- 10/15 வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்தின் அனைத்து முன்னனி வாரபத்திரிக்கைகளிலும் ஒரு சித்திர தொடர்கதையாவது கண்டிப்பாக இடம்பெற்று இருக்கும். பழைய கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் இதழ்களை நீங்கள் பார்க்க நேரிட்டால் இதை உணரக்கூடும். இந்த வகையில் கல்கியில் வாண்டுமாமா படைத்த பல சித்திரக்கதைகள் தமிழ் சித்திரக்கதை உலகின் முத்துக்கள். யாருடைய சதி என்று தெரியவில்லை இன்று கண்ணுக்கு எட்டியவரை வாரபத்திரிக்கைகளில் சித்திர தொடர்கதை எதுவும் தென்படவில்லை
- இந்த பதிவில் ஆனந்த விகடன் இதழ்களில் வெளிவந்த சில படக்கதைகள் பற்றி பார்ப்போம். இந்த பதிவு ஆனந்த விகடனின் காமிக்ஸ் சேவை பற்றிய முழு வரலாறு கிடையாது என்பதையும் எனக்கு தெரிந்த சில தகவல்களை பகிர்ந்து கொள்ளும் முயற்சியே என்பதையும் இப்போதே சொல்லிவிடுகிறேன்.
- இந்த வார ஆனந்த விகடன் இதழில் தமிழின் முதல் படக்கதை பற்றிய செய்தி துணுக்கு ஒன்று 'பொக்கிஷம்' பகுதியில் வெளியிட்டு உள்ளது.
(தமிழின் முதல் படக்கதை பற்றி ஆ.வி வெளியிட்டிருக்கும் தகவல்கள், தலைப்பு - ஜமீந்தார் மகன், கதை - முத்து, ஓவியம் - மாயா, ஆண்டு - 1956)
- ஆனந்த விகடன் பெரும்பாலும் பெரியவர்களை கவரும் விதமான சித்திரக்கதைகளுக்கே முன்னுரிமை கொடுத்துள்ளார்கள் என்பது என் கணிப்பு. ஆனால் கல்கியோ சிறுவர்களை கவரும் சித்திரக்கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்கள்.
- 1970 களில் வெளிவந்த சில சித்திரக்கதை தொடர்களின் ஸ்கேன்கள் உங்கள் பார்வைக்கு. இங்கு இரண்டாவதாக பார்க்கும் 'பொன்மகள் பூமா' தமிழின் முதல் சித்திரக்கதையின் ஓவியர் மாயாவின் கைவண்ணம்.
பொன்னின் நிழல்
பொன்மகள் பூமா
ஸ்வீட் செவண்டீன் (முதல் வாரம் மட்டும் இருவண்ணம்)
- சராசரியாக ஒரு கதை 20~25 வாரங்களுக்கு வெளிவந்திருக்கிறது. பெரும்பாலான கதைகள் 1960 களின் சினிமாக்களை நியாபகப்படுத்துகிறது. குறை சொல்ல முடியாத சித்திர தரம் மற்றும் எளிமையான கதை அமைப்பும் இக்கதைகளின் சிறப்பு அம்சங்கள்.
- 1980களில் வந்த 'தசாவதாரம்' சித்திரக்கதை சமீபத்தில் பொக்கிஷம் பகுதில் மறுபதிப்பு செய்யப்பட்டது. கதை - புகழ்பெற்ற பேய் கதை எழுத்தாளர் பீ.டி சாமி.
- ஆனந்த விகடனில் கொஞ்ச நாட்களாக சித்திரக்கதை தொடர் ஏதுவும் வருவதில்லை என்றாலும் நிறைய கார்டூன் துணுக்குகள் வருவது மகிழ்ச்சி.
- ஆனால் பக்தி விகடனில் சிறிது காலமாக வாரம் ஒரு சித்திரக்கதை வெளிவந்து கொண்டிருந்தது. (தற்போது வருகிறதா என தெரியவில்லை)
வாரபத்திரிக்கைகளின் வெளிவந்த காமிக்ஸ் பற்றிய நண்பர் சாத்தானின் பதிவுகளை படிக்க.....
நண்பர் அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரனின் 1970களில் வெளிவந்த காமிக்ஸ் பற்றிய பதிவை படிக்க....
அப்புறம் இப்போது வரைக்கும் எனக்கு சம்பந்தம் இல்லாத ஒரு விஷயமாக இருந்தாலும் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.