இந்த வருட புத்தக கண்காட்சியில் ஒரு காமிக்ஸ் புத்தகமாவது வாங்கி விட வேண்டும் என சென்ற நான் "அப்துல் கலாம்" என்ற அற்புதமான காமிக்ஸ் ஒன்றை கையகபடுத்தினேன். கிழக்கு பதிப்பகத்தின் P-32 ஸ்டாலில் 'Prodigy comix' என்ற புத்தக வரிசையில் அப்துல் கலாம் அவர்கள் பற்றிய இந்த காமிக்ஸ் புத்தகம் கிடைக்கிறது.
S. சுஜாதா என்பவரின் எழுத்திலும் K. சொக்கலிங்கம் என்பவரின் ஓவியத்திலும் சிறப்பான காமிக்ஸ் புத்தகமாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது. தொழில்நுட்ப வசதிகளை நன்றாக பயன்படுத்தி இருப்பார்கள் போலும். கதை, ஓவியத்திற்கு அடுத்தபடியாக வண்ணம்(colors) என்ற இடத்தில் தனிமனிதரின் பெயர் ஏதும் இல்லாமல் அனிமேஷன் நிறுவனம் ஒன்றின் பெயர் உள்ளது. நல்ல முன்னேற்றம் தான்.
கிழக்கு பதிப்பகம் website மூலமாக ஏற்கனவே இந்த புத்தகம் பற்றி கேள்விபட்டிருந்ததால் கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டாலில் விசாரித்த போது காமிக்ஸ் புத்தகமெல்லாம் இங்கு விற்பதில்லை என்று கூறி விட்டார்கள். அப்புறம் சிறிது நேர தேடுதல்க்குப்பின் புத்தகம் கண்ணில் பட்டது. இதே வடிவில் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது.
கதை, மொழிநடை, ஓவியம், வண்ணம் மற்றும் அச்சு என அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். வாழ்க்கை வரலாறு என்றாலும் சிறிது கூட அலுப்பில்லாமல் பக்கங்களை திருப்பமுடிகிறது. ஏற்கனவே அக்னிச் சிறகுகள் படித்திருந்தாலும் பல விஷயங்கள் புதிதாக (அல்லது புதிய கோணத்தில்) தெரிந்துகொள்ள முடிகிறது. அப்துல் கலாமின் வழ்க்கையில் அவர் சந்தித்த தோல்விகள் பற்றிய தகவல்கள், 'தோல்வியே வெற்றியின் முதல் படி' என்ற வரிகளுக்கு அப்துல் கலாம் சிறந்த உதாரணம் என காட்டுகிறது. அவரின் முதல் ஏவுகலம் (S.L.V) விண்ணில் செலுத்தப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் வெடித்து சிதறுகிற காட்சி இந்த புத்தகத்தில் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.
அப்துல் கலாமின் M.I.T நாட்கள்
நந்தி எனும் தோல்வி முயற்சி
காமிக்ஸ் வடிவில் ஒரு அற்புத தலைவரின் வாழ்க்கை வரலாற்றை கொடுத்து தமிழ் காமிக்ஸ் உலகை பெருமையடைய செய்திருக்கும் கிழக்கு பதிப்பதிற்கு காமிக்ஸ் ரசிகன் என்ற முறையில் நன்றிகள். இந்த முயற்ச்சியின் அடுத்த கட்டதை பார்க்க ஆர்வமாக உள்ளேன். தமிழில் பெரியவர்களும் படித்திடும் தரமான காமிக்ஸ்கள் கிழக்கு பதிப்பகம் மூலமா வந்திட வேண்டும்.
இதே ஸ்டாலில் மேலும் சில தமிழ் காமிக்ஸ்கள் கிடைக்கிறது. ஆனால் அவை மிகவும் சிறிய குழந்தைகளுக்கானவை என்பதால் நான் வாங்கவில்லை. குழந்தைகளுக்கு புத்தகம் வாங்க விரும்புவோர்க்கு பயன்படும்.
Prodigy comix - அப்துல் கலாம் இணையத்தில் வாங்க இங்கே சொடுக்கவும்
--------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை புத்தக கண்காட்சியில் வாங்க கூடிய இதர காமிக்ஸ் புத்தகங்கள் (என்க்கு தெரிந்த வரை)
மணிமேகலை பதிப்பகம்
அப்புசாமியின் கலர் டிவி
தாராவும் குகை மனிதர்களும்
நியு சென்சுவரி புக்
ரஷ்ய புரட்சி
கிழக்கு பதிப்பகம்
'Prodigy comix' - அப்துல் கலாம்
மேலும் சிறிய குழந்தைகளுக்கான சில காமிக்ஸ் வடிவ கதைகள்
விகடன் பதிப்பகம்
நடுகடல் நாசகாரன்
மரணம் துரத்தும் மஞ்சு
வேற்றுக்கிரக விரோதிகள்
(இவை சுட்டி விகடனில் இனைப்பாக வெளிவந்த சுட்டி காமிக்ஸின் பதிப்பக வடிவம்)
சென்ற ஆண்டு போலவே Info Mapல் லயன் காமிக்ஸ் கிடைக்கிறது
பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்க மறந்து விடாதீர்கள் நண்பர்களே....
அப்புசாமியின் கலர் டிவி
தாராவும் குகை மனிதர்களும்
நியு சென்சுவரி புக்
ரஷ்ய புரட்சி
கிழக்கு பதிப்பகம்
'Prodigy comix' - அப்துல் கலாம்
மேலும் சிறிய குழந்தைகளுக்கான சில காமிக்ஸ் வடிவ கதைகள்
விகடன் பதிப்பகம்
நடுகடல் நாசகாரன்
மரணம் துரத்தும் மஞ்சு
வேற்றுக்கிரக விரோதிகள்
(இவை சுட்டி விகடனில் இனைப்பாக வெளிவந்த சுட்டி காமிக்ஸின் பதிப்பக வடிவம்)
சென்ற ஆண்டு போலவே Info Mapல் லயன் காமிக்ஸ் கிடைக்கிறது
பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்க மறந்து விடாதீர்கள் நண்பர்களே....
8 comments:
நண்பரே,
கிழக்கின் முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இம்முயற்சியின் வளர்ச்சி பிற மொழியில் வெளியாகும் தரமான காமிக்ஸ்களை தமிழிற்கு இட்டு வருமானால் மகிழ்ச்சியே.
நல்லதொரு பதிவு.
இதுவரையில் ப்ராடிஜி மூலம் நாங்கள் இந்த ஒரு காமிக்ஸ் புத்தகத்தைத்தான் அச்சிட்டுள்ளோம். இன்னும் மூன்று தயாராக உள்ளது. அச்சிடவில்லை. இது ஒரு சோதனை முயற்சியே. முழுமையான திருப்தி இன்னமும் ஏற்படவில்லை. படங்கள் கறுப்பு வெள்ளையில் வரையப்படுகின்றன. பிறகு ஸ்கேன் செய்யப்பட்டு, கணினி மூலம் வண்ணம் ஏற்றப்படுகிறது. அடுத்து வரும் 10 புத்தகங்களும் ‘டிரையல்’ பீரியட் என்பதால் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும்! அதற்குள் ஓரளவுக்கு கற்றுக்கொண்டு, தரத்தை மேம்படுத்த முயற்சி செய்கிறோம்.
எல்லாமே non-fiction வகையைச் சேர்ந்ததாகவே பெரும்பாலும் இருக்கும்.
நன்றி ஷிவ். இந்த புத்தகத்தை பற்றி பதிவிட்டதற்கு.
கிழக்கு என்றாலே தரமான புத்தகங்களை தான் வெளியிடுவார்கள் என்று நம்பிக்கை வந்து விட்டதால் பலரும் இதனை வாங்குவார்கள் என்றே நம்புகிறேன்.
பத்ரி: காமிக்ஸ் முயற்சி(யும்) வெற்றியடைய வாழ்த்துக்கள்.
THANKS for sharing this wonderful review about Dr.kalam book, i will get this soon in bookfair. and iam glad to know the place where our lion and muthu available. thank you friend.
Badri, உங்க்ளுடைய காமிக்ஸ் முயற்சிகளுக்கு வாழ்த்துகள். Non - fiction கதைகளோடு மட்டும் நிறுத்தி விடாமல் அனைத்து வகையான கதைகளும் வெளியிடுமாறு கேட்டுகொள்கிறேன். குறிப்பாக உள்ளூர் கலைஞர்களால் தராமாக தயாரிக்கப்படும் காமிக்ஸ்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும். தமிழ் காமிக்ஸ் உலகிற்க்கு கிழக்கு பதிப்பகம் மூலமாக ஒரு நல்ல எதிர்காலம் காத்துள்ளது
Viswa, happy to see your comment in my blog after a very long time.
Cap tiger, Please rush into book fair as early as possible. Last year books were sold 3 or 4 days before closing book fair. This year too books are selling hot.
தமிழில் காமிக்ஸ் வெளியிட நினைத்தற்கெ, கிழக்கு பதிப்பகம் பத்ரிக்கு ஒரு ஓ போட வேண்டும். ஓவியங்களில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் முதல் வெளியீடு என்பதால், அடுத்தது இன்னும் சிறப்பாக வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளது.
அடுத்த முறை கண்காட்சிக்கு செல்லும் போது தவறாமல் வாங்கி விடுகிறேன். தகவலுக்கு நன்றிகள் ஷிவ்.
very bad illustrations, terrible coloring. prodigy sucks bigtime!
Post a Comment