Saturday, August 22, 2009

பொன்னியின் செல்வன் சித்திரங்கள் - புது வெள்ளம் (Ponniyin selvan art work)

கல்கியின் பொன்னியின் செல்வன்

வணக்கம் நன்பர்களே, சிறிது மாதங்களுக்கு முன் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படிக்க நேர்ந்தது. அன்றில் இருந்தே தமிழ் மீதும் தமிழ் வரலாற்று மீதும் இருந்த பற்று அதிகமாகி விட்டது. முதலில் சித்திரங்கள் இல்லாத ஒரு புத்தகத்தினயே படித்து இருந்தேன். சமீபத்தில் சித்திரங்களுடன் கூடிய கல்கி பைண்டிங் புத்தகம் கிடைத்தது (முதல் பாகம் - புது வெள்ளம்). புத்தகம் கிடைத்த அன்று சில மணி நேரங்களாவது அந்த சித்திரங்களை பார்த்து கொண்டே இருந்து இருப்பேன். பொன்னியின் செல்வன் கதை படிப்பது எப்படி இனிமையோ அதே போன்று சித்திரங்களை பார்ப்பதும் இனிமையான அனுபவம். அத்தகைய சித்திரங்களை உங்களுடன் பகிர்த்து கொள்ளவே இந்த பதிவு. பொன்னியின் செல்வன் கதைக்கு பல ஓவியர்கள் படம் வரைந்து இருப்பதாக தெரிகிறது. இங்கே பார்ப்பது ஓவியர் வினு அவர்களின் சித்திர படைப்புகள்.


சில வண்ண அட்டைப்படங்கள் ...........

பழு வேட்டையரின் யானை பவனி (பல்லகில் மதுராந்தகன் )




சோழ வீதி நாடகம்,





வத்திய தேவனின் குதிரை..





குந்தவி தேவியும் வானதியும்



சம்புவராயர் மாளிகையில் குரவை கூத்து :

வத்திய தேவனும் ஆழ்வார்க்குஅடியானும்


பதுங்கி ஓடிய பாண்டியனை வீழ்த்த வரும் ஆதித்த கரிகால சோழன். (தடுப்பது நந்தினி தேவி)


பொன்னியின் செல்வன் நாவலை காமிக்ஸ் வடிவில் படிப்பது என்பது எனது கனவாக இருக்கிறது. காமிக்ஸ் ஆர்வமும் தமிழ் இலக்கிய ஆர்வமும் பெற்றவர்கள் யரேனும் முயற்சிக்கலாம். குறிப்பாக கல்கி நிறுவத்தினர் முயற்சி செய்து பார்க்கலாமே.

வேறு ஒரு கல்கியின் படைப்பு (பெயர் நினைவில்லை ) காமிக்ஸ் வடிவில் ஓவியர் வினு அவைகளால் ஏற்கனவே தரப்பட்டு இருக்கிறது. அந்த விபரங்களை வேறு ஒரு பதிவில் தரலாம் என்று இருக்கிறேன்.

குறிப்பு: பொன்னியன் செல்வன் மீதுள்ள பற்றால் ஓவியங்கள் பதிவு இடபட்டுள்ளது. உரிமையாளர் விரும்பினால் நீக்கப்படும்.

22 comments:

Rafiq Raja said...

சிவ், பொற்கால ஓவிய பாணி சித்திரங்களில் அருமையாக வெளிபடுகிறது. பொன்னியின் செல்வன் போன்ற அமர கதையை ஒரு முழு நீள சித்திரக்கதையில் பார்க்க நானும் காத்திருக்கிறேன். வருங்காலத்தில் தமிழ் பதிப்பாளர்கள் அப்படி ஒரு முயற்சிக்கு சிறந்த ஓவியரை தேர்ந்தெடுத்து பெருமை சேர்ப்பார்கள் என்று நம்புவோம்.

கிளாசிக் படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

பொன்னியின் செல்வன் எனும் கதையை அதன் ஓவியங்களுடன் பைண்டிங் செய்த பிரதியில் படிக்கும் அனுபவம் எனக்கும் கிடைத்திருக்கிறது.

பின்பு 90களில் கல்கியில் இக்கதை மீண்டும் வெளியாகிய போது அதன் சித்திரங்களை மீண்டும் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஓவியங்களை மிக நேர்தியாக வெளியிட்டிருந்தார்கள்.

பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க முயற்சித்து அதனைக் கைவிட்டு விட்டார்கள் என்றும் ஒர் செய்தி உண்டு. [கமல் நிச்சயமாக வந்தியத்தேவன் வேடத்திற்கு பொருந்த மாட்டார் என்பது என் கருத்து.]

இக்கதையை அதே தரத்துடன் சித்திர நாவல் வடிவில் கொண்டு வருவதற்கு நிறைய உழைப்பும், அர்பணிப்பும் தேவை. அதனைக் கல்கி குழுமம் கூட செய்யுமா என்பது சந்தேகமே. எதிர்காலம் பதில் சொல்லட்டும்.

ஒரே ஒர் சந்தேகம். ஓவியர் [அமரர்] மணியம் அவர்கள்தான் பொன்னியின் செல்வனிற்கு சித்திரங்கள் வரைந்ததாக நான் நினைத்திருந்தேன். எந்த ஒர் தருணத்திலும் அவர் பொன்னியின் செல்வனிற்கு கல்கி இதழில் சித்திரங்கள் வரையவில்லையா.

சித்திரங்களிற்கும் பதிவிற்கும் நன்றி நண்பரே.

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு.

காலத்தால் அழியாத எல்லா தமிழ் தலைமுறைக்கும் பிடிக்கும் கதை.

அழகான.அருமையான சித்திரங்களை மறுபடியும் காணக்கொடுத்தமைக்கு நன்றி.

Lucky Limat - லக்கி லிமட் said...

நண்பரே,
அற்புதமான பதிவு . பொன்னியின் செல்வன் ஓவியங்களை மீண்டும் பார்க்க செய்ததற்கு நன்றி. இதை நான் காலேஜ் படிக்கும் போது கல்கி புத்தகத்தில் வெளியான கதையை ஒருவர் எடுத்து பைண்டிங் செய்து வைத்திருந்தார் அதை படித்தேன் . மீண்டும் நினைவுபடுத்தியதற்கு நன்றி. பொன்னியின் செல்வனை animation ஆக எடுக்க முயற்சி செய்கிறார்கள் . அதற்கான Trailor சுட்டி இதோ
http://www.youtube.com/watch?v=ஒக்வ்ஸ௪வ்ஹ்ற்ஹ
Lovingly,
Lucky Limat
Browse Comics

Lucky Limat - லக்கி லிமட் said...

பொன்னியின் செல்வனை animation ஆக எடுக்க முயற்சி செய்கிறார்கள் . அதற்கான Trailor சுட்டி இதோ
http://www.youtube.com/watch?v=ogws4vhRhaM

Anonymous said...

hi very execellent collections.if you come across the sketches by maniyam, you could post that also, actually i was searching for those sketches

Krish said...

Excellent collection, matey. It's always a pleasure to read through an epic novel in its first printed version.

Unknown said...

FROM MURUGAN,
I HAVE NO WORDS TO EXPLAIN MY HAPPINESS SO JUST"SIMPLY SUPERB".MY FRIEND AYYAMPALAYAM HAS AT LAST JUMPED IN TO THE OCEAN OF FAMILY PLS EVERYBODY WISH HIM "HAPPY MARRIED LIFE".

Vedha said...

nice blog and different pieces.

by the way, kindly remove the word verification and let the comment section appear just below the post instead of a new window as these windows do not open in my office thus preventing me from commenting.

SIV said...

அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பொன்னியின் செல்வன் சித்திர கதையாக படிக்கும் நமது ஆசை விரைவில் நடக்கும் என நம்புவோம்.
கனவுகளின் காதலரே, கல்கியில் பொன்னியின் செல்வன் 3 அல்லது 4 முறை தொடராக வெளியிடப்பட்டு உள்ளது என எண்ணுகிறேன். இங்கு இருக்கும் படங்கள் 1960 களில் தொடராக வந்த கல்கியில் இருந்து எடுத்தவை.
ஓவியர் வினு அவர்களின் கைவண்ணம் இது. 1987 இல் வெளிவந்த கல்கியில் ஓவியர் மணியம் அவர்களின் ஓவியங்களை பார்க்கலாம்.

SIV said...

நன்பர் அய்யம்பாளையத்தாருக்கு இனிய திருமன வாழ்த்துகள்...
(அதான் அய்யாவை கொஞ்ச நாளாக இந்த பக்கமே கணோமோ)

காமிக்ஸ் காதலன் said...

நண்பரே,

உங்களின் இந்தப் பதிவை மேற்கொண்டு நானும் ஒரு முயற்சி மேற்கொண்டுள்ளேன். நானும் ஒரு பிளாக் ஆரம்பித்து இருக்கிறேன். ஒரு முறை பாருங்களேன்?

காமிக்ஸ் காதலன்
பொக்கிஷம் - நீங்கள் விரும்பிய சித்திரக் கதை பககங்கள்
யார் இந்த மரண அடி மல்லப்பா?

இளங்குமரன் said...

என்ன ஒரு அற்புதமான காதல். ஓவியங்களிலும், படக்கதையிலும். ஏதோ நாங்கள் ஓரிரு மணி நேரங்கள் செலவிட்டுப் படித்துவிட்டோம். ஆனால் அதற்கான உங்களின் உழைப்பு அர்ப்பணிப்பு அப்பப்பா அபாரம். வாழ்த்துகள். வாழ்த்துகள்.வாழ்த்துகள்.

uma said...

மிகவும் நன்றி...
கல்கி நாவல்களில் என்னை மிகவும் கவர்ந்தது "பொன்னியன் செல்வன்"
அதன் ஓவியங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி..

shristeeanimaax said...

எல்லாருக்கும் வணக்கம், நாங்கள் பொன்னியன் செல்வன் கதையை திரைபடமாகவே அல்லது தொடராகவே எடுக்க போகிறோம்.அதற்கான முதல் கட்ட வேலையை தொடங்கி இருக்கிறோம்.அதற்கான தேடலின் ஒரு பகுதியாக பல புதிய,மற்றும் பழைய புத்தகங்களில் இருந்து படங்கள் மற்றும் தகவல்களை சேகரிப்பது, இண்டெர் நெட்டில் சேகரிப்பது, போன்ற ஈடுபட்டிருக்கிறோம்.தங்கள் ஈடுபாடு இதை அனிமேஷ்னில் காண எங்களுக்கு உதவுங்கள்.உங்களிடம் உள்ள படங்கள்,மற்றும் அது தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள
எங்கள் மின்னஞ்சல் தெரியபடுத்தலாம் -shristeeanimaax@gmail.com

SIV said...

நன்றி காமிக்ஸ் காதலன், இளகுமரன், உமா, ராமகிருஷ்ணன். shristeeanimaax தங்களது முயற்சிக்கு வாழ்த்துகள்...

vadivel said...

super..super ..super.. en model poonguzahli thani picture vendum.. kedaikuma ? please

Jay said...

எங்கள் அம்மா படித்து கட்டிய புத்தகம் இப்போதும் யாழ்ப்பாணத்தில் எங்கள் வீட்டில் உள்ளது. போகும் நேரம் எல்லாம் எடுத்துப் புரட்டுவேன். வினுவின் சித்திரங்கள்தான் அந்தப் புத்தகத்திலும். மனதில் ஏதோ கிளர்ச்சி இந்தப் படங்களை மீளப் பார்க்கும் போது.

நன்றி

worshippa said...

wonderful collections....

bpcwajid said...

பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களும் என்னிடம் உள்ளன அதனை ஸ்கேன் செய்து வெளியிட்டால் எதாவது பிரச்சினை வருமா? கல்கி அவர்களின் கதைகளைப் பற்றி கவலை இல்லை ஏனெனில் அவைகள் தேசியமயமாக்கப்பற்றிருக்கின்றன.தொடர்களை ஸ்கேன் செய்யும் போதுதான் கவலையாக இருக்கிறது. இலவசமாகத்தான் வெளியிட ஆசை.
நன்றி

Anonymous said...

ponniyin selvan evlo perya anubathai kodukkum nu idha padikkira ellaarukkum nallavae theryum. Maniyam oviyangala net la paakkum bodhum nammai polavae kodi paer andha puthagathai kondaadum vishayangalum manadhukku negizhchi tharugindrana.

andha puthinaththa padamaai, animation la try pandravangalukku oru anbaana vaendugozh. adha thayavusenju niruthunga. ippo enna andha kadhaya neenga than kappatha poreengala. adhu kizhayum vaerum vittu nallaathan vaazhuthu. adhukku uyir kodukkuroem ngra perla neenga eadho oru velangatha moonjiyavum voicum kuduppeenga adha naanga paakkanum.
ponniyin selvan padicha ovvorutharum evlo oru arputhamaana oru ulagathula vaazhvaanga nu theryum ., andhya karpanai thoetrangazh ovvorutharukkum rombavum azhaga vithyaasappadum . andha azhagaana karapanai oviyangazhayum rasanayaiyum udhachidaatheenga.
thayavu senju tv layum netlayum pottu andha maaaaaaaaaaaaaaaaberum buthinathai konnudaatheenga pleeeeees,

puthgangazhilaeyae adhai vaazha vidungazh. varum thalai muraiyinarum kondaadattum..pls dont do thisssss. m n vis com graduate. i 've seen world's best movies. nothing can be compared to this great novel.pleas dont spoil this ..... a humbl request from kodana kodi vaasagarkazh.......
ungazh vyaabarathirkku poi perarasungara director ta kadhai kaelunga

Unknown said...

Bro,intha book ipo kedaikuma...yenga kedaiku