நண்பர்களுக்கு வணக்கம். சிறிது நாட்களுக்கு முன் நடந்திட்ட சென்னை புத்தக கண்கட்சிஇல் வாங்கிய ஒரு காமிக்ஸ் மாதிரியான புத்தகத்தை பற்றி எழுதலாம் உள்ளேன். New century book house stall இல் சுற்றி கொண்டு இருக்கும் போது எதேட்சையாக இந்த புத்தகத்தை பார்க்க முடிந்தது
புத்தகத்தை புரட்டி பார்த்தால் காமிக்ஸ் மாதிரி தன் இருக்கிறது . ஆனால் தனிப்பட்ட கதை அல்லாமல் வரலாற்று சம்பவங்களை காமிக்ஸ் வடிவத்தில் விவரித்து இருகிறர்கள். Rs. 75 இல் ஆருமையான art work இல் கம்பீரமாக தோற்றமளிக்கும் புத்தகத்தை உண்டனடியாக வாங்கினேன்.
அட்டை படம்.
முன்பே சொன்னது போல் கதை என்பதே இல்லாமல் ரஷ்ய புரட்சியின் கொள்கைகளையும் சில முக்கியமான் சம்பவங்களையும் சொல்லி இருக்கிறார்கள்.
முதலில் ஜார் மன்னர்களின் ஆட்சியில் மக்கள் வெறுப்புற்று தற்காலிக அரசாங்கம ஆட்சியில் அமருகிறது. தற்காலிக அரசாங்கமும் பெரும் தொழில் அதிபர்களின் கட்டுபாட்டில் இருக்கிறது. ஆகையால் மக்களும் தொழிலாளர்களும் ஒன்று கூடி புரட்சி ஏற்படுத்தி ஆட்சியை கை பற்றுகிறார்கள்.
சோசலிச கட்சி ஆட்சிக்கு வந்த பிறக்கும் அவர்களுக்கு பல வித தொல்லைகள் வருகிறது. (பகைமை நாடுகளும், ஆட்சிக்கு எதிராய் திரும்பிய தொழில் ஆதிபர்களும்). அதை அவர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் பற்றி கூறுகிறார்கள்
இந்த வரலாற்று நிகழ்வுகளை அற்புதமான ஓவியங்களில் விவரித்து இருக்கிறார்கள். ஆனால் இதழை படிக்கும் உங்களுக்கு காமியுனிச பிரசார வாடை வருவதை தவிர்க்க இயலாது. மொழிபெயர்ப்பு தரம் ok. சில இடங்களில் சுமார்தான். கீழ் காணும் படங்களை பார்த்தால் உங்களுக்கு காமிக்ஸ் feel வரும்.
இந்த விளம்பரத்தை பாருங்கள். இந்த புத்தகங்களை தேடி பார்த்தேன். இல்லை என்று கூறி விட்டார்கள். ஒருவேளை 'New century book house' அலுவலகத்தில் கிடைக்க கூடும். நண்பர்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.
பின் அட்டை
வாய்ப்பு கிடைக்கும் பொது இந்த புத்தகத்தை வங்கி படியுங்கள். ஆவலுடன் உங்கள் comments எதிர் பார்க்கிறேன்.
பின் குறிப்பு: சிறிது வருடங்களுக்கு முன் இதே New century book house நிறுவத்தினர் நிறைய ரஷ்ய புத்தகங்களை மொழி பெயர்த்து மலிவான விலையில் வெளிய்டுவர். அவற்றிற்கு தமிழ் சிறுவர் இலக்கியத்தில் முக்கிய இடம் உண்டு. அவற்றில் சில.......
1. வீர திருகாணியும மாய பென்சிலும்
2. மூன்று தடியர்கள்
3. அப்பா சிறுவனாக இருக்கும் பொது....
14 comments:
நண்பரே,
முதலில் மாறுபட்ட ஒர் கதையை பதிவாக இட்டதிற்கு பாராட்டுக்கள்.
பிரச்சார வாடை அடித்தாலும் வரலாற்றின் சில தருணங்களை இது அறிந்து கொள்ள உதவுமல்லவா. இளைய சமுதாயத்தை குறி வைத்து இப்புத்தகம் வெளியாகி இருக்கலாம என நாண் எண்ணுகிறேன்
இவ்வாறான பதிவுகளை தயங்காது நீங்கள் முயற்சிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
உற்சாகத்துடன் தொடருங்கள் உங்கள் புதிய முயற்சிகளை.
சிவ், வித்தியாசமான ஒரு புத்தகத்தை பற்றி அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. அட்டைபடம் உண்மையிலேயே அட்டகாசமாக தயார்படுத்தபட்டிருக்கிறது. ஒரிஜினல் உபயமாக இருக்கலாம்.
சரித்திரத்தின் சில பக்கங்களை சித்திரம் மூலம் சொல்ல ஆசைப்பட்டிருக்கும் விதம் நன்று. ஆனால், ஓவியங்கள் பழங்காலத்து பொன்னி காமிக்ஸ் முறையில் இருப்பது வருத்தமே. ஓவியரை பற்றி ஒன்றும் குறிப்பிடபடவில்லை, இந்திய காமிக்ஸ்களில் கர்த்தாகளின் தகவல்கள் வராதது ஒன்றும் புதிது இல்லை என்பதால் ஆச்சர்யபட தேவையில்லை.
தமிழில் முதல் பதிவை இட்டு இருக்கிறீர்கள், வாழ்த்துகள். தொடருங்கள் உங்கள் தனித்துவத்தை.
ரஃபிக் ராஜா
காமிக்கியல் &
ரா-கா
Thanks for visiting & commenting. Artist details available in the book. I missed to mention about them. Art work - Anatholi Vaseeliyev
Lettering - O. Vecherina. I tried to collect information about these artists. Not available anywhere. Raffiq, do you have any info about Russian comics in generally.
சிவ அவர்களே,
முதலில் என்னுடைய பாராட்டுக்களை பிடியுங்கள். தமிழில் எழுத ஆரம்பித்து விட்டீர்கள். அதற்குதான்.
இந்த கதையை என்னுடைய சிறு வயதில் படித்ததாக நினைவு. மிகவும் சிறந்த கதை இது. இது மட்டுமில்லாமல் வேறு சில காமிக்ஸ் வடிவ புத்தகங்களையும் (ருசியாவை சார்ந்தது) படித்து இருக்கிறேன். அவை எல்லாம் எங்கே இருக்கின்றன என்பது எனக்கு இன்னமும் ஒரு புரியாத புதிர். ஆன்னால், தங்களின் பதிவை படித்த உடனே அந்த பதிப்பகதினரிடம் பேசி அந்த புத்தகத்தை வரவழைக்க வழி செய்து விட்டேன். நன்றிகள் உங்களுக்கு.
இதற்கிடையில் என்னுடைய வலைப் பூவில் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) தோன்றும் தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் கதை ஆகிய அறுந்த நரம்புகள் என்ற புத்தகத்தை அப்லோட் செய்து இருக்கிறேன்.
நேரம் கிடைக்கின் படித்து மகிழவும்.
புல சுலாகி.
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ்.
சிவ்,
தாமதமாக கமெண்ட் இடுவதின் காரணம் உங்களுகு தெரிந்து இருக்கும்.
இந்த கதையின் முதல் பதிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த பதிப்பில் பேப்பர் தரம் சிறந்து விளங்கியது. இந்த பதிப்பில் அது மட்டமான தரத்தில் இருக்கின்றனது.
கதையை பற்றிய உங்களின் கருத்து முற்றிலும் சரி. சற்று பிரச்சார வாடை தூக்கலாகவே இருக்கின்றது. அதற்கான காரணங்களும் சரியே.
அந்த மூன்று தடியர்கள் என்ற கதை ருசிய நாடு போல்க்ஸ்டோரி ஆகும். அதனை நேரம் கிடைத்தால் வாங்கி படியுங்கள். நான் சிறு வயதில் ரசித்த கதை.
தமிழில் பதிவிட ஆரம்பித்து இருப்பதற்கு என்னுடைய பாறத்டுகுககள். தொடர்வீர்கள் என்றே நம்புகிறேன்.
மேலும் போடோக்களை இடாமல், ஸ்கான் செய்ய ஆரம்பித்து விட்டீர்கள் போல இருக்கிறதே? அதற்கும் பாராட்டுக்கள்.
காமிக்ஸ் பதிவர்களிலேயே உங்களின் முயற்சியை ஆரம்பம் முதலே கவனித்து வருகிறேன். ஒவ்வொரு பதிவிலும் ஒரு நல்ல முயற்சி செய்து வருகிறீர்கள். தொடருங்கள் உங்களின் சிறப்பான பணியை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு காமிக்ஸ் வலையுலகிற்கு வருகிறேன். இடைப் பட்ட காலங்களில் சில பல காரணங்களால் கமெண்ட் இட இயலவிலலை. மீண்டு வந்து, மீண்டும் வந்து இருக்கிறேன். இனிமேல் தங்கு தடையின்றி என்னை நீங்கள் காணலாம்.
கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்
லெட் த கும்மி ஸ்டார்ட்.
--
பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.
good work siv.
all the best for blogging in tamil. what is next? iam not able to guess your posting as i can do for other bloggers.
Thanks for your valuable comments. Next time also you can expect a post about a history based comics. Of course it is about Indian history
பகிர்வுக்கு மிக்க நன்றி. உள்பக்கப் படம் ஒன்றை சுட்டுக்கொள்ளவா? நியூசெஞ்சுரி புக் ஹவுசை லைட்டாகத் திட்ட வேண்டியுள்ளது.
காமிக்ஸ் வலையுலக நண்பர்களுக்கு என்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த வருடம் உங்களுக்கு எல்லா நலன்களையும் வளங்களையும் கொழிக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுவதோடில்லாமல், அதற்காக உழைக்கவும் முயல்வோம். உழைப்பு இல்லையேல் உயர்வில்லை. .
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
from spider,
its really nice to see historical events like this in comic format.
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்
I wish I could find a copy of வீர திருகாணியும மாய பென்சிலும். I bought it in an exhibition 30 years ago when I was in my class 1. It is one of favourites. Someone borrowed it don't remember exactly who and never rerurret it. :(
Post a Comment