Tuesday, February 15, 2011

XIII - இரத்தப்படலம் அனுபவங்கள்


(பல நாட்களுக்கு முன்பு தயாரித்த பதிவு. சிறிய தாமத்துடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது)
கடந்த இரண்டு மூன்று நாட்களாக எங்கள் வீட்டில் டீ.வி ஓடவில்லை, கணிப்பொறி இயங்கவில்லை.... அந்த அளவு இரத்தப்படலம் என்னை ஆக்கிரமித்து இருந்தது. ஒரு வழியாக படித்து முடித்து விட்டேன். இங்கு எனக்கும் இரத்தப்படலத்திற்கும் இருக்கும் 'பூர்வ ஜென்ம' பந்தத்தை இங்கு நினைவுகூர்கிறேன


XIII எனக்கு முதன்முதலில் அறிமுகம் ஆகியது பாகம் - 5 லில். அந்நாளில் ஒன்னுமே புரியாத மொக்கை கதையாக பட்ட அந்த புத்தகத்தை கொடுத்து வேறு ஒரு 'நல்ல' காமிக்ஸ் புத்தகம் வாங்கி கொண்டேன். (அநேகமாக ராணி காமிக்ஸ் மாயாவி சாகஸம் என் எண்ணுகிறேன்). போக போக பாகம் 6, 7 படிக்கும் போதும், அவ்வப்போது லயன் ஆசிரியர் மற்றும் வாசகர்கள் இரத்தப்படலம் பற்றி உயர்வாக பேசும் போதும் இரத்தபடலம் முழுவது படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தலை தூக்க ஆரம்பித்தது. ஆகையால் முந்தய பாகங்களை சேகரிக்க ஆரம்பித்தேன். 1,2,5,6,7,8,9,10 வரை சேகரித்து விட்டாகி விட்டது. (1, 2 - ஐஸ்பெர்க் காமிக்ஸ் உபயம்). ஆனாலும் 1,2 மற்றும் 5, 6 பாகங்கள் மட்டுமே படித்திருந்தேன். பழைய பாகங்கள் அனைத்தும் கிடைத்த பின் மொத்தமாக படித்து கொள்ளலாம் என்று இரத்தப்படலம் படிப்பதையே நிறுத்தி விட்டேன்.
இந்நிலையில் விஜயன் அவர்களின் 1-18 பாகங்களை ஒரே புத்தகத்தில் வெளியிடும் திட்டத்தை கேட்டதும் மகிழ்ச்சி. ஆனால் இதழ் வெளிவருவதில் இருந்த தாமதம் அந்த மகிழ்ச்சியை சிறிது சிறிதாக கரைத்து கொண்டிருந்தது. கடைசியாக அனைத்து பாகங்களையும் ஒரு சேர ஒரே புத்தகத்தில் பார்த்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆக இத்தனை வருடங்களாக காத்திருந்து படித்தது அருமையான அனுபவம்.

இந்த கதையில் என்னை கவர்ந்த ஒரு சில கட்டங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். இவை அனைத்தும் கதையின் முக்கிய திருப்பங்களோ அல்லது ஆழமான உண்ர்ச்சி குவியல்களோ அல்ல. ஜஸ்ட் போகிற போக்கில் ரசிகனை கவர்ந்திடும் கட்டங்கள். இது போன்று எண்ணற்ற சம்பவங்கள் கதையினில் வருகிறன. ஆனால் random ஆக ஒரு சில கட்டங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு தலை ராகம்:
தனது காரியம் நிறைவேறுவதற்காக காதலியாக நடித்து இந்த டாக்டரை ஏமாற்றுகிறாள் நம் அனைவர் மனம் கவர்ந்த ஜோன்ஸ். அம்மணி ஏமாற்று பேர்வழி என தெரிந்தும் இந்த டாக்டரின் தீவிர காதல் நமக்கு ஆச்சிரியம் கொடுக்கிறது. இந்த காதல் விளையாட்டில் டாக்டரின் உயிரும் போவது கொடுமை. ஐய்யோ பாவம் டாக்டர். என்னதான் ஜோன்ஸ் காதலை பயன்படுத்தி ஏமாற்றி இருந்தாலும் நமக்கு அவர் மேல் கோபம் வரவில்லை. அது தான் அந்த பாத்திரப்படைப்பின் வெற்றி.



ஜோன்ஸின் தியாகம்
மங்கூஸ் ஆட்களுடன் XIII க்காக சண்டையிடும் போது ஏற்படும் காயத்தினால் தனது தாய்மையை இழக்கிறார் ஜோன்ஸ். ஆனால் அந்த விஷயத்தை கேள்விபட்ட உடன் அழுது கூக்குரல் போடாமல் கூலாக இருப்பது தாலி செண்டிமெண்ட், அம்மா செண்டிமெண்ட் பார்த்து பழகிய நமக்கு புதுசு.


ஜோன்ஸின் சக்களத்தி சண்டைகள்
அது என்னமோ தெரியவில்லை நம்ம XIII ஐ பார்த்தவுடன் பெண்கள் மயங்கிவிடுகிறார்கள்.... அடிக்கடி இது போல நடந்திடும் சம்பவங்கள் ஜோன்ஸை கோபப்படுத்திறது. அதை அதிகமாக வெளிகாட்டாமல் XIII ஐ ஜோன்ஸ் கலாய்த்திடும் கட்டங்கள் சுவாரிஸ்யமானவை. இந்த காட்சிகளை ரசிக்க செய்ததில் மொழிபெயர்ப்பிற்கும் சிறந்த பங்கு உண்டு. இதோ சாம்பிளுக்கு ஒன்று


காதலர்களின் ஊடல்
ஜோன்ஸுக்கும் XIIIக்கும் அவ்வப்போது வந்திடும் ஊடல்கள் இனிமையானவை. இதோ அவற்றில் ஒன்று.



மங்கூஸ் - நீ ரொம்ம்ப நல்லவண்டா
பிரஸிடெண்ட் வாலியின் வண்டவாளங்கள் கொலைவெறி புகழ் மங்கூஸ் மூலம் உலகிற்கு தெரிவது எதிர்பாரா திருப்பம். தமிழ் சினிமாவில் கூட இது போன்ற 'எதிர்பாரா' திருப்பங்கள் வருவதுண்டு. இரினாவின் மங்கூஸ் பற்றிய கமெண்ட்டை பாருங்களேன். (மூன்றாவது படம்)




ஆண்டியை மடக்கப்பார்க்கும் பொடியன் - No comments..


புஸ்ஸுனு போன புதையல்:
நாம் படிக்கு தமிழ் காமிக்ஸ்களில் என்றுமே ஆரம்பத்தில் செம பில்டப்புடன் தொடங்கும் புதையல் மேட்டர்கள் சப்பென்று முடிந்துவிடுவது வழக்கம். இங்கு அதே கதை தான். (எந்த காமிக்ஸ் ஹீரோவாவது முழு புதையலையும் கைபற்றி சந்தோஷமாக இருந்து நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா??)


இமாலய சாதனை என்றாலும் குறைகள் இல்லாமல் இல்லை. எனக்கு பட்ட சில சிறிய குறைகள்

1. இதழின் சில இடங்களில் குறிப்பாக கதையில் மழை பெய்யும் இடங்களில் மிகவும் மோசமாக இருக்கிறது அச்சுத் தரம். ஒன்றுமே படிக்க முடியவில்லை (உ-ம் பக்கங்கள் 148 ~ 151, 509 ~ 514)

2. இந்த இதழில் படைப்பாளிகள் பற்றி விரிவாகவே கூறி உள்ளார் விஜயன் சார். நன்றி. அதே சமயம் இந்த இமாலய சாதனை படைக்க உதவிய மொழிபெயர்ப்பாளர்கள், அச்சு கோப்பாளர்கள் மற்றும் தொழிநுட்ப வல்லுனர்களின் பெயரையும் ஆசிரியர் வெளியிட வேண்டும் என்பது என் எண்ணம்.

கடைசியாக,
இதுவரை இல்லாத காமிக்ஸ் அனுபவத்தை வழங்கிய (அதுவும் இவ்வளவு குறைந்த விலையில்) விஜயன் சாருக்கும் அவரின் டீம் க்கும் என் நன்றிகள். சற்று பிராக்டிகலாக பார்க்கையில் எதிர்காலத்தில் இது போன்ற அனுபவம் தமிழில் கிடைக்க வாய்ப்பு மிக மிக அறிது எனவே தோன்றுகிறது. அதுவே இந்த இதழின் வெற்றி.
 
குறிப்பு 1 - இவ்விதழ் பற்றி குமுதம், குங்குமம் இதழிகளில்  குறிப்பிட்டு உள்ளார்கள். மிகவும் மகிழ்ச்சியான செய்தி. (பார்க்க - விஸ்வாவின் பதிவுகள்)
 
குறிப்பு 2 - கேப்டன் டைகரின் 'இரும்பு கை எத்தன்' ஞாபகம் இருக்கிறதா?? பாதியில் தொங்கி கொண்டிருக்கும் அந்த கதையும் இதே போல் ஒரே ஷாட்டில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்...

7 comments:

King Viswa said...

அடடே, அடடே அடடே.


கிங் விஸ்வா
இன்று ரிலீஸ் ஆன இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

தங்கள் தெரிவுகள் சிறப்பாக இருக்கின்றன, மிகவும் ரசித்தேன்.

Rafiq Raja said...

நண்பர் சிவ்,

ஒரு வாசகரின் ஆத்மார்த்த பார்வையில் XIII ஜம்போ ஸ்பெஷலை பற்றி படிக்கையில் அலாதி திருப்தி. எனக்கும் XIII அறிமுகம் கிடைத்தது, 4ம் பாகத்தில் இருந்து தான். அப்போது கதை தலையும் புரியாமல் காலும் புரியாமல் குழம்பி போனதும், பின்பு முன் கதைகளை ஒவ்வொன்றாக சேகரித்து சில ஓட்டைகளை அடைத்ததும், அடுத்த பாகத்தில் என்ன கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று இதழ்களை எதிர்பார்த்ததும் என்று சொல்ல சொல்ல நினைவுகள் ஏராளம்.

பிற்பாடு 17 ஆல்பங்கள் ஆன்லைனில் மொத்தமாக படிக்க ஏதுவாக கிடைத்தபோது, அதன் ஓவியத்தரத்தை முழுவதுமாக கிரகிக்க முடிந்தது. தமிழில் அதை எதிர்பார்ப்பது பேராசை தான்.

ஜோன்ஸ், 13 க்கு அடுத்தபடியாக பிரதான பாத்திரம் என்பதில் ஐயமில்லை. உங்கள் நினைவுகளை அவரும் ஆக்கிரமித்திருக்கிறாரே.

சிறப்பான பதிவு, தொடருங்கள்.

SIV said...

கருத்திற்கு நன்றி விஸ்வா, காதலர் மற்றும் ரபிஃக்.
//அதன் ஓவியத்தரத்தை முழுவதுமாக கிரகிக்க முடிந்தது. தமிழில் அதை எதிர்பார்ப்பது பேராசை தான்//

அனைத்து பாகங்களையும் ஒரே புத்தகத்தில் எதிர்பார்ப்பதே ஒரு காலத்தில் பேராசையாகத்தான் இருந்தது.
லயன் காமிக்ஸ் தன் புது பொலிவிற்கு மாறிய பிறகு ஓவிய தரம் அசல் கதையின் ஓவியத்தரத்திற்கு பக்கத்தில் வரும் என நம்புவோம்

Ramesh said...

நான் முதல் பாகத்தில் இருந்து படித்தால், இந்த தொடர் எனக்கு பிடித்ருன்தது

SIV said...

கருத்திற்கு நன்றி ரமேஷ், முதல் பாகத்தில் இருந்து படிக்கும் வாய்ப்பு கிடைத்த நீங்கள் பாக்கியசாலி தான்

NIZAMUDEEN said...

படித்த கதையின் அசைபோடல் சுவையாயிருந்தது.
சென்ற 06.02.2011 தினகரன் வசந்தம் நாட்டாண்மை
பதில்கள் பகுதியில் 'இரத்தப் படலம்' பற்றி
குறிப்பிட்டுள்ளதைப் படித்தீர்களா?
(நண்பர் தந்த தகவல்.)

இந்தியாவின் மிக பெரிய காமிக்ஸ் வெளியீடு

Lion ComicsLion Comics Office Ph: 04562 272649
லயன் Collector's Special
800 பக்க ராட்சஸ
ஸ்பெஷல்
Lion Comics Collector Special
ஏஜென்ட் XIII ன்
இரத்தப்படலம்
1-18
முன் பதிவிற்கு மட்டும்
விலை ரூ . 200/-
↑ Want this widget?