Thursday, July 12, 2012

முத்து காமிக்ஸ் - சில தகவல்கள்

வணக்கம், சமீபத்தில் முதலை பட்டாளம் முத்து காமிக்ஸின் முழு  நீள பட்டியலை வெளியிட்டு இருந்தார். அவரின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பதிவு. அதிக முறை தலைகாட்டிய ஹீரோ யார் என்பதை தெரிந்துகொள்ள செய்த வேலைகள் அப்படியே இந்த பதிவில் கொண்டு விட்டு உள்ளன. முத்து காமிக்ஸ் பற்றிய சில நுண் தகவல்களை பார்ப்போம். 


எதிர்பார்த்த படியே மாயாவிதான் முத்துவின் நெ. 1. அவருக்கு அடுத்த இடத்தில் லாரன்ஸும் மூன்றாம் இடத்தில் ஜானி நீரோவும் உள்ளனர்.
இன்றைய தலைமுறை நாயகர்களில் டைகர் மட்டுமே டாப்-10ல் இடம் பெறுகிறார்.
இந்த அட்டவனையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் முதல் 5 இடங்களை பிடித்த நாயகர்கள் பட்டியலிடப்பட்டு உள்ளார்கள்.
எந்த ஒரு ஹீரோவும் அனைத்து மூன்று காலகட்ட டாப்-5 யில் இடம் பெற முடியவில்லை. முதல் 200 இதழ்கள் வரை ஆதிக்கம் செலுத்தி வந்த மாயாவி அதன் பின் காணாமல் போகிறார்.

கதைகளின் தாயகத்தைப் பொறுத்தவரை அமெரிக்க காமிக்ஸ்களும் இங்கிலாந்து காமிக்ஸ்களும் கிட்டதட்ட சம அளவில் வெளிவந்துள்ளன. 200 இதழ்களுக்க பிறகுதான் ஐரோப்பிய கதைகளின் ஆதிக்கம் துவங்குகிறது. இன்றைய நிலையில் கிட்டதட்ட அனைத்து அமெரிக்க-இங்கிலாந்து நாயகர்களும் கைவிடப்பட்ட நிலையில் ஐரோப்ப காமிக்ஸ்களின் ஆதிக்கம் இன்னும் விரிவடையும் என் நம்பலாம்.


கதைகளை துள்ளியமாக வகைப்படுத்துவது என்பது இயலாத காரியம். எனக்கு  ஆக்சன் ஆகத் தோன்றும் கதை உங்களுக்கு துப்பறியும் கதையாகவோ சில பேர்க்கு thriller ஆகவோ தோன்றலாம். என்னை பொருத்த வரை மாயாவி, வேதாளர், மாண்டிரெக், மார்ட்டின் ஆகியோர் fantasy வகையில் வருகிறார்கள்.
மேலும் சில தகவல்கள்:

1. முத்து காமிக்ஸில் தொடர்ச்சியாக அதிக முறை இடம் பிடித்த ஹீரோக்கள் மாயாவி மற்றும் டைகர். மாயாவி முத்துவின் முதல் நான்கு இதழ்களில் தொடர்ச்சியாக இடம் பெற்று உள்ளார். டைகர் 294ல் இருந்து 297 வரை தொடர்ச்சியாக நான்கு இதழ்களில் இடம் பெற்று உள்ளார்.

2. அதிக விலை (ரூ 100) கொண்ட இதழ் 'என் பெயர் லார்கோ'  (வெ.எண் 314).  அதே சமயம் இந்த இதழ்தான் அனைத்து (லயன்+முத்து) 100 ரூபாய் இதழ்களிலேயே குறைந்த பக்கங்களை கொண்ட இதழ்.

3. ஜப்பான் நாட்டை மூலமாக கொண்டு 'நாடோடி ரெமி' என்ற கதை முழு வண்ணத்தில் பெரிய சைஸில் இதழ் எண்.135ல் வெளிவந்துள்ளது.

4. விங் கமெண்டர் ஜார்ஜின் கதைகள் அனைத்து காலகட்டங்களிலும் பரவலாக காண்ப்படுகிறது.

இறுதியாக ....:  ரொம்ப நாட்களாக excel மற்றும் power pointல் தமிழில் வேலை செய்ய வேண்டும் என்ற என் ஆசை இந்த பதிவு மூலம் சற்று நிறைவேறி உள்ளது. இந்த பதிவின் முதுகெலும்பு முதலைப்பட்டாளம் என்றே கூற வேண்டும். ஏற்கனவே கூறிய படி அவரின் லிஸ்டில் இருந்துதான் இந்த முழு பதிவும் தயார் செய்யப்பட்டது.
* இங்கு மறுபதிப்பு இதழ்கள் தனியாக பிரிக்கப்படவில்லை.
* ஒரே இதழில் ஒன்றுக்கு மேறபட்ட நாயகர்களின் கதைகள் இடம் பெறும் பட்சத்தில் முதன்மையான் ஹீரோவின் கதை மட்டுமே  கணக்கில் கொள்ளப் படும். (முதலை நண்பர் தனது பதிவில் அப்படித்தான் போட்டு உள்ளார்).
முடிந்த வரை தவறுகள் இல்லாமல் ரெடி செய்துள்ளேன். தவறுகள் இருப்பின் தயவு செய்து சுட்டி காட்டவும்.

19 comments:

King Viswa said...

வெல்கம் பேக் சிவ்.

கதைகளின் தாயகம் என்ற பட்டியலில் உள்ள தெரியாத கதைகள் என்னவென்று லிஸ்ட் அனுப்பவும். அவற்றின் மூலம் பற்றி சொல்கிறேன்.

மற்றபடி ஸ்டாடிஸ்டிக்ஸ் பற்றிய பதிவுகளை விரும்பி படிக்கும் என்னை போன்றவர்களுக்கு அட்டகாசமான ஒரு விருந்து.

த்யவுய் செய்து அடுத்து இன்னுமொரு பதிவை வெளியிடுங்கள். அவற்றில் புத்தகங்களின் சைஸ், விலை, பக்கங்கள், பதிப்பு போன்றவற்றையும் அலசுங்கள்.

Thanks to you & Mudhalai Pattaalam.

SIV said...

தங்களின் உற்சாகமான பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வா. தாயகம் தெரியாத கதைகளின் லிஸ்ட் உங்களுக்கு அனுப்பட்டு உள்ளது. சைஸ், விலை, பக்கங்கள், வெளியீட்ட்டு தேதி ஆகியவை கொண்டு ஒரு பதிவிட்டால் நன்றாகத்தான் இருக்கும். முயற்சி செய்கிறேன்

Karthik Somalinga said...

நல்ல பதிவு, நன்றாக அலசி காயப் போட்டிருக்கிறீர்கள்! :) இது மிகவும் சிரமமான காரியம்தான்!

SIV said...

நன்றி நண்பரே

SIVAKUMAR said...

வாவ், எப்படி நண்பரே இப்படி தொகுக்க முடிந்தது உங்களால்? அருமையான தகவல்கள்! மிக பொறுமையாக இதற்காக நேரததை ஒதுக்கி எங்களை போன்ற காமிக்ஸ் ரசிகர்களுக்காக வடிவமைத்தற்கு நன்றி!இதை நான் பேஸ்புக் கில் இடம்பெற செய்யலாமா?

Cibiசிபி said...

மிக அழகாக மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு
துவக்குங்கள் உங்கள் இன்னிங்க்சை அடுத்தது லயனா அல்லது மினியா ;-)
ஏதோ என்னால முடிஞ்சது
.

SIV said...

கருத்திற்கு நன்றி cap tiger. பேஸ்புக் கில் தாராளமாக பகிரலாம்.

SIV said...

//அடுத்தது லயனா அல்லது மினியா ;-)
//
சிபி, இப்படியெல்லாம் உசுபேத்தி விட்டால் எப்படி?

TSI-NA-PAH said...

Nice informative post Dude. I don't know how to Appreciate your hard work.

Rafiq Raja said...

அருமையான கணக்கெடுப்பு சிவ்... கலக்குறீங்க போங்க :D

SIV said...

நன்றி செளந்தர் மற்றும் ரபிஃக்

mudhalaipattalam said...

nice post siv..
yennutaiya post ungalukku uthaviyathil yenakku miguntha magizhchiye..

தி.தமிழ் இளங்கோ said...

நான் சிறு வயதில் படித்த சித்திரக்கதைகளைப் பற்றிய புள்ளி விவரங்கள். கடின உழைப்பு செய்து இருக்கிறீர்கள். நேரம் கிடைக்கும் போது உங்கள் பழைய பதிவுகளையும் பார்வையிட்டு எழுதுகிறேன்.

கிருஷ்ணா வ வெ said...

அருமையான பதிவு.
நல்லதொரு ஆராய்ச்சி.
பதிவிற்கு நன்றி நண்பரே.

DARK KNIGHT said...

வணக்கம் சிவ், நல்ல ஒரு புதுமையான் முயற்சி. வாழ்த்துக்கள்.
அருமையான தகவல்கள்.
இதுவரை நான் இப்படி ஒரு பை சார்ட்டை பாத்ததில்லை. சிறப்பான முயற்சி. இது போன்ற ஒரு புள்ளி விவரம், வாசகர்களின் அதிக வரவேற்பை பெற்ற கதாநாயர்களின் படி பாப்புலரான டாப் 10 பட்டியல் ஒன்று வெளியிடுங்களேன்.

SIV said...

வருகைக்கும் கருத்திற்கு நன்றி தமிழ் இளங்கோ அவர்களே..

கருத்திற்கு நன்றி இரவுக் கழுராரே..

பாலாஜி - கண்டிப்பாக இன்னொரு புள்ளிவிபர பதிவு உண்டு

Anonymous said...

Siv,

Great post on Muthu comics. And Nallathangal pictures are superb! Any chance of you uploading the whole book with pictures?

SIV said...

Hi, the whole book is already uploaded in the following link. By the way One of your post only led me to that link.
http://www.tamilheritage.org/old/text/ebook/penang/nalla/title.html

Anonymous said...

முத்து காமிக்ஸ் இணையத்தில்படிக்க வசதி உண்டா?