வாண்டுமாமா படைத்த பல கதாபாத்திரங்களில் என்னை கவர்ந்த ஒரு கதாபாத்திரம் சி.ஐ.டி சிங்காரம் ஆகும். மேலைநாடுகளின் ஷர்லக் ஹோம்ஸ் போன்ற துப்பறியும் கதாபாத்திரங்கள் அழியா புகழுடன் விளங்குவதற்கு காரணம் கதைகளின் விறுவிறுப்பும் சஸ்பென்ஸுமே ஆகும். அத்தகைய ஒரு கதாபாத்திரம் தமிழில் இல்லை என்று வருத்தபடுபவர்கள் வாண்டுமாமாவின் சி.ஐ.டி சிங்காரம் கதைகளை படிக்கலாம். மேலை நாட்டு துப்பறியும் கதைகளில் இருக்கும் அனைத்து விஷயங்களை உள்ளடக்கி அருமையக இந்த கதாபாத்திரத்தை வடிவமைத்து உள்ளார் வாண்டுமாமா. ஒன்று மட்டும் எனக்கு நிச்சியமாய் தெரியவில்லை. ஜெய்சங்கர் இந்த கதாபாத்திரத்தை பார்த்து தனது படங்களுக்கு பெயர் வைத்தாரா அல்லது ஜெய்சங்கர் பார்த்து வாண்டுமாமா இந்த பெயர் வைத்தாரா என்பது தெரியவில்லை. எப்படி இருப்பினும் நமது பேச்சுவழக்கில் சி.ஐ.டி சிங்காரம் மற்றும் சி.ஐ.டி சங்கர் போன்ற பெயர்கள் வழக்கமான ஒன்றாக போய்விட்டது. (C.I.D - Criminal Investigation Department)
பார்வதி சித்திரக்கதை இதழின் 12வது இதழாக வெளியிடப்பட்டது டயல் ஒன் நாட் நாட் (Dial 100). 12 சிறுகதைகள் உள்ளடக்கிய இந்த தொகுப்பில் அனைத்து கதைகளின் வடிவமும் ஒன்றே. சென்னையில் நடக்கும் சிறு சிறு குற்றங்களை சிங்காரம் விசாரித்து சரியான குற்றவாளியை பிடிப்பதே அனைத்து கதைகளின் பொதுவான வடிவம். இந்த சாதாரண கதையமைப்பில் வாண்டுமாமா புகுத்திய புதுமை(தமிழில்) வாசகர்களின் மூளைக்கு வேலை கொடுப்பது. கதையில் ஆங்காங்கே சில வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நாம் சிறிது யோசித்து விடைகளை யூகிக்க வேண்டும். இந்த யுத்தியால் சதாரண கதை கூட விறுவிறுபடைகிறது. லயன் வாசகர்களுக்கு இந்த யுத்தி 'ஜார்ஜ் நோலன்' மற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவர் (ட்ரேக்?? பெயர் மறந்து விட்டது) மூலம் ஏற்கனவே பழக்கம் தான் இருந்தாலும் தமிழ் படைப்பில் இத்தகைய விஷயத்தை பார்ப்பது ஒரு புது அனுபவமாக இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு கதை உங்கள் பார்வைக்கு...
காமிக்ஸ் கதைகளில் லாஜிக் என்பது அவ்வளவாக தேவையில்லை எனினும் துப்பறியும் கதைகளுக்கு ரொம்ப முக்கியம். இந்த கதைகளில் லாஜிக் ஓட்டைகள் மிக மிக குறைவு. ஆனால் இவ்வளவு புகழ் பெற்ற சி.ஐ.டி ஏன் ஜேப்படி திருடர்கள் போன்றவர்களையே வளைத்து வளைத்து பிடிக்கிறார் என்பது தான் புரியவில்லை. 'லம்ப்'பாக எதையாவது பிடிக்க வேண்டாமா. ஷர்லக் ஹோம்ஸ் கதைகளில் வாட்ஸன் போல பாலு எனற உதவியாளர் உள்ளார். இவர் சும்மா பேச்சுதுணைக்கு மட்டும் தான் போல. வேறு எதுவும் உருப்படியாக செய்வதாக தெரியவில்லை. எப்பிடி இருப்பினும் தமிழ் சித்திரக்கதைகளில் ஒரு வித்தியாசமான, சுவையான மற்றும் தரமான ஒரு கதையை கொடுத்த வாண்டுமாமாவிற்கு நன்றிகள். வழக்கமாக ஒருவர் 60 பக்க காமிக்ஸ் கதையை 60 நிமிடங்களில் படித்தால் இந்த கதையை படிக்க கண்டிப்பாக 80 நிமிடங்களாவது ஆகும். காரணம் வாண்டுமாமா உங்கள் மூளைக்கு வேலை கொடுப்பதுதான்.
ரமணி
இந்த கதைக்கு ஓவியம் ரமணி. இதுபோன்ற துப்பறியும் கதைக்கு நுணுக்கமான ஓவியங்கள் மிக அவசியம். அதை சிறப்பாக செய்திருக்கிறார் ரமணி. சிறு சிறு விஷயங்களை கூட தெளிவாக வரைந்துள்ளார். வாண்டுமாமா - செல்லம் கூட்டணிக்கு இனையான கூட்டணி வாண்டுமாமா - ரமணி கூட்டணியாகும். எழுத்துகளும் மிக அழகாக இருக்கிறது. ரமணி பற்றிய மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும். அட்டைபடம் சுப்பு எனபவரால் வரையப்பட்டிருகிறது.
சி.ஐ.டி சிங்காரம் கதைகள் எழுத்து கதை வடிவில் பூந்தளிர் இதழில் வந்துள்ளது. இதே கதைகளை வானதி பதிப்பகம் முழு புத்தகமாக வெளியிட்டுள்ளது. இந்த புத்தகங்களில் சித்திரங்கள் இல்லாதது பெறும் குறை. நண்பர் விஸ்வா சி.ஐ.டி சிங்காரமின் கல்கி இதழ் அவதாரம் பற்றி தனது பதிவில் கூறி உள்ளார்.
சி.ஐ.டி சிங்காரம் கதைகள் எழுத்து கதை வடிவில் பூந்தளிர் இதழில் வந்துள்ளது. இதே கதைகளை வானதி பதிப்பகம் முழு புத்தகமாக வெளியிட்டுள்ளது. இந்த புத்தகங்களில் சித்திரங்கள் இல்லாதது பெறும் குறை. நண்பர் விஸ்வா சி.ஐ.டி சிங்காரமின் கல்கி இதழ் அவதாரம் பற்றி தனது பதிவில் கூறி உள்ளார்.
வாண்டுமாமா வேறுசில துப்பறியும் கதாநாயகர்களையும் உருவாகியுள்ளார். அதை பற்றி பின்னொரு பதிவில் பார்ப்போம்.
பின்குறிப்பு :
1. கூடுதல் தகவல்களுடன் அமுத நிலையத்தின் புராண சித்திரக்கதைகள் பதிவு update செய்யப்பட்டுளது. படிக்க இங்கே சொடுக்கவும்
பதிவு பற்றிய உங்களுடைய கருத்துகளை கண்டிப்பாக தெரிவிக்கவும்
23 comments:
நண்பரே,
முதலில் உங்கள் 25வது பதிவிற்கு வாழ்த்துக்கள். இது மென்மேலும் பல்கிப் பெருகட்டும். வழமை போலவே உங்களிடமிருந்து நல்லதொரு அறிமுகம். நன்றி.
கனவுகளின் காதலரே, ஒரு சிறு கணக்கு பிழை ஏற்பட்டுவிட்டது. இது 24வது பதிவுதான்.
அதானால் என்ன நண்பரே, அட்வான்ஸ் வாழ்த்துக்களாக வைத்துக் கொள்ளுங்கள் :))
சிவ்,
ரமணி, செல்லம் அளவிற்கு இல்லையென்றாலும் தனக்கே உரிய ஒரு பாணியில் சித்திரகதைகளை படைத்தவர். சொல்லி வைத்தது போல வாண்டுமாமாவின் கூட்டணி, சிஐடி சிங்காரத்தையும் பிரபலபடுத்தியிருக்கலாம்.
கதையில் அந்த அளவிற்கு ஈடுபாடு இருந்ததோ இல்லையோ, மொத்தம் 12 சிறுகதைகளை ஒருங்கே படித்தது தான் இந்த இதழின் சிறப்பு. அந்த பபூன் கயிறு சாகஸம், முன் கால மாயாவி சாகத்தை நினைவுபடுத்தவில்லையா...(பறக்கும் பிசாசு??) அங்கிருந்துதான் இவற்றை மாதிரிக்கு எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
இன்னொரு பார்வதி சித்திரகதை படைப்பு உங்கள் பதிவின் மூலம் நினைவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. தொடருங்கள் உங்கள் பதிவுகளை.
Hi Siv,
//ஜெய்சங்கர் இந்த கதாபாத்திரத்தை பார்த்து தனது படங்களுக்கு பெயர் வைத்தாரா அல்லது ஜெய்சங்கர் பார்த்து வாண்டுமாமா இந்த பெயர் வைத்தாரா என்பது தெரியவில்லை.//
Your Post made me to work hard for 45 Minutes to cross check all the facts, in order to clarify the doubts raised here.
first of all the release date of Vallavan oruvan (1st movie in C.I.D Shankar trilogy) was released in 6th October 1966 (This data will not be availabe anywhere - Got it from Modern Theatres - Mosaerbaer).
However, The first time the advertisement of CID Singaram appeared in the 27th march 1966 issue dated Kalki. The actual weekly story was started in the Then Tamil New Year Special issue which was on 14th April.
Modern theatres, a corporate Film making company in those days, usually keep there storyline and character sketches very close to their chest and hence we can say that the information about the character CID Shankar would have been kept under wraps till it was ready for release.
And my interaction with Vandumaama says that by that time he was very much settled in Chennai with Kalki and hence he was no longer with Sivaji magazine to keep updates on the cinema field.
So we can fairly say that (As Modern theatres MD Sundaram Sir once said, Shankar is based on Jai shankar) it was purely coincidence that these characters appeared in the same year.
Siv,
sent you a mail.
kindly check these to cross verify the dates.
Will come back to comment more on the artist of this post by tomorrow.
By the way, The same charcters were used in another set of series in the 1985-87 CID Singaram series in Poonthalir magazine.
Hopefully Mr Ayyampalayam will do a special post on that very soon.
//ஷர்லக் ஹோம்ஸ் கதைகளில் வாட்ஸன் போல பாலு எனற உதவியாளர் உள்ளார். இவர் சும்மா பேச்சுதுணைக்கு மட்டும் தான் போல. வேறு எதுவும் உருப்படியாக செய்வதாக தெரியவில்லை.//
No, the idea of having a secondary charcter was to make the readers get those salient points as the main hero will explain it to the secondary charcter. That is how the mystery will be easily understood by the readers.
// லயன் வாசகர்களுக்கு இந்த யுத்தி 'ஜார்ஜ் நோலன்' மற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவர் (ட்ரேக்?? பெயர் மறந்து விட்டது)//
Yes, that was Detective Drake only.
However, there was another guy after Zip Nolan, it was Detective Bruce. Remember Mini Lion?
ரபிஃக், கருத்திற்கு நன்றி. நீங்கள் குறிப்பிடும் பறக்கும் பிசாசு இதழின் கதை எனக்கு சரியாக ஞாபகம் இல்லை... தேடிப்பார்கிறேன்
விஸ்வா, தங்களின் உழைப்பு என்னை வியக்க வைக்கிறது. உங்களுடைய தகவல்கள் அனைத்திற்கும் நன்றிகள்.
நீங்கள் கூறுவது போல் அந்த காலத்தில் சி.ஐ.டி சிங்காரம் போன்ற பெயர்கள் பிரபலமான பெயர்களாக இருந்தன என்பதால் இந்த coincidence நடந்திருக்ககூடும். ரமணி பற்றிய தகவல்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
சூப்பர் பதிவு. எனக்கு இன்றும் இந்த கதை நினைவிருக்கிறது. இது போன்ற துப்பறியும் கதைகள் எல்லாம் எண்பதுகளில் மிகவும் பிரபலம். ஆனால் அதனை அறுபதிலேயே கொடுத்தவர் நம்ம வாண்டுமாமா.
பதிவுக்கு நன்றி.
//பறக்கும் பிசாசு இதழின் கதை எனக்கு சரியாக ஞாபகம் இல்லை//
இந்த கதை வந்தது 1966ஆம் ஆண்டு. ஆனால் பறக்கும் பிசாசு மூலக்கதை ஆங்கிலத்தில் வந்ததோ எழுபதுகளில் (1970's).
Inspired Backwards?
நன்றி ஜாலி ஜம்ப்பர்,
இதே 1966 ஆம் ஆண்டில்தான் எம்.ஜி.ஆர் நடித்த பறக்கும் பாவை (சர்கஸ் ஒன்றில் நடக்கும் காதல்/கிரைம் பற்றிய ஒரு கதை)படமும் வெளிவந்திருக்கிறது. இன்னோரு coincidence.
//ரமணி பற்றிய தகவல்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்//
Got struck up with my Tata Photon Card. Damn it. (Typing this through my mobile device).
Will come back to chennai and do it.
Good Info. Is there any site to download full comics in tamil
அருமையான பதிவு ஷிவ். தொடருங்கள்.
Thanks for introducing a new character friend.I will try to grab the book from vaanathi publications soon.Also,new post on korean movie again.Do visit. :)
king kong? moon comics?
waiting.
Karthic, you can read some full length tamil comics in the following link.
http://pula-sulaki.blogspot.com/
mr.r.s.k. said, muthu comics johny '' kolaikara kalaingan'' story kuda idhu mathiri than...
பதிவுக்கு நன்றி. ஆனால், உங்களது பதிவில் சிறு தவறு உள்ளது. நீங்கள் பிரசுரித்திருக்கும் படத்தில் இருக்கும் ஓவியர் 'ரமணி' இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆனால், வாண்டுமாமாவின் கதைகளுக்குப் படம்வரைந்த ஓவியர் ரமணி வேறு. அவரே சுப்பு, ரமணி என்று இரு பெயர்களில் வரைந்துவந்திருக்கிறார்.
-Theeban
Thanks for the correction Mr. Theeban.
Post a Comment