வணக்கம் நன்பர்களே, சிறிது மாதங்களுக்கு முன் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படிக்க நேர்ந்தது. அன்றில் இருந்தே தமிழ் மீதும் தமிழ் வரலாற்று மீதும் இருந்த பற்று அதிகமாகி விட்டது. முதலில் சித்திரங்கள் இல்லாத ஒரு புத்தகத்தினயே படித்து இருந்தேன். சமீபத்தில் சித்திரங்களுடன் கூடிய கல்கி பைண்டிங் புத்தகம் கிடைத்தது (முதல் பாகம் - புது வெள்ளம்). புத்தகம் கிடைத்த அன்று சில மணி நேரங்களாவது அந்த சித்திரங்களை பார்த்து கொண்டே இருந்து இருப்பேன். பொன்னியின் செல்வன் கதை படிப்பது எப்படி இனிமையோ அதே போன்று சித்திரங்களை பார்ப்பதும் இனிமையான அனுபவம். அத்தகைய சித்திரங்களை உங்களுடன் பகிர்த்து கொள்ளவே இந்த பதிவு. பொன்னியின் செல்வன் கதைக்கு பல ஓவியர்கள் படம் வரைந்து இருப்பதாக தெரிகிறது. இங்கே பார்ப்பது ஓவியர் வினு அவர்களின் சித்திர படைப்புகள்.
சில வண்ண அட்டைப்படங்கள் ...........



பழு வேட்டையரின் யானை பவனி (பல்லகில் மதுராந்தகன் )

சோழ வீதி நாடகம்,

வத்திய தேவனின் குதிரை..


சம்புவராயர் மாளிகையில் குரவை கூத்து :

வத்திய தேவனும் ஆழ்வார்க்குஅடியானும்

பதுங்கி ஓடிய பாண்டியனை வீழ்த்த வரும் ஆதித்த கரிகால சோழன். (தடுப்பது நந்தினி தேவி)

பொன்னியின் செல்வன் நாவலை காமிக்ஸ் வடிவில் படிப்பது என்பது எனது கனவாக இருக்கிறது. காமிக்ஸ் ஆர்வமும் தமிழ் இலக்கிய ஆர்வமும் பெற்றவர்கள் யரேனும் முயற்சிக்கலாம். குறிப்பாக கல்கி நிறுவத்தினர் முயற்சி செய்து பார்க்கலாமே.
வேறு ஒரு கல்கியின் படைப்பு (பெயர் நினைவில்லை ) காமிக்ஸ் வடிவில் ஓவியர் வினு அவைகளால் ஏற்கனவே தரப்பட்டு இருக்கிறது. அந்த விபரங்களை வேறு ஒரு பதிவில் தரலாம் என்று இருக்கிறேன்.
குறிப்பு: பொன்னியன் செல்வன் மீதுள்ள பற்றால் ஓவியங்கள் பதிவு இடபட்டுள்ளது. உரிமையாளர் விரும்பினால் நீக்கப்படும்.