Thursday, September 23, 2010

மங்க்கி காமிக்ஸ் (Monkey comics)

வணக்கம் நண்பர்களே... ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு. சமீப காலமாகவே காமிக்ஸ் பதிவுலகில் பதிவுகள் குறைந்துவிட்டது  போல் தெரிகிறது. கனவுகளின் காதலர் மட்டும் பின்னிஎடுக்கிறார். (ஆனால் காமிக்ஸ் பற்றிய பதிவுகள்தான் குறைவு). அதே போல் லயன் காமிக்ஸ் அலுவலகத்திலிருந்து  எந்த நற்செய்தியும் வராமலிருப்பது சோர்வளிக்கிறது. கூடிய விரைவில் நற்செய்தி எதாவது வந்தால் நன்றாக  இருக்கும்.

இனி பதிவிற்கு செல்வோம்...
மங்க்கி  காமிக்ஸ் (இப்படியும்  ஒரு பெயர்) - 1995~1999 களில் வெளிவந்த தமிழ் சித்திரக்கதை இதழ்.  மொத்தம் 8 ~ 10 இதழ்கள் வந்திருக்கும் என் எண்ணுகிறேன். என்னிடம் நான்கு இதழ்கள் உள்ளன.

நட்சத்திர யுத்தம்

முதல் இதழான நட்சத்திர யுத்தம் 1995 ல் வெளிவந்து இருக்கிறது. ஆசிரியரின் குறிப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.






கழுகு மலை புதையல்
இது ஒரு இ.கோ.மு.சிங்கம் போல் இந்திய கெளபாய் கதையாகும். ராஜ்பிரசாத் என்பவர் கதை மற்றும் ஓவியங்கள் வரைந்துள்ளார். ஓவியர் மாருதியின் அட்டகாச அட்டைபடம் இதழுக்கு மிகப்பெரிய பிளஸ் பாய்ன்ட். காமிக்ஸ் உலகில் மாருதியின் படைப்புகள் மிகவும் குறைவு என்பது என் கருத்து. அட்டைப்படத்தில் இருக்கும் தரத்தை உள்ளேயும் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மற்றபடி புத்தகத்தின் சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு.
(அட்டைபடம், ஆசிரியர் பக்கம், வாசகர் கடிதம், வள்ளியண்ணா சிறுகதை மற்றும் தொடர்கதை....)

 



மங்க்கி  காமிக்ஸ் ஸ்பெஷல் :
கோடை காலத்தில் மங்க்கி காமிக்ஸில் இருந்து வெளிவந்த ஒரு ஸ்பெசல் புத்தகத்தின் சில பக்கங்கள்....இங்கு மாருதியின் அட்டைபடம் மிஸ்ஸிங்.
ஜட்ஜ் dredd - அட்டைபடத்தில் மட்டும்.

(போலிஸ் அக்காவின் தாடிக்காக மாஸ்டர் சிவ் வை மன்னித்துவிடுங்கள்.)
இந்த இதழின் கதைகளின் முதல் பக்கங்கள் ....



இந்த ஸ்பெஷல் இதல் ஏற்கனவே வந்திருந்த கதைகளின் மறு பதிப்பே.

பதிவை பொறுமையாக படித்தற்கு நன்றி.  தங்கள் கருத்துகளையும் தகவல்களையும்  நண்பர்கள் இங்கே  பகிர்ந்து கொள்ளவும்.

6 comments:

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

விஜயசாந்திக்கு தாடி வரைஞ்சு விட்ட அந்தக் கயவன் எவன்?!!

தலைவர்,
அ.கொ.தீ.க.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

மீண்டும் ஒரு அரிய அறிமுகம். முகத்தில் கை வத்த மாஸ்டர் சிவ் கீழே இறங்காதது எம் பாக்யம் :)

CAPTAIN HECHAI said...

நல்ல அருமையான பதிவு நண்பரே! 10 ரூபாய் காமிக்ஸ் கதை என்னிடமும் ஒரு பிரதி உள்ளது, அதுவும் சமீபத்தில்தான் கிடைத்தது
படங்கள் சுமார் ராகம் என்றாலும் முயற்சியை பாராட்டலாம்
அன்புடன்
கேப்டன் ஹெச்சை

King Viswa said...

சிவ,
என்னிடம் மங்க்கி காமிக்ஸ் பெரும்பாலான இதழ்கள் உள்ளன.

//ஓவியர் மாருதியின் அட்டகாச அட்டைபடம் இதழுக்கு மிகப்பெரிய பிளஸ் பாய்ன்ட். காமிக்ஸ் உலகில் மாருதியின் படைப்புகள் மிகவும் குறைவு என்பது என் கருத்து. //

அறுபதுகளிலேயே மாருதி வரைந்த காமிக்ஸ் வந்துள்ளது (என்னிடம் இல்லை). ஆனால் வெறும் அட்டைப்படம் மட்டும்தான் வரைவார். இதற்க்கு முன்பு எண்பதுகளில் திரு மயிலம் சாமி அவர்களின் காமிக்ஸ் வெளியீடுகளில் அட்டைப்படங்களை இவர்தான் வரைந்தவர் (சீக்ரெட் ஏஜன்ட் இன் லண்டன் - மறக்க முடியுமா?).

Lucky Limat - லக்கி லிமட் said...

அபூர்வ காமிக்ஸ்களை அள்ளித்தரும் சிவ் ,
கழுகுமலை புதையல் அட்டைப்படம் அருமை.

//லயன் காமிக்ஸ் அலுவலகத்திலிருந்து எந்த நற்செய்தியும் வராமலிருப்பது சோர்வளிக்கிறது.//
அந்த நற்செய்தி மட்டும் வந்தால் காமிக்ஸ் பதிவுலகம் மீண்டும் களை கட்டும்.

SIV said...

கருத்துகளுக்கு நன்றி டாக்டர், கனவுகளின் காதலர், கேப்டன்...
விஸ்வா, மாருதி எப்போதுமே ஒரு அட்டைபட ஸ்பெஷலிஸ்ட் என தெரிகிறது.
லக்கி, காமிக்ஸ் பதிவுலகம் மீண்டும் களை கட்ட விஜயன் சார் தான் மனது வைக்க வேண்டும் போலிருக்கிறது