Tuesday, January 11, 2011

புத்தக கண்காட்சியில் காமிக்ஸ் சேகரிப்பு

புத்தக கண்காட்சிக்கு செல்வது இனிது, அங்கு காமிக்ஸ் வாங்குவது அதனினும் இனிது. இதோ இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் நான் சேகரித்த காமிக்ஸ்கள்.
நான் சென்றது சனிக்கிழமை மாலை என்பதினால் கூட்டத்திற்கு பஞ்சம் இல்லை. விற்பனையாளர்களிடம் சரியாக விசாரிக்க கூட அனுமதிக்காத கூட்டம். இங்கு விஸ்வாவின் புத்தக கண்காட்சி பற்றிய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

வாங்க திட்டமிட்டவை:

1. மர்ம மாளிகையில் பலே பாலு (வானதி) -
2. வாண்டுமாமா சித்திரக்கதைகள் தொகுதி-1 (வானதி) -  ஏற்கனவே கைவசம் இருந்த பிரதி தொலைந்து விட்டது
3. மாய மோதிரம் (வானதி)
4. புலி வளர்த்த பிள்ளை (வானதி)
5. தமிழ் அமர் சித்திரக்கதைகள் (4 or 5 books Based on title) (கிழக்கு)
6. ஈரான் 1 & 2 (விடியல்)
7. கிமுவில் சோமு (நர்மதா)

வாங்கியவை :

1. மர்ம மாளிகையில் பலே பாலு - நீண்ட காலமாக கைக்கு கிடைக்காமல் போக்கு காட்டி கொண்டிருந்தது. இதோ இன்று பிடித்து விட்டேன்.

 

2. கிமுவில் சோமு - சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் வாங்க வேண்டியது. இப்போது தான் அகப்படுகிறது.


3. நிலாக்குதிரை:

வாண்டுமாமாவின் பலநாட்டு சிறுகதைகளின் தொகுப்பு. இந்த புத்தகம் பற்றி கேள்விபட்டதே இல்லை. ஆகையால் இது ஒரு
surprise piece. ஓவியர் மாருதியின் அட்டைபடம் அழகு. மொத்தம் 24 சிறுகதைகள் உள்ளன. பெரும்பாலும் அயல் நாட்டு சிறுகதைகள். இவிதழில்  நம் மதியில்லா மந்திரியை பார்த்தது ஒரு எதிர்பாரா நிகழ்வு. மதியில்லா மந்திரியின் மூன்று கதைகள் சிறுகதை வடிவில் வழங்கப்பட்டுள்ளது. முதல் கதையை லயனில் பார்த்ததாக நியாபகம். இதழின் மற்ற கதைகளும் ஆர்வமூட்டுவதாக உள்ளன. வாண்டுமாமா ரசிகர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய புத்தகம்.





4. புலி வளர்த்த பிள்ளை :
இந்த புத்தகம் கிடைப்பதற்கான நம்பிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. கிடைத்தது ஒரு ஆச்சர்யம். மற்றும் ஒரு ஆச்சர்யம் வீட்டில் புத்தகத்தை திறந்து பார்க்கும் போது கிடைத்தது.
இக்கதையின் மூன்றாவது பாகம் ஓவியர் செல்லம் கைவண்ணத்தில் சித்திரக்கதை வடிவில் வழங்கப்பட்டிருக்கிறது. புலி வளர்த்த பிள்ளையின் இறுதி பாகம் சித்திரக்க்தை வடிவம் என்பது பூந்தளிரில் ஏற்கனவே பார்த்த நியாபகம். ஆனால் மாறன் மல்லப்பன் கதையும் இதே போல் ஒரு பகுதி சித்திரக்க்தையாக இருந்தும் வானதியில் புத்தகமாக வெளியிடும் போது முழு நாவல் வடிவிலேயே வெளியிட்டார்கள். அதையே இங்கும் எதிர்பார்த்த எனக்கு சித்திரக்கதை வடிவம் ஒரு இன்ப அதிர்ச்சி.


5. தமிழ் அமர் சித்திரக்கதை: இந்த தொகுப்பில் குறைந்தது 5 புத்தகங்களாவது வாங்கலாம் என்று எண்ணியிருந்தேன். (ஏற்கனவே இரண்டு இதழ்கள் கைவசம் உள்ளன). ஆனால் அந்த நேரத்தில் ஏற்கனவே பட்ஜெட் எல்லை மீறி போய் இருந்ததால் சாம்பிளுக்கு ஒன்று மட்டும் வாங்கினேன். கூடிய விரையில் ஏனைய இதழ்களையும் வாங்கிட வேண்டும். கிழக்கு பதிப்பம் இந்த சித்திரக்கதைகளுக்கு கவனத்தை கவரும் வகையில் பேனர்கள் வைத்து இருந்தது காமிக்ஸ்களுக்கான மரியாதை. கிழக்கு பதிப்பகம், மொழிமாற்ற காமிக்ஸ்கள் போலவே தமிழ் மொழியில் புதிதாக உருவக்கபடும் காமிக்ஸ்களையும் வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம். நான் பார்த்த வரை இந்த காமிக்ஸ்களுக்கு வரவேற்பு இருப்பதாகவே படுகிறது.





கிடைக்காதவை :

1. ஈரான் 1&2  - விடியல் பதிப்பகம் கண்ணில் படவே இல்லை. நேரமின்மையும் அதிக கூட்டமும் பதிப்பகத்தை தேடும் ஆர்வத்தை குறைத்து விட்டன. இந்தவாரம் செல்லும் நண்பர்கள் மூலமாக வாங்க திட்டமிட்டுள்ளேன்

2. மாய மோதிரம் & வாண்டுமாமா சித்திரக்க்தைகள் தொகுதி 1 -  வானதியில் இருப்பு இல்லை என்று கூறி விட்டார்கள்.

புத்தக கண்காட்சியில் காமிக்ஸ் சேகரிப்பு பற்றிய இந்த பதிவை படித்துவிட்டு கருத்து சொல்ல மறக்காதீர்கள் நண்பர்களே.

18 comments:

HAJA ISMAIL said...

மீ த ஃபர்ஸ்ட்டு!

பதிவை படித்து விட்டு வருகிறேன்

Rafiq Raja said...

காமிக்ஸ் கவர்கள் அணிவகுப்பு கணகச்சிதம். வானதியில் நான் தவற விட்ட இரு புத்தகங்கள் உங்கள் கைகளில் மின்னுகின்றன. அடுத்த முறை முயன்று பார்த்து விடுகிறேன்.

HAJA ISMAIL said...

தோழரே !!
மிக அழகான பதிவை, பதிவு செய்துள்ளீர்கள் ,மிக்க நன்றி
மர்ம மாளிகையில் பலே பாலு :இந்த சித்திர கதை "கோகுலத்தில்" தொடர்ச்சியாக வெளி வந்தபோது படித்த வாசகர்களில் நானும் ஒருவன்,. கோகுலம் இடையில் நிறுத்தப்பட்டபோது நான் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை.. மீண்டும் பிரச்சினைகள் தீர்ந்து கோகுலம் வெளிவந்த போது இந்த சித்திர கதையும் வந்தது .ஓவியர் செல்லம் அவர்களின் மிக அற்ப்புதமான சித்திரத்தில் வெளி வந்த இந்த கதை அன்றைய நாட்களில் எல்லோரையும் வெகுவாக கவர்ந்தது, இது முழு புத்தகமாக் என்றாவது ஒரு நாள் வரும் என்று நான் அன்றே நம்பினேன் அல்லது எதிர்பார்த்தேன்
கிமுவில் சோமு, நிலாக்குதிரை, புலி வளர்த்த பிள்ளை, ஆகியவையும் மிக நல்ல தேர்வுகள்
தாங்கள் வாங்கிய அமர் சித்திர கதைகளின் உள் படத்தையும் அடுத்த பதிவில் வெளியிடுங்கள்
அன்புடன்,
ஹாஜா இஸ்மாயில்.எம்

HAJA ISMAIL said...

அன்புள்ள ரபீக் அங்கே இரவு மணி ஒன்றாகபோகிறதே!!! தூங்க வில்லையா? நீங்களெல்லாம் இரவில் கூட தூங்குவதிலையா/,,, !!!!

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

தங்கள் தெரிவுகள் அட்டகாசம், இஸ்னோகுட் கதைகளும் வாண்டுமாமா முயற்ச்சியில் தமிழில் வந்திருக்கிறதா!! பகிர்விற்கு நன்றி.

Uma Maheswaran J said...

பதிவிற்கு நன்றி! இந்தமுறை Info Maps அரங்கில் தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் கொண்டுவரவில்லையெனச் சொன்னார்கள். நான் புத்தகக் கண்காட்சிக்கு 8ஆம் தேதி சென்றிருந்தேன். ஒரு படக்கதைப் புத்தகங்கூட வாங்கவில்லை. விடியல் பதிப்பக அரங்கு எண்: 241, 242 - இரவிந்திரநாத் தாகூர் பாதையில் உள்ளது. விடியல் பதிப்பகத்தின் ஈரான் 1,2 புத்தகங்கள் பற்றி உங்கள் பதிவின்மூலமே அறிந்தேன்.

SIV said...

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஹாஜா.

//சித்திர கதை "கோகுலத்தில்" தொடர்ச்சியாக வெளி வந்தபோது படித்த வாசகர்களில் நானும் ஒருவன்//

இன்னும் கோகுலம் பதிப்பை வைத்துள்ளீர்களா?

மர்ம மாளிகையில் பலே பாலு போலவே அனனத்து வாண்டுமாமா கதைகளையும் புது புத்தகம் வடிவில் பார்க்க ஆசை. வானதி தான் நிறைவேற்ற வேண்டும்

SIV said...

கருத்திற்கு நன்றி ரபிஃக், வானதியில் தவற விட்ட இரு புத்தகங்கள் சீக்கரம் கிடைக்க வாழ்த்துக்கள்

SIV said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி காதலரே

SIV said...

//ஒரு படக்கதைப் புத்தகங்கூட வாங்கவில்லை//

அடடா... இந்த வருடம் நிறைய காமிக்ஸ் புத்தகங்களை நீங்கள் வாங்கலாமே... விஸ்வாவின் பதிவில் முழு விபரங்கள் உள்ளன.

//விடியல் பதிப்பகத்தின் ஈரான் 1,2 புத்தகங்கள் பற்றி உங்கள் பதிவின்மூலமே அறிந்தேன்//

இப்புத்தகம் ரபிஃகினால் சென்ற வருடம் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது

Lucky Limat - லக்கி லிமட் said...

புலி வளர்த்த பிள்ளை புத்தகத்தை பார்த்து வாண்டுமாமா என்பதை பார்க்காமல் ஏதோ ஒரு கதை என விட்டு விட்டேன். இந்த வாரம் வாங்கி விட வேண்டும்

King Viswa said...

சிவ்,

நான் சென்றது புத்தக கண்காட்சி ஆரம்பித்த முதல் நாள் என்பதால் பெரும்பாலான கடைகள் அன்று தாமதமாகவே துவக்கினார்கள். அதனால் சில புத்தகங்களும், கடைகளும் விடுபட்டன.

//இவிதழில் நம் மதியில்லா மந்திரியை பார்த்தது ஒரு எதிர்பாரா நிகழ்வு. மதியில்லா மந்திரியின் மூன்று கதைகள் சிறுகதை வடிவில் வழங்கப்பட்டுள்ளது. முதல் கதையை லயனில் பார்த்ததாக நியாபகம். இதழின் மற்ற கதைகளும் ஆர்வமூட்டுவதாக உள்ளன.//

ஏற்கனவே பூந்தளிர் இதழில் வந்த கதைகளே இவை. இந்த சுட்டியில் அந்த மூன்று கதைகளும் முழுவதுமாக ஸ்கான் செய்யப்பட்டு படிக்க ஏதுவாக அப்லோட் செய்யப்பட்டுள்ளது. மதியில்லா மந்திரி பூந்தளிரில்

//முதல் கதையை லயனில் பார்த்ததாக நியாபகம்// இரண்டு கதைகளும் லயன் காமிக்ஸில் வந்துள்ளன.

//புலி வளர்த்த பிள்ளை :இந்த புத்தகம் கிடைப்பதற்கான நம்பிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. கிடைத்தது ஒரு ஆச்சர்யம். மற்றும் ஒரு ஆச்சர்யம் வீட்டில் புத்தகத்தை திறந்து பார்க்கும் போது கிடைத்தது. இக்கதையின் மூன்றாவது பாகம் ஓவியர் செல்லம் கைவண்ணத்தில் சித்திரக்கதை வடிவில் வழங்கப்பட்டிருக்கிறது. புலி வளர்த்த பிள்ளையின் இறுதி பாகம் சித்திரக்க்தை வடிவம் என்பது பூந்தளிரில் ஏற்கனவே பார்த்த நியாபகம்.//

மூன்றாம் பாகத்தை நன்றாக படிக்கவும். அது ஒரு ஆங்கில படத்தை நினைவு படுத்தும் (மிகவும் பிரபலமான படம், இந்திய கனெக்ஷன் உள்ள படம்).

இந்த புத்தகம் தான் வானதியின் ஹாட் சேல்ஸ். முழுவதுமாக விற்று தீர்துவிட்டதாம், இன்னமும் இருக்கும் பழைய ஸ்டாக் எல்லாவற்றையும் அவர்கள் கோடவுனில் தேடிக்கொண்டு இருக்கிறார்களாம். இதை தவிர இன்னமும் ஐந்து வாண்டு மாமா புத்தகங்களை விட்டு விட்டீர்கள். அவற்றை இன்றைய பதிவில் அப்டேட் செய்கிறேன்.


//மாறன் மல்லப்பன் கதையும் இதே போல் ஒரு பகுதி சித்திரக்க்தையாக இருந்தும் வானதியில் புத்தகமாக வெளியிடும் போது முழு நாவல் வடிவிலேயே வெளியிட்டார்கள். அதையே இங்கும் எதிர்பார்த்த எனக்கு சித்திரக்கதை வடிவம் ஒரு இன்ப அதிர்ச்சி.//

மாறன் மல்லப்பன் கதை முதலில் எழுது வடிவிலேயே வந்தது. அந்த கதையை பூந்தளிரின் இரண்டாம் முயற்சியில் திரு ஷ்யாம் அவர்களின் கைவண்ணத்தில் காமிக்ஸ் வடிவில் கொண்டு வர முயற்சித்தார்கள். ஆனால் அந்த கதை முடிவு பெறாததால் அதனை முன்போலவே எழுது கதை வடிவிலேயே வானதி வெளியிட்டார்கள்.

//கிழக்கு பதிப்பகம், மொழிமாற்ற காமிக்ஸ்கள் போலவே தமிழ் மொழியில் புதிதாக உருவக்கபடும் காமிக்ஸ்களையும் வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம். நான் பார்த்த வரை இந்த காமிக்ஸ்களுக்கு வரவேற்பு இருப்பதாகவே படுகிறது.//

இந்த புத்தகங்களின் பதிவானது கிழக்கு பதிப்பகதாலேயே தாமதமாகிக்கொண்டு இருக்கிறது. இன்றோ நாளையோ பத்ரியின் துணையுடன் வெளிவரும். காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ் காத்திருக்கிறது.

//ஈரான் 1&2 - விடியல் பதிப்பகம் கண்ணில் படவே இல்லை.// இன்றைய பதிவை பாருங்களேன்? தமிழ் காமிக்ஸ் உலகில் இன்று புத்தக கண்காட்சியை பற்றிய இன்னுமொரு பதிவு வருகிறது.

கிங் விஸ்வா.
புத்தக கண்காட்சி ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்

King Viswa said...

// நிலாக்குதிரை:வாண்டுமாமாவின் பலநாட்டு சிறுகதைகளின் தொகுப்பு. இந்த புத்தகம் பற்றி கேள்விபட்டதே இல்லை. ஆகையால் இது ஒரு
surprise piece. ஓவியர் மாருதியின் அட்டைபடம் அழகு. மொத்தம் 24 சிறுகதைகள் உள்ளன.//

இந்த கதைகள் ஆம் ஆண்டு பூந்தளிரில் பாட்டி சொன்ன பலதேசக் கதைகள் / பலதேசக் கதைகள் என்ற பெயரில் வந்துள்ளன. அந்த மொத்தக் கதைகளின் ஒரு தொகுப்பே இந்த புத்தகம். இன்னமும் ஒரு புத்தகம் உள்ளது.

// பெரும்பாலும் அயல் நாட்டு சிறுகதைகள்// இந்த கதைகளின் கான்சப்டே புகழ்பெற்ற அயல்நாட்டு தேவதை கதைகளையும், மற்ற நாட்டுப்புற கதைகளையும் தமிழில் வழங்குவதே.

கிங் விஸ்வா.

புத்தக கண்காட்சி ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்

King Viswa said...

//ஈரான் 1 & 2 (விடியல்) //

இந்த புத்தகத்தின் பின்னணியில் ருக்கும் சோகத்தையும், இவர்களின் தற்போதைய முயற்சியையும், அதன் தொடரையும் பற்றி விரைவில் டீடெயில் ஆக கூறுகிறேன். இந்த புத்தகத்தை பற்றி எனக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம் செய்த கனவுகளின் காதலர் அவர்களுக்கு நன்றி. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே அந்த விடியற் பதிப்பகத்தாரை சந்தித்த அந்த நல்ல நிகழ்வும் , அதன் பின்னர் தொடரும் சந்திப்புகளும் சுவையான விஷயங்கள். இந்த புத்தகத்தை பற்றி ஏற்கனவே நண்பர்களின் முயற்சியால் புதிய தலைமுறையில் ஒரு விமர்சனமே வந்துள்ளது.

புதிய தலைமுறை - ஈரான் விமர்சனம்

கிங் விஸ்வா
புத்தக கண்காட்சி ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்

Anonymous said...

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இதுநாள் வரையில் எங்கேயும் கமென்ட் போட்டதே கிடையாது. அதற்க்கான நேரம் கிடையாது. இன்றுதான் வாய்ப்பு அமைந்தது. ஆகையால் இதுநாள் வரையில் உங்களின் அறிய சேவைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

முஸ்தபா, எண்ணூர்.

SIV said...

விஸ்வா தங்களின் கருத்திற்கு நன்றி. கூடுதல் தகவல்களை உங்க பதிவில் தெரிந்து கொண்டேன்

King Viswa said...

// புலி வளர்த்த பிள்ளையின் இறுதி பாகம் சித்திரக்க்தை வடிவம் என்பது பூந்தளிரில் ஏற்கனவே பார்த்த நியாபகம்.//

மூன்றாம் பாகத்தை நன்றாக படிக்கவும். அது ஒரு ஆங்கில படத்தை நினைவு படுத்தும் (மிகவும் பிரபலமான படம், இந்திய கனெக்ஷன் உள்ள படம்).

புத்தக கண்காட்சியில் கிங் விஸ்வா - புதிய காமிக்ஸ் கதைகளின் விவரம்

Rafiq Raja said...

நண்பர் ஹாஜா,

சில வேளைகளில் வேலை பெண்டு நிமித்தி விடும், அப்போது சில இரவுகளை தியாகம் செய்து நமக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்த முயல்வேன். அதன் வெளிப்பாடே இப்படி இரவு கோட்டான் விடயம்.

தற்போது நீங்களும் பல இடங்களில் கருத்து படையல் நடத்த ஆரம்பித்து விட்டீர்களே. நடத்துங்கள் கொண்டாட்டங்களை :)