Thursday, January 27, 2011

மாயாஜால் காமிக்ஸ்

நண்பர்களே, மணிமேகலை பிரசுரத்தில் வெளிவந்த தாராவும் குகை மனிதர்களும் நியாபகம் இருக்கிறதா? அச்சித்திரக்கதையை வழங்கிய ராஜதிலகம் அவர்கள் முன்பு மாயாஜால காமிக்ஸ் மூலம் மேலும் பல சித்திரக்கதைகள் வழங்குவதாக கூறி இருந்தார்.

அதற்கான முயற்சிகளை கீழ்காணும் இணைய பக்கம் மூலம் ஆரம்பித்துள்ளார்

மாயாஜால் காமிக்ஸ் இணைய பக்கம்

அவரது இணையப்பக்கத்தில் கீழ்காணும் காமிக்ஸ் வரிசைகள் உள்ளன

1. யம் யம் யமராஜ் - எமராஜனை நாயகனை கொண்ட கதை தொடர்
2. அர்ஜூன் - செவ்விந்திய நாயகன்
3. விடி வெள்ளி - செவ்விந்திய வீராங்கனை
4. வாலி - வேற்றுகிரகவாசிகள் பற்றிய கதை

யம் யம் யமராஜ்

அர்ஜூன் 

விடி வெள்ளி

வாலி

 இந்த காமிக்ஸ் வரிசைகளை புத்தக வடிவில் வழங்கிடுவது பற்றி ஆசிரியர் இந்த அறிவிப்பினை வெளியிடுகிறார்.


இது போன்ற முயற்சிகள் தமிழ் காமிக்ஸின் அடுத்த படிக்கு ரொம்ப முக்கியம். தரமான காமிக்ஸ் கதைகளாக இருந்தால் தமிழ் ரசிகர்கள் என்றும் வரவேற்பு கொடுப்பர்கள் என நம்புகிறேன். மாயாஜால் காமிக்ஸ் சிறப்பாக வெளிவந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Tuesday, January 11, 2011

புத்தக கண்காட்சியில் காமிக்ஸ் சேகரிப்பு

புத்தக கண்காட்சிக்கு செல்வது இனிது, அங்கு காமிக்ஸ் வாங்குவது அதனினும் இனிது. இதோ இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் நான் சேகரித்த காமிக்ஸ்கள்.
நான் சென்றது சனிக்கிழமை மாலை என்பதினால் கூட்டத்திற்கு பஞ்சம் இல்லை. விற்பனையாளர்களிடம் சரியாக விசாரிக்க கூட அனுமதிக்காத கூட்டம். இங்கு விஸ்வாவின் புத்தக கண்காட்சி பற்றிய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

வாங்க திட்டமிட்டவை:

1. மர்ம மாளிகையில் பலே பாலு (வானதி) -
2. வாண்டுமாமா சித்திரக்கதைகள் தொகுதி-1 (வானதி) -  ஏற்கனவே கைவசம் இருந்த பிரதி தொலைந்து விட்டது
3. மாய மோதிரம் (வானதி)
4. புலி வளர்த்த பிள்ளை (வானதி)
5. தமிழ் அமர் சித்திரக்கதைகள் (4 or 5 books Based on title) (கிழக்கு)
6. ஈரான் 1 & 2 (விடியல்)
7. கிமுவில் சோமு (நர்மதா)

வாங்கியவை :

1. மர்ம மாளிகையில் பலே பாலு - நீண்ட காலமாக கைக்கு கிடைக்காமல் போக்கு காட்டி கொண்டிருந்தது. இதோ இன்று பிடித்து விட்டேன்.

 

2. கிமுவில் சோமு - சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் வாங்க வேண்டியது. இப்போது தான் அகப்படுகிறது.


3. நிலாக்குதிரை:

வாண்டுமாமாவின் பலநாட்டு சிறுகதைகளின் தொகுப்பு. இந்த புத்தகம் பற்றி கேள்விபட்டதே இல்லை. ஆகையால் இது ஒரு
surprise piece. ஓவியர் மாருதியின் அட்டைபடம் அழகு. மொத்தம் 24 சிறுகதைகள் உள்ளன. பெரும்பாலும் அயல் நாட்டு சிறுகதைகள். இவிதழில்  நம் மதியில்லா மந்திரியை பார்த்தது ஒரு எதிர்பாரா நிகழ்வு. மதியில்லா மந்திரியின் மூன்று கதைகள் சிறுகதை வடிவில் வழங்கப்பட்டுள்ளது. முதல் கதையை லயனில் பார்த்ததாக நியாபகம். இதழின் மற்ற கதைகளும் ஆர்வமூட்டுவதாக உள்ளன. வாண்டுமாமா ரசிகர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய புத்தகம்.





4. புலி வளர்த்த பிள்ளை :
இந்த புத்தகம் கிடைப்பதற்கான நம்பிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. கிடைத்தது ஒரு ஆச்சர்யம். மற்றும் ஒரு ஆச்சர்யம் வீட்டில் புத்தகத்தை திறந்து பார்க்கும் போது கிடைத்தது.
இக்கதையின் மூன்றாவது பாகம் ஓவியர் செல்லம் கைவண்ணத்தில் சித்திரக்கதை வடிவில் வழங்கப்பட்டிருக்கிறது. புலி வளர்த்த பிள்ளையின் இறுதி பாகம் சித்திரக்க்தை வடிவம் என்பது பூந்தளிரில் ஏற்கனவே பார்த்த நியாபகம். ஆனால் மாறன் மல்லப்பன் கதையும் இதே போல் ஒரு பகுதி சித்திரக்க்தையாக இருந்தும் வானதியில் புத்தகமாக வெளியிடும் போது முழு நாவல் வடிவிலேயே வெளியிட்டார்கள். அதையே இங்கும் எதிர்பார்த்த எனக்கு சித்திரக்கதை வடிவம் ஒரு இன்ப அதிர்ச்சி.


5. தமிழ் அமர் சித்திரக்கதை: இந்த தொகுப்பில் குறைந்தது 5 புத்தகங்களாவது வாங்கலாம் என்று எண்ணியிருந்தேன். (ஏற்கனவே இரண்டு இதழ்கள் கைவசம் உள்ளன). ஆனால் அந்த நேரத்தில் ஏற்கனவே பட்ஜெட் எல்லை மீறி போய் இருந்ததால் சாம்பிளுக்கு ஒன்று மட்டும் வாங்கினேன். கூடிய விரையில் ஏனைய இதழ்களையும் வாங்கிட வேண்டும். கிழக்கு பதிப்பம் இந்த சித்திரக்கதைகளுக்கு கவனத்தை கவரும் வகையில் பேனர்கள் வைத்து இருந்தது காமிக்ஸ்களுக்கான மரியாதை. கிழக்கு பதிப்பகம், மொழிமாற்ற காமிக்ஸ்கள் போலவே தமிழ் மொழியில் புதிதாக உருவக்கபடும் காமிக்ஸ்களையும் வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம். நான் பார்த்த வரை இந்த காமிக்ஸ்களுக்கு வரவேற்பு இருப்பதாகவே படுகிறது.





கிடைக்காதவை :

1. ஈரான் 1&2  - விடியல் பதிப்பகம் கண்ணில் படவே இல்லை. நேரமின்மையும் அதிக கூட்டமும் பதிப்பகத்தை தேடும் ஆர்வத்தை குறைத்து விட்டன. இந்தவாரம் செல்லும் நண்பர்கள் மூலமாக வாங்க திட்டமிட்டுள்ளேன்

2. மாய மோதிரம் & வாண்டுமாமா சித்திரக்க்தைகள் தொகுதி 1 -  வானதியில் இருப்பு இல்லை என்று கூறி விட்டார்கள்.

புத்தக கண்காட்சியில் காமிக்ஸ் சேகரிப்பு பற்றிய இந்த பதிவை படித்துவிட்டு கருத்து சொல்ல மறக்காதீர்கள் நண்பர்களே.