ஸ்ரீகாந்த் - பல்வேறு காமிக்ஸ் இதழ்களில் இவரது படைப்புகளை நாம் பார்த்திருப்போம். இவரின் படைப்புகளை எனக்கு தெரிந்தவரை வரிசைப்படுத்தும் ஒரு முயற்சியே இந்த பதிவு. இவரின் படைப்புகள் பெரும்பாலும் தமிசகத்தின் தென் பகுதிகளில் இருந்து வெளிவந்த காமிக்ஸ்களிலேயே காணப்படுகிறது.
பொன்னி காமிக்ஸ் / மலர் காமிக்ஸ் :
பொன்னி காமிக்ஸ் ஆரம்ப இதழ்களில் இவரது படைப்புகள் இல்லை. 90 களின் ஆரம்பத்தில் வந்திட்ட காமிக்ஸ்களில் பெரும்பாலும் இவரது படைப்புகளே நிறைந்திருக்கிறது. பொன்னி குழுமத்த்தில் இருந்து வெளிவந்த இதர காமிக்ஸ்களான மலர் பொன்னி காமிக்ஸ், மலர் காமிக்ஸ், மலர் மணி காமிக்ஸ் ஆகிய காமிக்ஸ்களிலும் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
முதலில் தனிப்பட்ட கதைகள் மற்றும் பொன்வண்டு என்ற துப்பறிவாளரின் கதைகளையும் பார்க்க முடிகிறது. 1998~99 களில் பொன்னி காமிக்ஸ் சிறிது வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு வந்திட்ட போது ஸ்ரீகாந்த் இரும்புக்கை மாயாவி கதைகளை படைக்க தொடங்குகிறார். இத சமையத்தில் official இரும்பு கை மாயாவியின் கதைகள் முத்து காமிக்சில் வெளிவருவது நின்று போயிருந்த நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.
பூவிழி காமிக்ஸ் மற்றும் பிரைட் மூன் காமிக்ஸ்
பூவிழி காமிக்ஸ் காமிக்ஸ் பற்றி நமது முந்தைய பதிவிலிருந்து ...
தமிழ்நாட்டில் எப்போதும் ஏப்ரல்~ஜூன் மாதங்களில் காமிக்ஸ் விற்பனை அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் மட்டுமே வெளிவக்கூடிய காமிக்ஸ் பத்திரிக்கைகள் சில உண்டு. அவற்றில் ஒன்றுதான் பூவிழி பப்ளிக்கேஷன்ஸ். மதுரையில் இருக்கும் இவர்களுடைய நிறுவனத்திலிருந்து 'பூவிழி காமிக்ஸ்' மற்றும் 'பிரைட் மூன் காமிக்ஸ்' என இரண்டு காமிக்ஸ்கள் வெளிவந்தன. இவை வெளிவந்த ஆண்டு 1996 லிருந்து 1999 வரை. மொத்தம் வெளிவந்த காமிக்ஸ்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. கண்ணால் பார்த்த காமிக்ஸ்களை வைத்து பார்க்கும் போது குறைந்தபட்சம் பூவிழி காமிக்ஸில் 10 புத்தகங்களும் பிரைட் மூன் காமிக்ஸில் 3 புத்த்கங்களும் வந்திருக்க வேண்டும். M. உதயகுமார் என்பவரை ஆசிரியராக கொண்டு இந்த இதழ்கள் வெளிவந்திருக்கிறது. எம். ஐஸ்வர்யா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கதைகளை படைத்திருக்கிறார்கள்
இந்த இதழ்களில் பெரும்பாலும் ஸ்ரீகாந்தின் படைப்புகள் சிறுகதைகளாக இடம்பெறுகின்றன.
தேசமலர் காமிக்ஸ்:
ஓரிரு வருடங்களுக்கு முன் கூட இந்த காமிக்ஸ் ஐ புது இதழாக கடைகளில் பார்த்த ஞாபகம் உள்ளது. பாக்கெட் சைஸ், பெரிய சைஸ், கிரைம் நாவல் சைஸ் என பல வடிவங்களில் கலக்கிய இதழ் இது. இந்த இதழ்களிலும் ஸ்ரீகாந்த் பல படைப்புகளை கொடுத்துள்ளார். இந்த இதழின் பல ஸ்கேன்கள் கூடிய விரைவில் பதிவேற்றப்படும்
கலைப்பொன்னி :
இது காமிக்ஸ் அல்ல. மாயாஜால கதைகளை கொண்ட நாவல் கதைகள். இதன் அட்டைப்படங்கள் திரு ஸ்ரீகாந்த் வரைந்துள்ளார். அனைத்தும் கண்கவர் அட்டைப்படங்கள்.
தினபூமி நாளிதழ் மற்றும் சிறுவர் பூமி:
மதுரையில் இருந்து வெளிவரும் தினபூமி நாளிதழில் பல இடங்களில் ஸ்ரீகாந்தின் கைவண்ணங்களை பார்க்கலாம். அரசியல் கேலி சித்திரங்கள் மற்றும் daily strip கதைகள் இவரது கைவண்ணத்தில் நாளிதழில் வெளிவந்தன.
சிறுவர் பூமி.
தின பூமி துவங்கிய நாளில் தினசரி ஒரு இலவச இதழ் என்ற உத்தியை பயன்படுத்தினர். அதில் சிறுவர்களது இதழாக வெளிவந்தது தான் சிறுவர்பூமி. இதில் பல படைப்புகளை ஸ்ரீகாந்த் தந்திருக்கிறார்.
இங்கும் முதலில் தனிப்பட்ட கதைகள் மற்றும் சில துப்பறிவாளர்களின் கதைகளுக்கு பின் மாயாவி தலை தூக்குகிறார். அதுவும் தின பூமி சிறுவர் பூமியின் (வாராந்திர இணைப்பு) பின் அட்டையில் அட்டகாச வண்ணத்தில் ஜொலிக்கிறார் மாயாவி. மாயாவி கதைகள் இல்லாமல் வேறு solo கதைகளும் வண்ணத்தில் வெளிவந்துள்ளன.
இங்கு இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். சிறுவர் பூமியில் ஸ்ரீகாந்த் வெறும் சித்திரக்கதைகளை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க வில்லை. அதையும் தாண்டி பல சிறுவர் படைப்புகளை தந்திருந்தார். (சிறுவர் பூமி ஆசிரியர் பொறுப்பு அவரிடம் இருந்ததாக கூட நினைவு. உறுதியாக தெரியவில்லை)
தினபூமி காமிக்ஸ் :
தினபூமி நிறுவனத்தில் இருந்து தனி காமிக்ஸ் இதழ்களாக மாதாந்திர பத்திரிகையும் வெளிவந்தது. அதிலும் ஸ்ரீகாந்த் கைவண்ணங்கள். இந்த பத்திரிக்கை 2000 களின் ஆரம்பம் வரை வெளிவந்தது
இவரின் படைப்புகள் பெரும்பாலும் சிறுவர்களுக்கான தரத்தில் உள்ளன. அதே சமயம் பல நிறுவனங்கள், பல காமிக்ஸ்கள் quantity என்ற வகையில் அவர் ஒரு சாதனையாளரே. இவரின் தமிழ் மொழி நடையும் சிறப்பாக இருக்கும். அட்டைப்பட ஓவியத்தரமும் நன்றாக இருக்கும்.
அவ்வளவுதான் நண்பர்களே, திரு ஸ்ரீகாந்த் அவர்களின் இதர படைப்புகள், பர்சனல், தற்போதைய வேலைகள் பற்றிய தகவல்கள் ஏதும் என்னிடம் இல்லை. உங்களிடம் இருந்தால் comment பகுதியில் பகிர்ந்து கொள்ளவும்.
நன்றி

2 comments:
Hello Mr.Siv, I want a copy of any comics done by Mr.Srikanth. My Mail ID is Pjv.india@gmail.com
Please Mail your contact I just want to speak to you.
Post a Comment