Wednesday, April 25, 2012

STR சசித்திர கதைகள்

வணக்கம் நண்பர்களே,


பழைய இதழ்களை புரட்டிக் கொண்டு இருக்கையில் கண்ணில் பட்ட ஒரு வித்தியாசமான சித்திரக்கதை இதழ் பற்றி இந்த பதிவு. STR சசித்திர கதைகள் - இப்படி ஒரு சித்திரக்கதை இதழ் கேரளத் திருநாட்டின் கொச்சின் நகரில் இருந்து 1986 களில் வெளிவந்து இருக்கிறது. சித்திரக்கதைகள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் சரித்திரக்கதைகள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது என்ன சசித்திர கதைகள்?. சத்தியமாக எனக்கு தெரியாது. இப்படி ஒரு தமிழ் வார்த்தை உள்ளதா என்ன?

STR publications நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்ட இந்த இதழின் 9வது இதழின் அட்டைப்படம் மற்றும் சில ஸ்கேன்கள் உங்கள் பார்வைக்கு. இதழ்களை பார்க்கையில் அமர் சித்திரக்கதா இதழ் வடிவில் வெளியிட முயற்சி செய்து இருப்பார்கள் போல. சித்திரங்களும் கதையும் சுமார் ரகம் மட்டுமே. STR சசித்திர கதைகள் இதழ் ஆங்கிலம், இந்தி, மலையாளம், பெங்காலி மொழிகளில் வெளிவருவதாக கூறுகிறார்கள்.

                                                              அட்டைப்படம்:

                                                      கதை முதல் பக்கம்
 

                                                           ஆசிரியர் பகுதி



சம்ஹாரம் கதைச்சுருக்கம் - நான்கு ஆண்களுக்குப் பிறகு பெண் குழந்தையான பவானி ஒரு தீவிர தேவி பக்தை. பவானியின் நான்கு அண்ணிகளுக்கும் பவானியை பிடிக்கவில்லை. சதி மேல் சதிகள் பல செய்து அவர்கள் பாவானியின் அண்ணன்கள் மூலமாகவே அவளை கொன்று விடுகிறார்கள். ஆனால் தேவியின் அருள் மூலமாக பவானி உயிர்த்தெழுகிறாள். சதிகார அண்ணிகள் தண்டிக்கப்படுகிறார்கள். பவானி வெட்டப்பட்டு உயிர்த்தெழுந்த இடம் மக்களால் பவானியம்மா கோவில் என்ற பெயரில் வழிபாட்டு தளமாக இன்றும் விளங்குவதாக முடிக்கிறார்கள்.

                                                    எதோ ஒரு தொடர்கதை

அடுத்த இதழ் பற்றிய விளம்பரம்: இந்த விளம்பரத்தைக் கொண்டு இவ்விதழ் பக்தி கதைகளை மட்டும் வெளியிடவில்லை எனத்தெரிகிறது. (விடுதலைப்புலி என்ற தலைப்பில் வேறு எதாவது கதை படித்துள்ளீர்களா?)

இந்த வித்தியாசமான சித்திரக்கதை இதழ் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே...

(update: நண்பர் விஸ்வா அளித்த தகவல் படி STR சசித்திரக்கதைகள் மொத்தம் 27 இதழ்கள் வெளிவந்ததாகத் தெரிகிறது)




3 comments:

Karthik Somalinga said...

STR பேரை பார்த்து நான் ஷாக் ஆயிட்டேன்! சிம்பு எப்படா காமிக்ஸ் ஆரம்பிச்சார்னு :) ஸ்கேன் பக்கங்களை படித்ததில், ரொம்பவே மொக்கையாக இருக்கிறது! ஒரே நல்ல விஷயம், வெளியீடு எண், ஓவியர், கதாசிரியர் இப்படி எல்லா விவரங்களையும் விலாவரியா போட்டிருப்பதுதான்!

SIV said...

பயப்பட வேண்டாம் நண்பரே, சிம்புவெல்லாம் இப்போதைக்கு இந்த பக்கம் வரமாட்டார்.
மொக்கை காமிக்ஸ் படிப்பது நம்க்கு என்ன புதுசா என்ன?

Rafiq Raja said...

சசித்திரம் என்றால், வாழ்வு நெறிமுறை பற்றி குறிக்கும் சொல்லா ? எப்படி எல்லாம் ஆனா வேலை செய்ஞ்சிருக்காங்க... அமர் சித்திர கதையின் தாக்கம் அப்படி :)