட்டுமே வாசித்துள்ளேன். அப்பா வாங்கித்தந்த புத்தகத்தினை தொலைத்துவிட்டு, மீண்டும் பழைய புத்தக கடையில் வாங்கி பத்திரப்படுத்தியுள்ளேன்.
தோழரே! நல்ல பதிவை மிக சிறப்பான முறையில் இட்டதற்கு, மிக்க நன்றி,
எல்லா மாடஸ்டி கதைகளும் என்னிடம் இல்லையே! என்ற வருத்தத்தை தருகிறது தங்களின் பதிவு
குழந்தைகள் என்றால் அழகுதான் அதுவும், புத்திசாலி குளந்தைகளை பற்றி சொலவா? வேண்டும்? நான் அந்த "கரிமா" குழந்தையை மிகவும் ரசித்தேன். தங்களின் சிலேடையானஎழுத்தாற்றலையும்தான்
அன்புடன்,
ஹாஜா இஸ்மாயில்
நன்றி Vimalaharan,
தங்களுடைய பழைய நினைவுகளுக்கு என் பதிவு உதவி இருப்பது கண்டு மகிழ்ச்சி.
வருகைக்கும் கருத்திற்கு நன்றி ஹாஜா இஸ்மாயில்.
//எல்லா மாடஸ்டி கதைகளும் என்னிடம் இல்லையே! என்ற வருத்தத்தை தருகிறது தங்களின் பதிவு
//
முயற்சி செய்யுங்கள் நண்பரே. கண்டிப்பாக கிடைக்கும். வேறு வழியில்லை என்றால் இணையத்தில் கிடைக்கும் ஆங்கில கதைகளை படிக்க வேண்டியது தான்
Post a Comment