புத்தகத்தை புரட்டி பார்த்தால் காமிக்ஸ் மாதிரி தன் இருக்கிறது . ஆனால் தனிப்பட்ட கதை அல்லாமல் வரலாற்று சம்பவங்களை காமிக்ஸ் வடிவத்தில் விவரித்து இருகிறர்கள். Rs. 75 இல் ஆருமையான art work இல் கம்பீரமாக தோற்றமளிக்கும் புத்தகத்தை உண்டனடியாக வாங்கினேன்.
அட்டை படம்.


முன்பே சொன்னது போல் கதை என்பதே இல்லாமல் ரஷ்ய புரட்சியின் கொள்கைகளையும் சில முக்கியமான் சம்பவங்களையும் சொல்லி இருக்கிறார்கள்.
முதலில் ஜார் மன்னர்களின் ஆட்சியில் மக்கள் வெறுப்புற்று தற்காலிக அரசாங்கம ஆட்சியில் அமருகிறது. தற்காலிக அரசாங்கமும் பெரும் தொழில் அதிபர்களின் கட்டுபாட்டில் இருக்கிறது. ஆகையால் மக்களும் தொழிலாளர்களும் ஒன்று கூடி புரட்சி ஏற்படுத்தி ஆட்சியை கை பற்றுகிறார்கள்.
சோசலிச கட்சி ஆட்சிக்கு வந்த பிறக்கும் அவர்களுக்கு பல வித தொல்லைகள் வருகிறது. (பகைமை நாடுகளும், ஆட்சிக்கு எதிராய் திரும்பிய தொழில் ஆதிபர்களும்). அதை அவர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் பற்றி கூறுகிறார்கள்
இந்த வரலாற்று நிகழ்வுகளை அற்புதமான ஓவியங்களில் விவரித்து இருக்கிறார்கள். ஆனால் இதழை படிக்கும் உங்களுக்கு காமியுனிச பிரசார வாடை வருவதை தவிர்க்க இயலாது. மொழிபெயர்ப்பு தரம் ok. சில இடங்களில் சுமார்தான். கீழ் காணும் படங்களை பார்த்தால் உங்களுக்கு காமிக்ஸ் feel வரும்.





இந்த விளம்பரத்தை பாருங்கள். இந்த புத்தகங்களை தேடி பார்த்தேன். இல்லை என்று கூறி விட்டார்கள். ஒருவேளை 'New century book house' அலுவலகத்தில் கிடைக்க கூடும். நண்பர்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.

பின் அட்டை

பின் குறிப்பு: சிறிது வருடங்களுக்கு முன் இதே New century book house நிறுவத்தினர் நிறைய ரஷ்ய புத்தகங்களை மொழி பெயர்த்து மலிவான விலையில் வெளிய்டுவர். அவற்றிற்கு தமிழ் சிறுவர் இலக்கியத்தில் முக்கிய இடம் உண்டு. அவற்றில் சில.......
1. வீர திருகாணியும மாய பென்சிலும்
2. மூன்று தடியர்கள்
3. அப்பா சிறுவனாக இருக்கும் பொது....